எனக்கு ஒரு குழப்பமாகவும் பயமாகவும் இருக்கு. நீங்க தான் தஞ்சை காவல்துறையிடம் சொல்லி எங்களுக்கு பாதுகாப்பு தரணும். ஏன்னா என்னை நம்பி பெற்றோர்கள் அவங்க பிள்ளைகளை ஒப்படைச்சிருக்காங்க.
நன்றி. அவசியம் சொல்றேன்.
இன்னொரு புறம் நடக்கும் பேச்சுக்களை கேட்காமல் குழப்பான சூழ்நிலையில் ஒரு தொலை பேசி பேச்சு மேலும் குழப்பத்தையே தரும். அதை புரிந்துக் கொண்ட பழனியப்பன் தன்னுடைய இரு மாணவர்களுக்கும் விளக்கினார்.
வணக்கம் பழனியப்பன். உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. சங்கரோட பிரேத பரிசோதனை அறிக்கை வந்துடுத்து. அவர் கொலை செய்யப்பட்டிருக்காரு.
என்ன ……………………….
அவர் மின்சாரம் பாய்ந்து சாகரத்துக்கு முன்னாடி அவரை இரண்டு முறை தலையில் பலமாக தாக்கியிருக்காங்க. அவர் நினைவிழந்து போயிருக்காரு. அதுக்கப்புறம் அவரை பம்பு செட்டில் கட்டி மின்சார வொயரை இனணைச்சிருக்காங்க.
அப்படியா …………………
ஆமாம்.
என்ன சார் சொல்றீங்க ………………………
ஆமாம். அவரை தாக்கிய ஆயதும் எதுன்னு தேடிக்கிட்டு இருக்கோம்.
ஏதாவது கிடைச்சிதா ………………………..
இல்லை. இன்னும் தேடிக்கிட்டு இருக்கோம். அவர்கிட்ட கடிகாரம் பர்ஸ் இப்படி ஏதாவது இருந்துதா.
ஆமாம் சார் இருந்துது………………..
அப்படி எதுவுமே கிடைக்கலை.
அதுவும் இல்லையா …………………….
ஆமாம் சார். இன்னும் தேடிக்கிட்டு இருக்கோம். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தா சொல்லுங்க.
நான் தஞ்சாவூர் போலீஸை உங்களை வந்து பாக்க சொல்றேன்.
நன்றி சார்.
இது தாம்பா பேசினோம். இப்ப என்ன பண்ணலாம்.
சார் எனக்கென்னவோ இதைப் பத்தி எல்லாம் போலீஸுக்கு சொல்லிடனும்னு தோனுது என்றான் ரவி பயத்துடன்.
ஆமாம் சார் என்னமோ எனக்கும் அப்படித்தான் தோனுது. ஆனா எந்த காரணத்தை கொண்டும் பயத்தினால் இந்த ப்ராஜெக்டை விடக்கூடாது.
சரி ரவி, ரகு உங்களோட தைரியம் எனக்கும் தைரியம் கொடுக்குது. முதல்ல அந்த பொண்ணங்களுக்கு நான் தான் பாதுகாப்பு கொடுக்கனும்னு நினைச்சேன். உங்களோட பக்குவத்தை பார்த்த பிறகு நீங்க அந்த பொறுப்புக்கு சரியான ஆட்கள் அப்படின்னு நினைக்கிறேன்.
அந்த பெண்களோட கொளரவம் நம்ம கல்லூரியோட கெளரவம் இந்த ஆராய்ச்யோட வெற்றி, இது எல்லாத்தையும் நம் நாட்டின் எதிர்காலமான இளைஞர்கிட்டேயே ஒப்படைக்கிறேன்.
ரொம்ப நன்றி சார் என்று கூறிவிட்டு இருவரும் அகன்றனர். நீலாவுக்கு இனிமே சங்கரா நானா அப்படிங்கற பிரச்சனை இல்லை. நான் மட்டும் தான் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் ரகு.
அப்பாடா சவிதாவை இனிமே எப்ப வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டான் ரவி.
தொடரும்…