கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம்
ராமானுஜம் கணிதத்திற்காக எத்தனையோ செய்திருக்கிறார். அவரது மேதாவிலாஸத்திற்கு அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்ச்சி.
அவர் இங்கிலாந்தில் நோயுற்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார். அவரை பார்க்க, ராமானுஜத்தை இங்கிலாந்திற்கு அழைத்து வந்த இன்னொரு கணித மேதையான ஹார்டி(கம்பருக்கு சடையப்ப வள்ளல் போல் ராமனுஜத்திற்கு இவர்) வருகிறார்.
ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளியை பார்க்க போனால் நாம் என்ன செய்வோம்? நலம் விசாரிப்போம். ஹார்டி என்ன செய்த்தார் தெரியுமா, ராமானுஜத்தை பார்த்த உடனேயே, “ நான் ஒரு டாக்சியில் வந்தேன் அந்த டாக்சியின் நம்பர் 1729 , எனக்கு ஏனோ அந்த நம்பர் பிடிக்கவில்லை” என்று கூறுகிறார்! என்ன ஒரு அற்புதமான நலம் விசாரிப்பு! அத்ற்கு நாமாக இருந்தால் ,” போயா நீயும் உன் டாக்சி நம்பரும். இங்க ஊசிபோட்டு கையெல்லாம் வீங்கி கிடக்கு என்கிற ரீதியில் ஏதாவது சொல்வோம்.
ஆனால் ராமானுஜம் உடனே , உடனே என்றால் உடனே- “ ஏன் ஹார்டி அப்படி சொல்கிறீர்கள்? அது ஒரு அற்புதமான எண். It is that smallest number which can be presented in two different ways as addition of two cubes : ( 10 to-the-power 3 + 9 to-the-power 3 ) and ( 12 to-the-power 3 + 1 to-the-power 3 ).” என்று கூறினாராம்.
ராமானுஜம் 33 வருடங்களே இவ்வுலகில் வாழ்ந்தார், அவர் கணிததிற்கு செய்திருப்பது ஏராளம். theory of numbers, theory of division ( partition ) and the theory of continuous fractions, இன்னும் பல சூத்திர்ங்களை நமக்கு அளித்துள்ளார். அவர் விட்டு சென்ற குறிப்புகளை இன்றும் ஆராய்சி செய்கிறார்களாம்.