தஞ்சையிலேயே ஒரு விடுதியில் அறையெடுத்தனர்.
இரவு உணவுக்கு சேர்ந்த அனைவரும் களப்பிறர் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
டேய் ரவி களப்பிறர் நூறு பேரை வென்ற பல்லவன் வழி வந்தோனே
அப்படின்னா மொத்தம் 100 பேர் இருந்தாங்க அப்படித்தானே அர்த்தம் என்றான் ஏதோ கண்டுபிடித்த மாதிரி ரகு.
இல்லை ரவி, இதை பல வழிகள்ல பார்க்கனும்.
1. நூறு பேரை வென்ற ………கவிஞர்கள் பாடும் போது நூறு யானைகளை கொன்ற, நூறு புலிகளை அடக்கிய அப்படின்னு சொல்வாங்க. ஆனா நூறு இங்க எண்ணிக்கையின்னு எடுத்துக்க கூடாது. நூற இங்க பல அப்படின்னு அர்த்தம்.
2. நூறு பேரை வென்ற ………..ஆக நூறு களப்பிறர்களை வென்றிருக்கிறான் பல்லவன் ஒருத்தன். ஆனா நூறு பேரு தான் இருந்தாங்கன்னு அர்த்தம் இல்லை. அதுமாதிரி நூறு பேர்தான் இருந்தாங்கன்னா, அனைத்து களப்பிறரையும் வென்ற அப்படின்னு பாடியிருப்பாங்க.
என்று கூறினார் பழனியப்பன்.
ஆனா ஒரு குழப்பமான விஷயம் ரவி. சரி நான் அதைப்பத்தி அப்புறமா பேசறேன். அடுத்து என்ன பண்ணலாம்னு உங்கள் கருத்தை சொல்லுங்க என்றார்.
இன்னும் இரண்டு நாள் இங்கே இருந்து முடிவு செஞ்சிகிட்டு அப்புறமா கிளம்பலாம் என்றான் கரிகாலன்.
எனக்கும் அது தான் சரின்னு தோணுது என்றான் ரகு.
அதுக்கு முன்னாடி நம்மிடம் உள்ள தகவல்களை எல்லாம் படிக்கனும் மொதல்ல என்றாள் நீலவேணி.
ஆமாம், அது தான் நமக்கு மேலே என்ன பண்ணலாம்ற க்ளாரிட்டி கொடுக்கும் என்றாள் சவிதா. நீலா உன் லாப்டாப்பை என்கிட்டே கொடு. இன்னிக்கி ராத்திரி உட்கார்ந்து நான் ஞானப்ரகாசம் சார் கொடுத்த எல்லாத்தையும் என்டர் பண்ணிடறேன் என்றாள்.
அனைவரும் உண்டுவிட்டு அவர்களுடைய அறைக்கு சென்றனர்.
சுமார் 11 மணி அளவில் சவிதாவின் கதவு தட்டப்பட்டது. யாரென்று பார்த்த அவள், கரிகாலன் நின்றிருப்பதை கண்டாள். என்ன சார் இந்த நேரத்தில என்றாள்.
உள்ளே வரலாமா என்றார் அவர்.
வாங்க என்று தயக்குத்துடன் சொன்னாள்.
அவர் உள்ளே வந்து அமர்ந்துக் கொண்டார்.
என்ன சார் ஒரே பதட்டமாக இருக்கீங்க.
ஆமாம் மா. சங்கர் செத்ததிலேர்ந்து எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. இன்னிக்கு என் மனைவி செத்த நாள். அதனால ஒரே துக்கமாக இருக்கு. கொஞ்ச நேரம் உங்கிட்ட பேசிட்டு போகட்டுமா என்றார் கெஞ்சலாக.
சரி சார். இந்தாங்க என்று ப்ளாஸ்கில் இருந்த காபியை ஒரு டம்ளரில் போட்டு கொடுத்தாள்.
அவர் மெதுவாக அதை குடித்தார்.
இன்னும் தூங்கலையா சவிதா என்றார்.
தூங்கனும் சார். இன்னிக்கு கிடைச்ச தகவல்களை கம்ப்யுட்டரைஸ் பண்ணிகிட்டு இருக்கேன்.
வேண்டாம் மா இந்த ஆராய்ச்சி. பழனியப்பன் நல்லவரு இல்லை. உங்களை நல்லா உபயோகப்படுத்திக்கிறாரு. அவருக்கு தான் பேரு கிடைக்கப் போகுது. உங்களுக்கு ஒன்னும் கிடைக்காது என்றார்.
பரவாயில்லை சார். நாங்க ஒரு அனுபவத்துக்காகத்தான் வந்திருக்கோம் என்றாள் சவிதா மிகவும் அடக்கமாய்.
அப்ப கல்யாணத்திற்கு அப்புறம் கிடைக்கிற அனுபவத்தை இன்னிக்கு அனுபவிக்கிலாமா என்றார் ஒரு மாதிரி பார்வையுடன்.
என்ன சார் இது மாதிரி பேசறீங்க. நீங்க மொதல்ல வெளியே போங்க என்றாள் காட்டமாக.
வா, வா என்று சொல்லிக் கொண்டே சட்டென்று அவளை கட்டியணைத்தார்.
அவள் உதறினாள். அவளை லாவகமாக தூக்கி கட்டிலில் எறிந்தார். அவரும் கட்டிலில் குதித்தார். அவள் உருண்டு புரண்டு ஓட முயற்சிக்க கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் மேசை மேலிருந்த ஞானப்ரகாசம் கொடுத்த காகிதங்களை பனியனுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு அவர் கொண்டு வந்த காகிதங்களை அதே இடத்தில் வைத்தார்.
அவள் ஓடி கதவின் பக்கம் செல்ல முயல, அவள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் அவள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.
என்னை மன்னிச்சிடு சவிதா. சட்டென்று என் மூளை பிசகிடுத்து. என் மனைவி செத்த பிறகு ஒரு பெண்ணை இத்தனை கிட்ட இப்பத்தான் பார்க்கிறேன். உன் அழகுல என் கண் மயங்கிடுத்து. என் மன்னிச்சிடு. நான் உன்னை ஒன்னும் பண்ணாம போயிடறேன். நீ யார்கிட்டேயும் சொல்லிடாதே என்று புலம்பினார்.
அவள் அதிர்ச்சியுடன் கதவை திறந்துவிட அவர் விரைந்து வெளி சென்றார்.
அதிர்ச்சி குறையாமல் அவள் படுக்கையில் வந்து அமர்ந்தாள்.
தொடரும்…