தஞ்சையில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் வந்து தங்கினான். ரகுவை தனியாக பிடித்து விவரங்களை அறிந்துக் கொண்டான். ரவியை தனியாக சந்தித்து பேசினான். ரவியிடம் கரிகாலனை கண்காணிக்கும் பணியில் அமர்த்தினான். உணவகத்தில் தனியாக சவிதாவைப்பிடித்தான். அவளிடமும் பேசினான். நீலாவை லிப்டில் பிடித்து அவன் அறைக்கு அழைத்துச் சென்று பேசினான்.
பழனியப்பனிடமும் கரிகாலனிடமும் பேசவில்லை. அவன் வந்த்து அவர்கள் இருவருக்கும் தெரிய வேண்டாம் என்று சொன்னான். இருவரையுமே சந்தேகிப்பதாகவும் இருவருக்கும் நான் இங்கிருக்கும் விவரம் தெரியக் கூடாது என்றும் கூறினான். அவர்கள் நால்வரையுடை பாதுகாப்பும் தஞ்சை போலீஸ் பார்த்துக் கொள்ளும் என்றும் கூறினான்.
மேலும் அன்றிரவு எப்படியாவது கரிகாலனுடைய டாட்டா சுமாவை வெளியே எடுத்து வரும்படி ரகுவிடம் கூறினான்.
இரவு 12 மணிக்கு கரிகாலன் தூங்குவதை உறுதி செய்துக் கொண்டு கீழே வரவேற்பறைக்கு வந்தான் ரகு. வரவேற்ப்பில் பார்க்கிங் குறைவாக இருப்பதால் அனைத்து விருந்தினர்களும் வண்டி சாவியை கொடுத்திருக்க வேண்டும். ரகுவை பார்த்து பரிச்சயத்துடன் அவர் வண்டி சாவியை எடுத்து தந்தார். ரகு அவரிடம், சும்மா ஊரை சுத்தப்போறேன். கரிகாலன் சார் தெரிந்தால் திட்டுவார் என்று கண்ணடித்தான்.
சரி சார். சொல்லமாட்டேன் என்றார் வரவேற்பறையில் இருந்தவர்.
வண்டியை எடுத்து ஓட்டிய 15 நிமிடத்தில் சாலையில் ரமேஷை பார்த்து ஏற்றிக் கொண்டான். வண்டியில் ஏறிய ரமேஷ் இடது வலது என்று சொல்லிக் கொண்டே வந்தவன் யாரும் இல்லாது ஒரு சாலையில் வண்டியை நிறுத்தச் சொன்னான்.
ரகு இந்த வண்டியில் தான் கடைசியா போனாரு சங்கர் இல்லையா.
ஆமாம் சார்.
டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு வண்டியை வெளிப்புறமாக சோதித்தான். பிறகு பின்புறம் திறக்கச் சொல்லி நன்றாக சோதித்தான். டூல் கிட் வைக்கும் இடத்தில் சங்கரிடம் கடைசியாக இருந்த 15 பக்கங்கள் கிடைத்தது. அதில் சில ரத்தத்துளிகள்.
முன்பக்கம் பயணி உட்காரும் இடத்தில் நன்றாக சோதித்தான். கண்ணாடி இடுக்கில் ஒரு காய்ந்த ரத்த துளி. அதை தன் கையடக்க டிஜிடல் காமிராவில் படம் பிடித்துக் கொண்டான். பிறகு அதை சுரண்டி ஒரு சின்ன கவரில் போட்டுக் கொண்டான். பிறகு இன்னும் நன்றாக சோதித்தான்.
பிறகு தொலைபேசியில் ஒரு எண்ணை சுழற்றினான்.
சரி வாங்க ரகு என்று மறுபடியும் ஓட்டலுக்கு திருப்பச் சொன்னான்.
திரும்பி செல்லும் போது நீலா ரகுவிடம் ஓடி வந்து ரகு, ரகு, சங்கர் கொலை விஷயமா சிதம்பரம் போலீஸ் கொடுத்த ரிப்போர்ட் படி தஞ்சாவூர் போலீஸ் கரிகாலன் சாரை கைதி பண்ணிகிட்டு போயிட்டாங்க என்றான்.
ரகு ஆச்சர்யமாக ரமேஷை பார்த்தான்.
ரமேஷ் சிரித்துக் கொண்டே நான் நினைச்சதை விட தஞ்சை அதிகாரிகள் ரொம்ப வேகம் தான் என்றான்.
அனைவரும் களைத்திருந்தனர். பயந்திருந்தனர். அனைவரையும் தூங்க சொல்லிவிட்டு அவனும் தன் அறைக்குப் போனான்.
நடந்தது எதுவும் தெரியாமல் பழனியப்பன் உறங்கிக் கொண்டிருந்தார்.
தொடரும்…