Home » உடல் நலக் குறிப்புகள் » கடுகு எண்ணெய்…
கடுகு எண்ணெய்…

கடுகு எண்ணெய்…

மருத்துவ குணங்கள்:-

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உயர்தர சத்துக்களும்,

தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்ஸின் போன்றவை நச்சுத்தன்மையை நீக்குகிறது.

விஷத்தை கட்டுப்படுத்தும்

தற்கொலை எண்ணத்தோடு விஷம், பூச்சிமருந்து, அருந்தியவர்களுக்கு இரண்டுகிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும்.இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.

ஜீரணம் ஏற்படும்

கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.

மூட்டுவலி நீங்கும்

அடிபட்டு ரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட ரத்தக்கட்டு மறையும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.

ஆஸ்துமா, தலைவலி நீங்கும்

தேனில் கடுகை அரைத்து கொடுக்க ஆஸ்துமா, கபம் குணமடையும். கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக்

காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்

ரத்த அழுத்தம் கட்டுப்படும்

கடுகில் உள்ள பி-காம்ளக்ஸ் வைட்டமின் போலேட்ஸ், நியாசின், தையாமின், ரிபோப்ளோவின், வைட்டமின் பி – 6 போன்றவை அதிகம் காணப்படுகின்றன. கடுகில் உள்ள ப்ளேவனாய்டுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top