Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 24
இரண்டாம் தேனிலவு – 24

இரண்டாம் தேனிலவு – 24

அன்று, மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருட்டத் தொடங்கியிருந்தது ஊட்டி. குணசீலனும் அமுதாவும் ஊட்டியில் உள்ள ரோஸ் கார்டன், போட்டிங் ஹவுஸ், குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகிய இடங்களுக்கு காரில் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, ஊட்டியில் தங்கியிருக்கும் லாட்ஜூக்கு வந்து சேர்ந்தனர்.

சுற்றிப் பார்க்கச் சென்ற இடத்தில் அமுதா தன்னுடன் முழுஅளவில் ஒத்துழைக்காததால் கோபமாய் இருந்த குணசீலன், ஊட்டிக் குளிருக்கு இதமாக வெந்நீர் குளியல் போட பாத்ரூமுக்குள் நுழைந்தாள். ஜீன்ஸ், டீ – ஷர்ட்டில் இருந்த அமுதா, எப்போது அந்த ஆடையில் இருந்து விடுதலை ஆகலாம் என்கிற எண்ணத்துடன் பாத்ரூமுக்கு எதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடி முன்பு வந்து நின்றவள், தனது ஆடையைக் களையத் தயாரானாள். அப்போதுதான், அந்த ஆடையில் தன்னைத்தானே முதன் முதலாகப் பார்த்தாள்.

இடுப்புக்குக் கீழேப் போக மறுத்து அடம்பிடித்து நின்றுகொண்டிருந்த டீ – ஷர்ட் ரொம்பவும் இறுக்கமாக இருந்தது. ஒயிட், எல்லோ மிக்ஸிங் ஷர்ட் அது என்பதால், அவள் அணிந்திருந்த சிவப்பு நிறப் பிரா அப்பட்டமாகத் தெரிந்தது. குனிந்து நிமிர்ந்தபோது, அவளது மார்பழகு பளிச்சென்று வந்து போனது.

“நாம் இன்னிக்கு எத்தனை இடங்களில் இப்படிக் குனிந்து நிமிர்ந்திருப்போம்? ஒருசிலர் திரும்பத் திரும்ப நம்மை பார்த்தது, இதையெல்லாம் ரசிப்பதற்குத்தானா? ச்சீ… என்ன ஜென்மங்கள் அவர்கள்?” என்று மனதிற்குள் புழுங்கியபடியே டீ – ஷர்ட்டைக் கழற்ற முயன்றாள்.

குணசீலன் கட்டிய தாலிச் செயின் டீ – ஷர்ட்டின் பட்டனில் சிக்கிக் கொண்டதால், கழற்றுவதற்குச் சிரமப்பட்டாள்.

சரி, பாத்ரூமிற்குள் போனபிறகு கழற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, அவள் திரும்பிய போது அங்கே 20 வயது மதிக்கத்தக்க ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

அவனை எதிர்பாராதவிதமாகப் பார்த்து அதிர்ச்சி ஆனவள், அவரசம் அவசரமாக டீ – ஷர்ட்டைச் சரிசெய்தாள்.

“யார் நீ? உனக்கு இங்கே என்ன வேலை? எப்படி இங்கே வந்தே?” பதற்றத்தோடு கேள்விமேல் கேள்வி கேட்டாள், அவனிடம்!

“நான் ரூம் பாய். ஸார்தான்… குடிக்கறதுக்கு மினரல் வாட்டர் கேட்டிருந்தாங்க. அதை எடுத்துட்டு வந்தேன். கதவு திறந்து இருந்ததால… நான் வருவேன்னு தெரிஞ்சுதான் திறந்து வெச்சிருக்கீங்களோன்னு நெனைச்சு உள்ளே வந்துட்டேன். வேற எதுவும் இல்ல மேடம்…” என்ற அவன், தான் கொண்டு வந்த 2 லிட்டர் மினரல் வாட்டர் பாட்டிலை அமுதாவிடம் நீட்டினான்.

“இல்ல… அந்த ஷோபாவுல வெச்சிட்டுப் போ. இனி, உள்ளே வரும்போது ஹாலிங்பெல்லை அழுத்திட்டு வா. சட்டுன்னு உள்ளே வந்திடாத…” என்று, மறைமுகமாக எச்சரிக்கவும் செய்தாள்.

“சரி மேடம்…” என்று சொல்லிவிட்டு அகன்றான் அந்த ரூம் பாய்.

அமுதாவின் இதயம் பதற்றத்தில் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. “இவன் வந்ததுகூட தெரியாம நாம டிரெஸ் மாத்திட்டு இருந்திருக்கோமே. ஒருவேளை… டிரெஸ் மாத்திட்டு இருக்கும்போது எல்லாத்தையும் பார்த்து இருப்பானோ..?” என்றெல்லாம் கற்பனை செய்யத் தொடங்கினாள்.

பாத்ரூம் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க… குணசீலன் ப்ரெஸ் ஆக வெளியே வந்தான்.

“ரூம் பாய் வாட்டர் பாட்டில் கொண்டு வந்தானா?” என்று, வெளியே வந்ததும் வராததுமாகக் கேட்டான்.

“வந்தான்… இப்பத்தான் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போறான். ஆமாம்… அவன் இங்கே வருவான்னு என்கிட்ட நீங்க சொல்லி இருக்கலாம்ல..!”

“ஏன்… என்னாச்சு?”

“நான் டிரெஸ் மாத்திட்டு இருக்கும்போது உள்ளே வந்துட்டான்.”

“ஏன் பொய் சொல்ற? இன்னும் நீ டிரெஸ் மாத்தவே இல்லீயே..!”

“மாத்தலதான்… ஆனா, மாத்தும்போதுதான் அவன் வந்துட்டான்..!”

“நீ என்ன சொல்றன்னு எனக்கு ஒண்ணும் புரியல. அதை விடு, நான் கொஞ்சநேரம் வெளியே போயிட்டு வர்றேன். பாத்ரூம்ல வெந்நீர் வருது. குளிச்சி முடி ச்சு ப்ரெஸ்ஸா இரு. என்னோட பேக்ல சென்ட் பாட்டல் எல்லாம் இருக்கு. எல்லாம் ஃபாரீன் அயிட்டம். உடம்பு முழுக்க நல்லா அடிச்சிக்கோ. முக்கியமா, ரோஸ் கலர்ல நைட்டி எடுத்து வெச்சிருக்கேன். குளிச்சி முடிச்சதும் நீ அதைத்தான் போட்டுக்கணும்…” என்ற குணசீலன், டீ – ஷர்ட், லுங்கியோடு வெளியே புறப்பட்டான். கதவைப் பூட்டிவிட்டு குளிக்கத் தயாரானாள் அமுதா.

ஜீன்ஸ் பேன்ட்டையும், டீ – ஷர்ட்டையும் கஷ்டப்பட்டு உடலில் இருந்து உருவி எடுத்தவள், பாத்ரூமிற்குள் நுழைந்தாள். அங்கேயும் ஆளுயரக் கண்ணாடியைப் பொருத்தி வைத்திருந்தார்கள்.

“ஏன்… இங்கெல்லாம் கண்ணாடி பொருத்தி வைத்திருக்கிறார்கள்?” என்று அப்பாவியாய் யோசித்தபடியே கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தைப் பார்த்தவள். வெறும் உள்ளாடைகளுடன் மாத்திரம் கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தைப் பார்த்து… நீண்ட நாட்களுக்குப் பிறகு கன்னம் சிவக்க வெட்கப்பட்டாள். அதுவும், கண்களை பொத்திக் கொண்டே ஓரக்கண்ணால் கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தைப் பார்த்தாள்.

“ஏய்… அமுதா! நீ ரொம்ப அழகாத்தாண்டி இருக்குற. பட்டிக்காடான சொந்த ஊர்ல இருந்த அழகைவிட, இந்த ஊட்டியில நீ ரொம்பவும் அழகாத் தெரியறே. அதுவும், இன்னிக்கு ரொம்ப ரொம்ப அழகா இருக்க…” என்று தனக்குள்ளேயே சொல்லி வெட்கப்பட்டுக் கொண்டாள்.

இன்னும் கொஞ்ச நேரம் அந்தக் கண்ணாடியில் முன்பு அப்படியே நிற்க வேண்டும் போல் இருந்தது அமுதாவுக்கு! அப்போதுதான், “ஓ… இதுக்குத்தான் இங்கேயும் ஆளுயுரக் கண்ணாடியை மாட்டி வெச்சிருக்காங்களா?” என்று, சற்று நேரத்துக்கு முன்பு தோன்றிய சந்தேகக் கேள்விக்கு சரியான விடையை கண்டுபிடித்துக் கொண்டாள்.

எவ்வளவு நேரத்துக்குத்தான் கண்ணாடி முன்னாடியே நிக்கறது..? என்று நினைத்தவள், தலை நனையாமல் குளிக்க ஆரம்பித்தாள். ஊரில் இருக்கும்போது, மாராப்பு வரை பாவாடையை இறுகக் கட்டிக்கொண்டு குளித்துப் பழக்கப்பட்டவள், நகரத்து சூழ்நிலை தனது குளியல் ஸ்டைலையே மாற்றியிருப்பதை உணர்ந்தாள். இதுவும்கூட நல்லாத்தான் இருக்கு என்று மனதுக்குள் திருப்திப்பட்டுக் கொண்டவள், ஷவரை திறந்துவிட்டுக் குளித்தாள்.

நேரம் போனதே தெரியவில்லை. அவள் குளியல் அறையில் இருந்து வெளியே வந்தபோது அரை மணி நேரம் வேகமாக ஓடியிருந்தது. குணசீலன் வைத்துவிட்டுப் போன ரோஸ் கலர் நைட்டியை எடுத்துப் பார்த்தாள். சினிமாக்களில் நடிகைகள் இரவு நேரக் காட்சிகளில் அணியும் நைட்டி அது. போட்டுப் பார்த்தாள். மிகவும் கவர்ச்சியாக இருந்தது. முன்புறம் வெறும் நாடா மட்டும்தான். கொஞ்சம் பிடித்து இழுத்தால், நைட்டி முழுமையாய் அவிழ்ந்துவிடும் அளவுக்கு அதை வடிவமைத்து இருந்தார்கள்.

இதுபோன்ற ஆடையெல்லாம் அமுதாவுக்குப் போட்டுப் பழக்கம் இல்லைதான். ஆனாலும், இப்போது அவளுக்கு அந்த ஆடை பிடித்திருந்தது. அந்த ஆடை அவளை பேரழகியாகவே காட்டியது. அந்த நைட்டியைப் போட்டுக்கொண்டு ஆளுயரக் கண்ணாடி முன்பு வந்து நின்றவள், திரும்பவும் தனது அழகை ரசிக்கத் தொடங்கினாள். சினிமா நடிகைகள் “போஸ்” கொடுப்பது போன்று, ஆங்காங்கே திரும்பி நின்று பார்த்து, தான் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாள்.

திடீரென்று ஹாலிங்பெல் அலறியது. வெளியே சென்ற குணசீலன்தான் வந்திருக்க வேண்டும் என்று நினைத்த அமுதா, பூட்டிய கதவைத் திறந்தாள். அவள் எதிர்பார்க்காதவிதமாக சற்றுநேரத்துக்கு முன்பு வந்த அதே ரூம் பாய்.

“மறுபடியும் இங்கே எதுக்கு வந்திருக்க?”

“என்ன மேடம்… என்னோட வேலையே உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறதுதான். ஸார்தான்… இதை வாங்கி வந்து கொடுன்னு சொல்லி, பணமும் தந்துட்டுப் போனாங்க. அதைக் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்…” என்றான் அவன்.

“சரி, கொடுத்துவிட்டுப் போ…” என்று கை நீட்டி அதை வாங்கினாள் அமுதா. கொஞ்சம் சிரித்துவிட்டுப் போனான் அவன்.

“ஏன் இவன் சிரிச்சுட்டுப் போறான்…” என்று நினைத்தபடியே, அவன் தந்துவிட்டுப் போன பொருளைப் பார்த்தாள். அது, அவளை இன்னும் அதிர்ச்சியாக்கியது. அந்தப் பொருள்… பாலியல் உறவின்போது ஆண்கள் பயன்படுத்தும் காண்டம்!

அமுதாவுக்கு கோபம் கோபமாக வந்தது. குணசீலன் வந்ததும், “உங்களுக்கு அறிவு இருக்கா?” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது.

அவள் கோபமாக இருக்கும்போதே ஹாலிங்பெல் அலறியது. குணசீலன்தான் வந்திருக்க வேண்டும். வந்ததும், இதுபற்றிதான் முதல்ல கேட்கணும்… என்று மனதுக்குள் புலம்பியபடியே கதவைத் திறந்தாள்.

இப்போதும் அவளுக்கு அதிர்ச்சி தந்தவன் அதே ரூம் பாய்தான்.

“ஸாரி மேடம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்ககிட்ட நான் குடுத்தது, பக்கத்து ரூமுக்குக் கொடுக்க வேண்டியது. உங்க ஸார் வாங்கி வரச் சொன்னது டிபன். நான் இங்கே கொடுக்க வேண்டியதை அங்கேயும், அங்கே கொடுக்க வேண்டியதை இங்கேயுமா மாத்திக் குடுத்துட்டேன். இதோ… உங்க ஸார் வாங்கி வரச் சொன்ன டிபன். நீங்க… நான் தந்த பொருளைத் தந்தா வாங்கிட்டு போயிட்டே இருப்பேன்…” என்றான்.

அமுதாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. டிபன் பார்சலை வாங்கிக் கொண்டு, அதுவரை கையிலேயே வைத்திருந்த காண்டம் பாக்கெட்டை, ஏதோ தொடக்கூடாத பொருளை தொட்ட மாதிரி அவனிடம் கொடுத்துவிட்டு கதவை வேகமாக பூட்டிக் கொண்டாள். ஆனால், அவளது மனமோ எப்போதும் இல்லாத பதற்றத்தில் அடித்துக் கொண்டது.

 

 தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top