Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கறுப்பு வரலாறு – 26

கறுப்பு வரலாறு – 26

காலையில் எழுந்தவுடன் ரவி தன்னுடைய ஆராய்ச்சியை உணவுடன் மற்றுவர்களுடன் பகிர்ந்துக் கொண்டான்.

சார் இந்த புத்தகம் சுமார் 7 பேர்கிட்ட மாத்தி மாத்தி போயிருக்கு. மத்த பேர்கிட்டெல்லாம் ஒரு தடவைதான் போயிருக்கு. அதனால நாம முதல்ல இந்த 7 பேரு யாருன்னு தேடனும். யாரு இந்த 7 பேருன்னு தெரியாது. ஏன்னா அவர்களுடைய உறுப்பினர் எண்கள் மட்டும் தான் இதுல இருக்கு.

முதல் புத்தகம் 1976ல் தான் வெளியிட்டிருக்காங்க. என்னுடயை கணிப்பு சரியா இருந்ததுன்னா 1990க்கு அப்புறம் தான் கணினி மூலம் புத்தகம் வெளியிடு செய்வது வழக்கத்திற்கு வந்திருக்கு. ஆக இது எழுத்து கோர்த்து அச்சு செய்யும் பழைய முறை. டெலிபோன் டைரக்டரியில் பார்த்துட்டேன். இந்த பப்ளிஷிங்க கம்பெனி இப்ப இல்லை.

இந்த புத்தகங்களை சுமார் 4 வருஷமா தான் இந்த 7 உறுப்பினர்களும் மாற்றி மாற்றி எடுத்திருக்காங்க. அதுக்கு முன்னாடி அங்கொன்னும் இங்கொன்னுமா தான் இந்த புத்தகங்கள் வெளியே போயிருக்கு. ஆக இந்த ஆராய்ச்சியில் கடந்த நாலு வருஷமா தான் ஆர்வம் அதிகமாயிருக்கு.

அப்ப நாலு வருஷத்துக் முன்னாடி ஏதோ முக்கியமானது ஒன்னு நடந்திருக்கனும்.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் சொல்றேன். இந்த மூன்று புத்தகங்களிலும் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கு. முதல் புக்குல 17,18,19, 20 மிஸ்ஸிங். இரண்டாவது புக்குல 13, 14, 15, 16 காணோம். மூன்றாவது புத்தகத்தில மறுபடியும் 13,14,15,16 காணோம். அதோட உள்ளடக்கம் பக்கமும் காணோம். இந்த மூன்று புத்தகங்களும் ஒரு நிறுவனத்தால வெளியிடப்பட்டிருக்கு. முதல் புத்தகத்தை எழுதியவர் ரெயின் ஸ்டுவர்ட். அதை மொழியாக்கம் செய்தது க. கதிரவன். பாக்கி இரண்டு புத்தகங்களையும் எழுதியதும் க. கதிரவன் தான். இந்த எந்த புத்தகமுமே மறு வெளியீடு செய்யப்படலை அப்படிங்கறது என்னோட யூகம்.

இப்ப நாம கண்டுபிடிக்க வேண்டியது

1. யாரு ரெயின் ஸ்டுவர்ட், எங்கே இருக்காரு
2. யாரு க. கதிரவன், எங்கே இருக்காரு
3. இந்த பதிப்பகம் கலை பதிப்பகம் நடத்தினது யாரு, எங்க இருக்கு, இப்ப எந்த பேருல இருக்கு
4. இந்த 7 உறுப்பினர்கள் யாரு, எங்கே இருக்காங்க, இன்னும் இந்த ஆராய்ச்சி செய்றாங்களா இல்லையா
5. எல்லாமே இந்த நால வருஷம் தான் இந்த ஆராய்ச்சியில ஆர்வம் இருக்கற மாதிரி இருக்கு. அப்படின்னா சந்திரசேகர் தம்பிரானை 30 வருஷத்துக் முன்னாடி இந்த ஆராய்ச்சியை ஏன் தடுக்கனும். ஞானப்ராகசத்தை ஏன் ஆளை வச்சி அடிச்சி இந்த ஆராய்ச்சியை தொடரவிடாம பண்ணனும்.
6. அப்படி இவரே எல்லாரையும் ஆராயச்சி செய்விடாம பண்ணிட்டு நம்மை மட்டும் மறுபடியும் ஏன் ஆராய்ச்சி செய்ய ஊக்குவிக்கனும்.
7. கரிகாலன் தான் சங்கரை கொன்னாருன்னு வச்சிக்கிட்டா கூட அவருக்கு பின்னாடி யாரு இருக்காங்க. ஒரு ஆளா, இல்லை ஒரு அரசாங்கமா.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மனதில் பல கேள்விகள்.

சவிதா முந்திக் கொண்டாள்.

ரவி, ஏன் அநாவசியமா பக்கங்களை கிழிக்கனும். புத்தகத்தையே தொலைச்சிருக்கலாமே.

நீ சொல்றது சரிதான். பக்கங்களை கிழிச்சதனால முக்கியமான விஷயங்களை யாருக்கும் தெரியாம பண்ணியாச்சு. அந்த புத்தகங்களை விட்டு வச்சிருக்கறதால யாரு யாரு அந்த புத்தகம் தேடி வராங்கன்னு ஒரு ட்ராக் வைக்கறதுக்காக தான்.

ஓ அப்படியா. சரி நேரா போய் இன்னொரு புத்தகம் வாங்கலாமே.

நானும் அது யோசிச்சேன். ஒன்னு இந்த வேலைக்கு தடை செய்யறவங்க எல்லா புத்தகங்களையும் வாங்கியிருக்கனும். அப்படி இல்லைன்னா இந்த புத்தகத்தை எழுதியவரு இந்த பதிப்பகத்தை தவிர வேறே எங்கேயும் கொடுத்திருக்க முடியாம போயிருக்கலாம். இல்லை அந்த காலத்தில இப்ப இருக்கற மாதிரி ஆயிரக்கணக்கான பிரதிகள் அடிக்காமல் இருந்திருக்கலாம். பொது மக்கள் வாங்கிப்போயின பிரதிகளை தேடி தேடி திரும்பி எடுக்கறது கொஞ்சம் சிரமமான காரியம் தான்.

ஒரே குழப்பமா இருக்கு. ரொம்ப த்ரில்லிங்காவும் இருக்கு என்றாள் நீலா.

அதுவரை அமைதியாக இருந்த ரகு சட்டென்று ஒன்று சொன்னான்.

ரவி, அந்த புத்தகங்கள் அங்கே வெச்சிட்டு, பக்கங்களை கிழித்து, யாரு வர்றாங்க அப்படின்னு டிராக் பண்ண முடிவு செஞ்சவங்க, கட்டாயம் லைப்ரரி காரனை விலைக்கு வாங்கியிருப்பாங்க. சுலபமா கிடைக்க வேண்டிய புத்தகத்தை வேண்டும்னு நேரம் கடத்தி வெச்சிருக்காங்க. அப்படின்னா இந்த தகவல் நம்மை கண்காணிப்பவர்களுக்கு போயிருக்கும். இப்ப நாம்ப ஜாக்கிரதையா இருக்கனும். நாம போய் லைப்ரரி உறுப்பினர் பட்டியலை கேட்டா கொடுக்க மாட்டாங்க. நாம உடனடியா சில காரியம் பண்ணனும்.

சொல்லு என்ன பண்ணலாம்.

உடனே நாம ஓட்டலை காலி பண்ணனும். ஒரு 15 கிலோமீட்டர் வண்டியில சுத்திட்டு வேற ஓட்டல்ல ரூம் எடுக்கனும். அதுக்குள்ள நம்மளை யார் தொடர்ந்து வர்றங்கன்னு கண்டு பிடிக்கனும். ரமேஷ் கிட்டே பேசுவோம். போலீஸ் கிட்ட போகவேண்டாம். நீலா, சவிதா, நீங்க ரெண்டு பேரும் லைப்ரரிக்கு போய் எப்படியாவது மெம்பர்ஸ் ரிஜிஸ்டரை திருடிக்கிட்டு வரனும். கொஞ்ச ரிஸ்க் தான். ரவி உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பான். நீலா, சவிதா நீங்க ரெண்டு பேரும் கம்ப்ளீட்டா கெட்டப் மாத்திக்கிட்டு போங்க. ரவி, நீயும் வேஷ்டி சட்டைக்கு மாறிடு என்றான். இன்று ரகு இன் சார்ஜ்.

அதுவரை முழுவதையும் கேட்டுக் கொண்டிருந்த பழனியப்பன், நான் வேணா நேரடியா சந்திரசேகர்கிட்டே பேசட்டுமா என்றார்.

வேண்டாம் சார். இதுவரைக்கும் இது ஒரு வரலாறு ஆராய்ச்சின்னு மட்டும்தான் நினைச்சேன். இல்லை. இது துப்பறியும் நாவல். இந்த நாவல்ல நாம் தான் டிடெக்டிவ்ஸ். இது ஒரு சாலென்ஜிங்க அசைன்மென்ட் என்றான் ரவி உற்சாகமாக.

என்னமோ பண்ணுங்க. யாரோட உயிருக்கும் ஆபத்து வரக்கூடாது. ரவி, எனக்கு அந்த புத்தகங்கள் கொடுத்தீன்னா நானும் படிக்க ஆரம்பிச்சுடுவேன்.

சரி என்று சொல்லவிட்டு வேலை இறங்கியது இந்த இளைஞர் கூட்டம்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top