” ச்ர்ர்ர்ர்….” என்ற சத்தம் கேட்ட நொடியில் அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நடுங்கி போனான். அவனது மூளை அவனை எச்சரித்து உண்மையை உணரச்செய்தது. அப்பாதையில் உள்ள கடைசி கழிவறையில் யாரோ நீரினை உபயோகிக்கும் சத்தம் தான் அது என்பதை இப்போது அவன் உணர்ந்தான். மேலே நடக்கையில் மீண்டும் அதே இடம் வந்தது ” பார்க்காதே பார்க்காதே…” என் கட்டளையிட்டுக்கொண்டே நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
மூன்றாவது மாடி சில நண்பர்களின் அறையை கடந்து போக வேண்டியிருந்தது. ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு கொண்டாட்டங்கள். கானா பாடலுக்கு ஆட்டம், ரஜினி பேசும் பாட்சா பட வசனம் என அமுதன் கத்தில் எங்கோ வெகுதொலைவில் கேட்டபது போல இருந்தது. பழக்கப்பட்ட இடம் என்பதால் அவனது கால்கள் தானே அறையை நோக்கி நடந்தன. அரை வந்தது.
சன்னலின் மேலே வைத்திருந்த சாவியை எடுத்து உள்ளே நுழைந்து கதவை சாத்திவிட்டு கட்டிலில் விழுந்தான். ஏதோ யோசனை செய்துகொண்டே பின் கதவின் வழியே பார்த்தான். கதவு திறந்திருந்தது. கற்று நன்றாக வரும் என்பதால் எதையும் மூடாமல் விட்டிருந்தார்கள்.
கதவின் வழியே வேம்பும் அதன் கிளையும் இருட்டில் அறையின் மங்கிய ஒளியில் தெரிந்தது. அமுதனின் கண்கள் விரிந்தன. தலையை பிய்த்துக்கொள்ளலாம் போலிருந்தது அவனுக்கு. அதே விழிகள், அதே முகம், அதே கோர பார்வை, உடம்பு ஏதும் தெரியாமல் அந்த முகம் மட்டும் அவனுக்கு தெரிந்தது. பயத்தில் கண்களை மூடிக்கொண்டான். “தூங்கு.. தூங்கு ” என தனக்குள் சொல்லிக்கொண்டான். ஆனால் அவனால் தூங்க முடியவில்லை. கண்களை எவ்வளவோ இறுக்கி மூடியும் பயம் அவனது கண்களை திறந்தது. இப்போது அம்முகம் வேறு எங்கோ காணாமல் போயிருந்தது. நிம்மதியில் மனம் நிறைந்தான். அனல் உள்மனம் அவனை தூங்காது தொந்தரவு செய்து கொண்டிருந்தது.
வேகமாய் எழுந்தான். எதை பற்றியும் யோசிக்காமல் பின்பக்கம் சென்றான். மங்கிய வெளிச்சத்தில் இறந்த பின்புறத்தை சன்னல்களை சத்தி இருளாக்கிவிட்டு பின் கதவையும் சாத்தி தாளிட்டான். மறுபாகம் சென்றான்.கொசு உள்ளே வராமல் இருக்க கம்பி வலை போடப்பட்டு கதவை சாத்த சிறிது துளைமட்டும் இருந்தது. அவன் சிந்தனையில் வேறேதும் இல்லை. மிகவும் வேகமாய் செயல்பட்டான். அத்துளை வழியாக கையை உள்ளே நுழைத்து கதவை பிடித்து உள்ளே இழுத்தான். அவனது தலையும் சன்னலின் உள்ளே போய் வெளிவந்தது.
அவனுக்கு ஒரு பிரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அவனுக்கு பின்னால் அந்த உருவம் ஆம் அதே உருவம் ஆலவிழுதிலேயும் பின் வேம்பு கிளையிலும் இருந்த உருவம் இப்போது அவன் பின்னே நின்று இவன் முகத்தையே உற்று பார்த்துக்கொண்டிருந்தது. ” பதட்டத்தில் தனது அம்மா வை அழைத்தான். நா வரவில்லை. பின்னர் திரும்பி காத்த முயன்று கொண்டே அந்த கருப்பு உருவத்தின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.
அந்த உறவத்தின் தலைப்பகுதி அங்கேயே இருக்க கால் பகுதிமட்டும் ஊசலாடியது.கை வலிக்காமல் ஏதோதோ தலையணையில் குத்தியதை போல் இருந்தது.பின்பு தான் அது கொடியில் தொங்கிக்கொண்டிருந்தத கருப்பு நிற ஜீன்ஸ் பேன்ட் என்பதை உணர்ந்தான். பயநடுக்கதோடு அலமாரியை திறந்தான். அங்கு முருகர் சிரித்தபடி இவனே பார்த்துக்கொண்டிருந்தார். கண்களை மூடி வேண்டாமல் ஏதேதோ யோசனையில் ஆழ்ந்தான் அமுதன். கண் திறக்கும் போது இந்த முறை வெள்ளையான உருவம் கதவினருகே வந்து நின்றது.
தொடரும்…