Home » படித்ததில் பிடித்தது » சுற்றுப்புறசூழல் பொன்மொழிகள்
சுற்றுப்புறசூழல் பொன்மொழிகள்

சுற்றுப்புறசூழல் பொன்மொழிகள்

* வனவளம் காத்து கனிம வளம் பெருக்குவோம்!

* வானுயர்ந்த மேகங்கள் வா வென்று அழைத்தால்தான் சூல் கொண்ட மேகங்கள் சுற்றி நின்று மழை பொழியும்!

* வீட்டை சுற்றி நாம் நட்டு வைத்த மரம் ;சுற்றி வரும் தூசிகளை தடுத்திடுமே நிதம்!

* மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, மண் அரிப்பு குறைந்து விடும்!

* மரங்கள் இல்லாத பூமி! மனிதன் வாழ முடியாது சாமி!

* இயற்கை மரங்களின் வழியாகத்தான் சுவாசிக்கிறது! மரங்கள் அழிந்திட இயற்கை அழிந்திடும்!

* காற்றில் நஞ்சை கலக்காதே! கால தேவனை அழைக்காதே!

* வனங்கள் ஒரு பூமியின் நெற்றி திலகம்! பூமியை விதவையாக்காதீர்!

* பசுமை பூமியை விட்டு வெளியேறும் போது பஞ்சம் அங்கே மெல்ல நுழைகிறது!

* வாருங்கள் ஓசோன் ஓட்டையை வானுயர்ந்த மரங்களால் அடைத்திடுவோம்!

* பெற்ற அன்னை ஊட்டுவது பாசம்! இயற்கை அன்னை ஊட்டுவது சுவாசம்!

* விண்ணோக்கி மரம் உயர்ந்து நிற்க ,மண் நோக்கி மழை பொழிவு உயரும்!

* நல்ல மரங்களை கொன்றுதான் செய்தி தாள்கள் வருகின்றன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top