சார் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும் என்றான் ரகு பழனியப்பனின் அறைக்கு வந்து. உட்காரு ரகு. சொல்லு என்றார்.
சார், சுற்று முற்றும் பார்த்தவிட்டு தொடர்ந்தான். சார், அன்னிக்கு தம்பிரான் கிட்டேர்ந்து அவர் எழுதின கட்டுரை வாங்கி படிச்ச உங்களோட முகம் இறுகி போயிட்டுத்தே எதுக்கு.
ஹா ஹா, ஐந்து சின்ன பசங்களை கூட அழைச்சிகிட்டு வந்திருக்கேன்னு நினைச்சேன். ஆனா நீங்கள் எல்லாருமே புத்திசாலி பசங்கத்தான். ஒரு ஓவியனுக்கு கவனித்தல் தான் ஆயுதம். அந்த திறமை உன்கிட்டு இருக்கு.
தாங்கஸ் சார். ஆனா…………….
சொல்றேன் ரகு என்று விட்டு அமைதியானார்.
அறைக்குள் உலவினார். பிறகு ஏதோ உறுதி செய்துக் கொள்வது போல அறையின் கதவை திறந்து முடினார்.
ரகு, தம்பிரான் எழுதிய முதல் 20 பக்கங்கள் அப்படியே எங்கேயோ படிச்ச மாதிரி இருந்துச்சு. அதனால தான் அதிர்ச்சி ஆயிட்டேன். ஆனா சங்கரோட பிரச்சனையெல்லாம் முடிந்து தஞ்சாவூர் வந்த பிறகு தான் எனக்கு எங்கே படிச்சேன்னு ஞாபகம் வந்தது.
எங்கே சார் என்றான் ஆர்வமாக.
சொன்னா நம்ப பாட்டே ரகு. சந்திரசேகர் தான் எழுதினதா கொடுத்த கட்டுரையிலிருந்த முதல் 20 பக்கம், வார்த்தைக்கு வார்த்தை தம்பிரான் சார் எழுதின கட்டுரை.
என்ன என்று அதிர்ந்தான்.
ஆமா ரகு. தம்பிரானை ஆராய்ச்சி பண்ண வேண்டாம்னு சொல்லிட்டு அந்த தலைப்பை அவரு ஆராய்ச்சி செய்ய எடுத்துகிட்டு இருக்காரு. இப்ப வயசாகி தொடர முடியாம போனதால என்னை பண்ண சொல்லி எனக்காவது டாக்டர் பட்டம் வாங்கித் தர பார்க்கறாரு.
சார் அப்படின்னா…………………..
சொல்லு ரகு. ஏன் முழுங்கறே…
அப்படின்னா……. ஞானப்ரகாசம் சாரை இந்த தலைப்பில ரிசர்ச் பண்ண விடாம பண்ணது சந்திரசேகரோட ஆளுங்களா இருக்குமா.
எனக்கும் அப்படித்தான் தோணுது. யாரோ கதவு கிட்டே வர்ற மாதிரி இருக்கு. இந்த விஷயம் நம்ம இரண்டு பேருக்குள்ளேயே இருக்கட்டும் என்று சொல்லியவாறு கதவு திறந்தார்.
நேராக சவிதாவை அறையில் விட்டுவிட்டு பழனியப்பனை பார்க்க வந்திருந்தான் ரவி. அவன் முகம் இருண்டிருந்த்து.
என்னப்பா 30 நிமிஷம் சொல்லிட்டு 2 மணி நேரம் ஆக்கிட்டீங்களே என்றார் சற்றே குரலை உயர்த்தியபடி பழனியப்பன்.
சார் என்னென்மோ விஷயம் நடந்திருக்கு சார் என்று பயத்துடனும் கோபத்துடனும் கரிகாலன் சவிதாவிடம் தவறாக நடந்துக் கொண்டது, காகிதங்கள் மாறியது, அவர்கள் ஞானப்ராகசத்திடம் பேசியது, மறுபடியும் அவரை பெரிய கோவிலில் சென்று கட்டுரையை வாங்கி வந்தது என்று அனைத்தையும் மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்.
ரகுவும் பழனியப்பனும் அதிர்ந்த உறைந்திருந்தனர்.
சார், ஐந்தாம் படையின்னு ஞானப்ரகாசம் சொன்னது கரிகாலன் சாரைத்தான்.
அனைவரும் அமைதியாயினர். பழனியப்பன் பொறுமையாக தம்பிரான் கட்டுரையின் கண்டுபிடிப்பை பற்றி தானும் ரகுவும் பேசிக் கொண்டதை பகிர்ந்துக் கொண்டார்.
எல்லோரும் வியப்பில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
சட்டென்று ஏதோ தோன்றியவனாய் சார் நீங்க சங்கருக்கு கொடுத்த பக்கங்கள் எங்கே. அவன் அன்னிக்கு ஓட்டலுக்கு போகும் போது எடுத்துக்கிட்டு போனானே.
அப்போது தான் அதை உணர்ந்தவர்களாய் சே இதை விட்டுட்டோமே என்று தங்களையே கடிந்துக் கொண்டார்கள்.
சார் எனக்கு என்னமோ சங்கர் மின்தாரம் தாக்கி சாகலைன்னு தோனுது. அவனை யாரோ கொலை பண்ணியிருக்கனும். ஏன், கரிகாலன் கூட கொலை செய்திருக்கலாம் என்றான் ரவி.
இருக்கலாம் ரவி. ஒரு நிமிஷம் நான் சிதம்பரம் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்யறேன் என்று சொல்லியபடியே தொலைபேசியை எடுத்து சுழற்றினார்.
என்ன ……………………….
அப்படியா …………………
என்ன சார் சொல்றீங்க ………………………
ஏதாவது கிடைச்சிதா ………………………..
ஆமாம் சார் இருந்துது…………………
அதுவும் இல்லையா …………………….
நன்றி சார்.
தொடரும்…