கொழும்பு விமான நிலையத்தில் அரை மணி நேரம் நின்ற ப்ரிடீஷ் ஏர்வேஸ் விமானம் லண்டன் ஹீத்ரூ விமான நிலையம் நோக்கி விடாமல் 10 மணி நேரம் சென்றது.
ரமேஷ் ஜெயாவிடம் விமானத்தில் எதுவும் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டான். சாதரணமாக ஊரை சுற்ற செல்லும் சுற்றுலா பயணிகள் போல் இருப்போம் என்று சொல்லிவிட்டான்.
அவர்களும் பொதுவான பல விஷயங்களை பேசிவிட்டு உறங்கினர். சுமார் 10 மணி காலையில் ஹீத்ரூ சென்றடைந்தனர். ஒரு டாக்ஸி அமர்த்திக் கொண்டு ஓட்டல் ரெஸிடென்ஸி சென்றடைந்தனர்.
அதிகம் நேரம் செலவிட விரும்பாத ரமேஷ் தொலைபேசி அலுவலகத்தில் கொடுத்த கற்றை காகிதங்களை அதிகம் பார்வையிடாமல் சந்திரசேகர் அழைத்த எண் என்ன என்பதை பார்த்தான்.
அந்த லண்டன் எண்ணின் முகவரி லண்டன் பிரிட்ஜ் எனும் இடத்தில் இருந்தது. அதற்கு அதிகம் அருகாமையில் அதே நேரம் நினைத்தால் போகவேண்டிய தூரத்தில் ரெஸிடென்ஸி இருந்ததால் அதை எடுத்து தங்க முடிவ செய்தான்.
முதல் நாள் நன்றாக உறங்கி விட்டு மறு நாளே வேலை துவங்க முடிவ செய்தான். நவம்பர் மாதம். இருட்டத் துவங்கியிருந்த்து. குளிரத்துவங்கியிருந்தது. இருவரும் நீளமான கம்பளி ஆடையை அணிந்துக் கொண்டு நடக்கத் துவங்கினர்.
ஜெயா களப்பிறர் அப்படிங்கறவங்க ஜமீன்தார்களால் அடிமைபடுத்தப்பட்ட மக்கள் என்றும் அவர்கள் ஜமீன்தார்களை எதிர்த்து போர் கொடி தூக்கினார்கள் என்றும் சொல்றாங்களே. அதுமட்டுமில்லாம அது பொற்காலம் என்றும் மேல் ஜாதியினர் தான் அதை இருண்ட காலம் அப்படின்னு சொல்றாங்களே.
அது மட்டுமில்ல ரமேஷ், நான் படிச்சதுல, களப்பிரர் தென் இந்தியாவை ஆண்ட அரசாளர்கள் அப்படின்னு சொல்றாங்க. களப்பாளர் அப்படின்னு இன்னொரு பேரு இவங்களுக்கு. 300 – 600 A.D காலத்தில இருந்திருக்காங்க.
புத்திஸம், ஜெயினஸம் மதங்கள் பரவலாக இருந்திருக்கு அந்த காலத்தில. இவங்க யூஸ் பண்ண லாங்வேஜ் பாளி. நம்ம சிட்டிசன் படத்தில ஒரு கிராமத்தையே வரைபடத்திலேர்ந்து எடுத்த மாதிரி இவங்களுக்கு அப்புறம் ஆட்சிக்கு வந்தவங்க இந்து மதமோ சைவ மதமோ இவங்களை பத்தின எல்லா விஷயத்தையும் கவர்-அப் பண்ணிட்டாங்க.
இவங்க எங்கேர்ந்து வந்தாங்க, யாரை தோற்கடிச்சு தமிழ் நாட்டுக்குள் நுழைந்தாங்க, இப்படி ஒரு விவரமும் யாருக்கும் தெரியலை.
களவர் தான் களப்பாளர், களப்பாளர் தான் களப்பிறர் அப்படிங்கறாங்க. இன்னும் சில புத்தகங்கள் க ள பி ர ர் அப்படின்னு ஸ்பெல் பண்ணியிருக்காங்க. ரொம்ப குழப்பமாகவே இருக்கு.
சில பேரு முத்தரையர் குலத்துடன் களப்பிறரை இணைக்கிறாங்க. சில பேர் அவங்க கர்நாடகத்தை சேர்ந்தவங்களா இருக்கலாம்னு சொல்றாங்க.
ஹோ ஹோ. பைத்தியம் பிடிச்சிரும் போலிருக்கே. நாம களப்பிறர் திருடர்கள் அப்படின்ற ரூட்ல போறதா இல்லை அரசர்கள் அப்படிங்கற ரூட்ல போறதா குளிருக்கு இதமாக அவளுடைய கைகளுக்குள் கைவிட்டுக் கொண்டபடியே கேட்டான் ரமேஷ்.
ரமேஷ், இப்ப நாம ஏன் நம்ம ஊர் பேரை சென்னை-னு மாத்தினோம்.
ஏன்னா அது ஆங்கிலேயர்கள் வெச்ச பேரு. அது அவமான சின்னம்.
சரி. இன்னும் 50 வருஷத்துக்கப்புறம் யாருக்காவது மெட்ராஸ் அப்படின்னு சொன்னா தெரியுமா.
தெரியாது.
ஆக நாம வரலாற்றை மாத்த முயற்சிக்கிறோம் இல்லையா.
ஆமாம்.
இப்ப ஆப்கானிஸ்தான்ல தாலிபான் ஆட்சி செஞ்ச ஆட்சியைப் பத்தி சொல்ல என்ன இருக்கு. அதனால ஒரு வரலாறும் எழுத வேண்டியதில்லை. அதுபோல ஒரு கெட்ட ஆட்சியாக இருந்திருக்கலாம் இல்லையா.
அது சரி, ஆனா, அவங்க கொடுங்கோல் ஆட்சி புரிஞ்சாங்கன்னாவது ஒரு கெட்ட வரலாறு எழுதனும் இல்லையா.
சரி இதெல்லாம் இல்லாம மஹாபாரதத்துக்கு பிறகு தான் களப்பிறர் ஆட்சின்னு எடுத்துக்கிட்டா நாம ஆராய்ச்சி பண்ணவே தேவை இல்லை.
இல்லை ரமேஷ் எனக்கு என்னமோ பல்லவர்களுக்கு முன்னாடி தான் இருக்கனும்னு தோனுது. பல்லவர்கள் கட்டிய கோவில்கள் இருக்கு இன்னும். ஆக அதுக்கு முன்னாடி இருந்ததா இருக்கலாம்.
ஆனா ஜெயா நான் என்ன நினைக்கிறேன்னா இது 300-400 வருஷம் எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. இத்தனை பெரிய நேரத்தை இருட்டடிப்பு செய்யறது சுலபம் இல்லை. ஆக, இது மிஞ்சிப் போன 50 வருஷம் இருக்கலாம்.
இப்ப நாம சென்னை, மும்பையின்னு மாத்திர மாதிரி 50 வருஷ ஆட்சியை அதற்கான சரித்திரத்தை அழிப்பது சுலபம். நம்மையே எடுத்துக்கோயேன் ஒரு தாஜ் மஹாலையோ பார்லிமென்ட் ஹவுசையோ இடிச்சு தள்ள முடியுமா.
முடியாது ரமேஷ். இந்தியா சாகிற வரைக்கும் முகமதியரும் ஆங்கிலேயரும் போர்ச்சுகீஸியரும் பிரென்ச்சுக்கார்ரும் நம்மை ஆண்ட அவமானம் எப்போதுமே இருக்கும். ஏன்னா நாம இந்தியா, அதனால. இதே ஒரு சதாம் ஹூசேன் இருந்தா…… இந்தியாவை ஒரு வருஷத்துல அவமான சின்னங்கள் இல்லாத ஒரு நாடா ஆக்கிடுவான். ஹிட்லர் இருந்தா வரலாறுகளை கொளுத்தி, வரலாற்று ஆசிரியர்களை கொன்று, இருப்பவர்களை வைத்து ஒரு புதிய வரலாற்றை எழுதியிருப்பான். அதுல 5000 வருஷமா ஒருத்தனே ஆண்டதாகவும் அவனை மக்கள் எல்லாம் விரும்பியதாகவும் எழுதியிருப்பான்.
ஆம் ஜெயா. நாம் தாஜ் மஹாலை இடிக்கவில்லை. பார்லிமென்ட் ஹவுசை இடிக்கவில்லை. நாம் வரலாற்றை மறக்கவில்லை. நேற்றைய முட்டாள் இன்று புத்திசாலிகளாக ஆகலாம். நேற்றைய கோழைகள் இன்று வீரர்களாக ஆகலாம். வரலாற்றை மாற்ற நினைப்பவன் தான் பிறந்ததே தப்புன்னு சொல்லிட்டு மறுபடியும் அம்மாவின் வயிற்றில் நுழைய நினைப்பது போல். நான் இந்தியனாக இருப்பதில் பெருமை படுகிறேன். இன்றைய இந்தியன். நாளை உலகை ஆளப்போகும் இந்தியன். ஐயாம் ப்ரவூட் டூ பி அன் இன்டியன் என்றான் அவளை அணைத்து கட்டியபடியே.
டெலிபோன் கார்டுகள் விற்றுக் கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவன், சார், ஐயாம் டூ ப்ரவுட் அபௌட் பீயிங் அன் இன்டியன் என்றான்.
அவனை பார்த்து சிரித்தப் படியே ஓட்டலுக்கு திரும்பி நடந்தனர் இருவரும்.
தொடரும்…