Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » ஒரு நகரத்தின் கதை – 7
ஒரு நகரத்தின் கதை – 7

ஒரு நகரத்தின் கதை – 7

மனைவி இறந்த சோகத்தில் மூழ்கி இருந்த ராஃபிள்ஸ் மெல்ல தன் பழைய நிலைக்குத் திரும்பினார். மனதில் புது உற்சாகத்துடன், உடலும் தேறியவுடன் இந்தோனேசிய நாட்டில் தன் முழுக் கவனத்தைச் செலுத்தினார். புட்டென்சோர்க் நகரத்தின் அருகிலுள்ள கிட்டத்தட்ட 7,000 அடி உயரமுள்ள குனாங்க் கெடே சிகரத்திற்குத் தன் நண்பர்களுடன் மலையேறினார். முதன் முதலில்  சிகரத்தின் உயரத்தை அளவிட முயன்று வெற்றி அடைந்தார். இந்தச் சிகரத்தின் உயரத்தை அளந்த வெற்றி இன்னும் மேலும் பல வெற்றிகளை அடைய வழி வகுத்தது.

இந்தக் காலகட்டத்தில் அவர் கண்டுபடிப்புகளில் மகத்தான ஒன்று போரோபுதூர் புத்தர் கோவில். மத்திய ஜாவாவில் அவர் பழைய பொருட்களைச் சேகரிப்பதற்காகச் சென்றபோது செமராங் என்ற ஊரின் அருகில் காட்டுக்கு உள்ளே ஒரு பெரிய புத்தர் கோவில் இருக்கிறது என்று உள்ளூர் மக்கள் சொல்வதைக் கேட்டார். ஆனால் அங்கே யாரும் போவதில்லை. அது எரிமலைகள் வெடிப்பின் சாம்பலினால் மூடப்பட்டு பாழடைந்து கிடக்கிறது. அங்கே செல்வதற்கு வழி கிடையாது.

காடுகளால் மறைக்கப்பட்டு  நாளாவட்டத்தில் மறக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்தார். உடனே அங்கே செல்வதற்கு முடியாது. ஆனால் அங்கே ஒரு அரிய விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்த ராஃபிள்ஸ் கார்னிலியஸ் என்ற டச்சு நாட்டுப் பொறியியலாளரை அந்த இடத்திற்கு அனுப்பினார். அவர் புத்த விஹாரத்தைச் சுற்றி  இருந்த காட்டை அழித்து சுத்தப்படுத்தினார்.

உள்ளே அவர் கண்ட புத்தர் கோவில் பின்னாளில் உலகத்திலுள்ள அனைத்து மக்களும் இந்தோனேசியாவில் சுற்றிப் பார்க்க விரும்பும் ஒரு இடமாக இருக்கக்கூடும் என்பதை அறியவில்லை. ஆனால் அந்த புத்த விஹாரத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் இப்படிப்பட்ட ஒரு கோவில், கட்டிடக் கலையின் ஒரு அற்புதக் காட்சியாக விளங்கும் ஒரு இடம் ஏன் அந்த நாட்டினரால் மறக்கடிக்கப்பட்டு, மறைக்கப்பட்டிருந்தது  என்ற அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் எழுந்தது.

அதற்கு சில பல காரணங்கள் இருந்தன. , இந்தோனேசியாவில் அரசியலும், மத நம்பிக்கையும் பின்னிப் பிணைந்திருந்தது என்பது முதல் காரணம்.

புத்த மதம் வெகுவாகப் பரவியிருந்தகாலகட்டத்தில் கி.பி. 760 ஆண்டிருந்துகி.பி 820 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்டகாலத்தில் கி.பி 800 ஆம் ஆண்டுபோரோபுதூர் புத்த விஹாரம்கட்டப்பட்டு இருக்கலாம். அப்போதுஆட்சி செய்து கொண்டிருந்தசைலேந்திரா வம்சத்தினர் இந்துசமயத்தைச் சேர்ந்தவர்கள்.ஆனால் புத்த சமயத்தின் மீதும்பெரும் பற்றுக் கொண்டிருந்தனர்.அதே காலகட்டத்தில் அவர்கள்அதிக அளவில் சிவன் கோவில்களும்கட்டினர்.

இதைக் கொண்டு அம்மன்னர்கள்எப்படி இரண்டு மதங்களையும்மதித்தனர் என்பதை உணர முடிகிறது.எனவே இரண்டு சமயங்களிலும்பெரும் மதிப்பும் நம்பிக்கையும்வைத்திருந்த. ஸ்ரீவிஜயா ஆட்சிக்குப்பிறகு ஆண்ட மன்னர்களும் இந்துக்களாகசைவ சமயத்தைச் சார்ந்து, அதேபோல் புத்த மதத்தையும் மதித்தனர்.ஆனால் இந்த நிலை இரண்டு மூன்றுநூற்றாண்டுகளுக்குப் பிறகு தொடரவில்லை. பின்னர் ஆண்ட மன்னர்கள்இந்துக்களாக மட்டும் வாழ்ந்தனர்.

அந்த சமயத்தில் புத்தர் கோவில்கள்கவனிப்பாரற்றுப் பாழடைந்துபோயிருக்கலாம். மேலும் போரோபுதூர்புத்தர் கோவிலுக்குச் சென்றால்அவர்களுக்கு அது கெட்ட சகுனமாகஅமையும் என்ற மூட நம்பிக்கை பரவியது. இறுதியாக புத்த மதம், இந்து மதம் இந்த இரண்டுமே மறைந்துஇஸ்லாம் சமயம் இந்தோனேசியாவில்பரவியது. இதற்கு மேலும் இயற்கையினால்வேறு போரோபுதூர் புத்தர் கோவில்மறைக்கப்பட்டிந்தது.

போரோபுதூர்புத்த விஹாரம் இரண்டு எரிமலைகளுக்குஇடையில் அமைந்திருந்தது.  ஆகையால் எரிமலைகளின் சீற்றத்தினால்எழும்பிய சாம்பல் புத்த விஹாரத்தைமறைத்திருந்தது. இப்படிப்பட்ட காரணங்களால் உலகத்தார் பார்வையிலிருந்துமறைந்திருந்த ஒரு பொக்கிஷம்ராஃபிள்ஸ் என்ற ஆங்கிலேயரால்கண்டெடுக்கப்பட்டது.

ராஃபிள்ஸ்போரோபுதூர் என்ற ஒரு புத்தர்கோவில் கண்டுபிடிக்கப்பட்டதுஎன்ற அளவில் மட்டும் அதைப்பற்றிக் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்.பின்னாளில் கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் ஆன பின்னர்தான் இந்தோனேசியாவில்அதிக அளவில் சுற்றுப் பயணிகளைக்கவர்ந்திழுக்கும் மரபுச்  சின்னமாக இருக்கிறது என்பதும்இதைக் கண்டுபிடித்து அதை மீட்கும்பணிக்கு வித்திட்ட ராஃபிள்ஸுக்குக்கூட போரோபுதூரின் தொன்மையும், மரபும் தெரியாமல் இருந்தது.

ராஃபிள்ஸின் கதைக்கு மீண்டும்வருவோம்.

வாட்டர்லூ போரில் நெப்போலியன்படைகள் தோற்கடிக்கப்பட்டதும், ஜாவாவை டச்சு அரசாங்கத்திடம்ஒப்படைக்க ஆணை வந்தது. எனவேஜாவா ஆங்கிலேயர்கள் வசம் இனிஇருக்காது என்பது புரிந்தது.இனி ராஃபிள்ஸ் எந்தப் பதவியில், எந்த அதிகாரத்துடன் ஜாவாவில்தன் வேலையைத் தொடர வேண்டும்என்ற குழப்பத்தில் இருந்தார்.

1816 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராஃபிள்ஸுக்குப் புதிய ஆண்டின் துவக்கம் இனிமையாக அமையவில்லை. ராஃபிள்ஸின் மீது கில்லஸ்பி சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது. ராஃபிள்ஸின் நேர்மையற்ற செயலை மன்னித்தது போல் எழுதப்பட்டிருந்தாலும் அவரைக்  குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விலக்காமல் சந்தேகக் கண்களுடன் பார்த்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த நீதிமன்றக் குழுவினர் ராஃபிள்ஸை முழுமையாக நம்பாமலும் அதே சமயம் அவரை கம்பெனியை விட்டு விலக்கி விடாமல் ஒரு புதிய வேலையை உருவாக்கிக் கொடுத்தது. ஆங்கிலேயரால் கிட்டத்தட்ட பாதி மறந்த நிலையில் இருந்த பென்கூலன் துறைமுகத்திற்கு அரசாங்கப்  பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

ஜாவாவின் தென் மேற்கில் இருக்கும் பென்கூலன் துறைமுக நகரத்திற்குச் சென்று பொறுப்பெடுத்துக் கொள்வதற்கு முன்னால் அவர் இங்கிலாந்து சென்று சிறிது காலம் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்பினார். மீண்டும் மனதளவில் தோல்வி அடைந்தவராக, உடல் நலமும் கெட்டு ஜாவாவை விட்டு இங்கிலாந்துக்குத் திரும்பினார்.

1816 ஆம் ஆண்டு மார்ச் மாதம், பதினோரு ஆண்டுகளுக்கு முன்னால் பினாங்குக்கு வந்த அதே காஞ்சஸ் கப்பலில் மீண்டும் பயணம்.  தன் உடல் தேறி பழைய உற்சாகத்துடன் திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையுடன் அவர் பயணம் தொடங்கியது.

துறைமுகத்தில் அவரை வழியனுப்ப வந்த ஆங்கில அதிகாரிகள், டச்சுக்காரர்கள், அடிமைத் தளையிலிருந்து ராஃபிள்ஸால் விடுவிக்கப்பட்ட ஜாவா இன மக்கள் என்று பலதரப்பட்ட மக்கள் கண்ணீருடன், வாழ்த்துக்களுடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.

கப்பலின் கீழ் தளத்தில் ராஃபிள்ஸின் அறிவியல் மற்றும் உயிரியல் சேகரிப்புகள், கிட்டத்தட்ட 70 டன் சேகரிப்புகள் இவற்றால் நிரப்பப்பட்டு இருந்தது. ஐந்து மாதப் பயணத்திற்குப் பிறகு இங்கிலாந்துக்குச் சென்றடைந்தது. 16 மாதங்கள் தொடர்ந்த அவரது விடுமுறைக் காலம் அவர் உடல் ஆரோக்கியம் முன்னேற்றமடைய பெரிதும் உதவியது.

செல்டஹாம் என்ற ஆரோக்கிய நீருற்று அமைந்த இடத்தில் தங்கிய அவர் உடல் நலமும் முன்னேற, கூடவே சோஃபியா என்ற அழகியப் பெண்மணியின் நட்பினால் மனமும் பழைய உற்சாகத்தைப் பெற்றது.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தஹல் குடும்பத்தினருடன் பழகத்தொடங்கியதும் அவர்களது திருமணமாகாதமகள் சோஃபியா அவரது கவனத்தைக்கவர்ந்தாள். ராஃபிள்ஸும் தன்னைச்சுற்றி பெரிய வேலைக்காரப்பரிவாரங்களை வைத்துக் கொண்டும்தனது ஆசியப் பயணத்தால் பெற்றபலதரப்பட்டஅனுபவங்களாலும்ஒரு மதிப்பு மிக்க கனவானாகக்காட்சியளித்தார்.

இவற்றால்சோஃபியாவைக் கவர்ந்தார். ஆனால்அந்தக்  காலகட்டத்தில் அவர் தன்னைப்பற்றிக் குறிப்பிட்டபோதுதன் உண்மையான உடல் நிலையை ‘வெளிறியகண்களுடன்,  நோய்வாய்ப்பட்டநிலையில் ஒல்லியான உடலுடன், குச்சியான கால்களுடன்’ இருந்ததாகக்குறிப்பிட்டிருந்தார். இவற்றையெல்லாம்மீறி சோஃபியா ராஃபிள்ஸுடன்பழகத் தொடங்கினாள். ஏழு மாதங்களுக்குப்பிறகு அவர்கள் திருமணம் நடைபெற்றது.

இங்கிலாந்தில் 30 வயதான சோஃபியாவைஇரண்டாம் திருமணம் செய்துகொண்டது மட்டும் அவர் மகிழ்ச்சிக்குக்காரணம் இல்லை. லண்டன் சென்றபோது சமூகமும், அறிவியல் உலகமும்அவரை அங்கீகரித்து அவருக்குப் பல வெற்றிகளைக் கொடுத்துப்பெருமைஅளித்தது. அவை…….

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top