மங்களம்.. மங்களம்
உரத்த குரலில் தன் மனைவி மங்களத்தை அழைக்கிறான் சண்முகம்
மீண்டும் ஒரு தடவை சற்று உரத்து அழைத்துப்பார்க்கிறான்
இல்லை எந்தவித பதிலும் இல்லை
எங்கே போயிருப்பாள் இவள்.தனக்குத் தானே கேள்வி கேட்டபடி சமையலறைக்குள் நுழைந்தவன் முகம் சிவந்தே போனது..ச்சீ பொம்பளையா இவள்..ராத்திரி சாப்பிட்ட ப்ளேட்..சமையல் பாத்திரங்கள்..எல்லாம் அப்படியே கழுவாமல்..ம் என்று பல்லைக் கடித்தவனாக குளியலறைப்பக்கம் தன் பார்வையைத் திருப்பினான்.
அங்கு சென்றவன் கண்களில் ஆத்திரம் இன்னும் அதிகமானது.
என்ன பொம்பளை இவள்.. கழுவப் போட்ட உடுப்பெல்லாம் அப்படியே.எனக்கு வாற ஆத்திரத்தில..என்று கர்ஜித்தவன் சற்று வேகமாகவே சென்று அறைக்கதவை படார் என்று திறக்கிறான்.அங்கும் இல்லை.
ஆத்திர மிகுதியில் கண்முன்ணே அழகாகக் காட்சியளித்த அந்த கண்ணாடிக் குவளையை உதைக்க . ச்சலீர் என்று ஓலமிட்டு நிலத்தில் வீழ்ந்து தன் மரணத்தை சுவீகரித்துக்கொண்டது அந்தக் குவளை..
எங்க போயிருப்பாள் இந்தக் கழுதை.. ஆத்திரத்துடன் படுக்கையறைக்குள் சென்றவன் வெறிபிதெ;தவன் போன்று காணப்பட்டான்.
அணிந்திருந்த காலணிகளைக் கூட கழற்றாமல் கோபமே உருவான முகத்துடன் கட்டிலில் சாய்ந்தான்..
இரவு முழுக்க வீட்டிற்கு வரவில்லை, சரியான களைப்பாயிருந்ததனால் து}க்கம் அவனை ஆட்கொண்டது..
நாட்கூலிக்காகக் கஷ்டப்படும் சாதாரண தொழிலாளி, ஒரே ஒரு நாள் மத்திரம் பட்டச்சாராயம் குடிக்கத்தவறினால் கூட இந்த அளவு குறட்டைச் சத்தம் வெளியாகுமா? ஏன்பது சந்தேகம் தான். அவ்வளவு களைப்பு அவன் து}க்கத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்தது..
அப்போதுதான் து}க்கம் அவளை ஆட்கொண்டிருந்தது..திடீரென எதையோ கண்டவன் போன்று துடித்தெழுந்தவன் சுற்று முற்றும் வேக வேகமாக சுற்றிப் பார்க்கிறான்.அவன் இதயம் கோபம் கலந்த பதற்றத்துடன் அவனை இயக்குகிறது என்பதை அந்தக்கணம் நன்கே வெளிக்காட்டியது.
ஓ.நீ இங்க தான் இருக்கியா..?
(யாரது . யாரைப் பார்த்துக் கேட்கிறான்..)
மங்களம் .. அடியேய் மங்களம்.
(எங்கேயிருக்கிறாள் மங்களம்..?)
வா.டி .. இங்கே எட்டி அவள் தலைமுடியைப் பிடித்தவனின் அசுர இழுப்பில் கூட வேதனையை அடக்கி இவன் இழுத்த திசைக்கு பொம்மையாக இழுபட்டாள் மங்களம்..
திரும்புடி..என்ன புதுப் பொண்ணா நீ?
(திரும்ப வில்லை)
திரும்புடின்னா.. பலவந்தமாக இழுக்கிறான்..
(ஓ.. என்ன இது இவள் முகம் இவ்வளவு கோரமாக இருக்கிறது.)
ஏய்.என்னடி இன்னும் நீ மருந்து போடலியா? – சண்முகம் கேட்கிறான்.
(மங்களம் பதில் பேச வில்லை)
சொ..ல்..லு..டி..
(அந்த அதட்டலுக்கு அவள் பயப்பட்டதாகவும் தெரியவில்லை.)
கோபம் அடைந்த சண்முகம் அவளை மேலும் பலவந்தப்படுத்தினான்..
இதற்கு மேலும் அவளுக்குப் பொறுமையில்லை என்பதை அவள் மூச்சி;ல் இருந்து வெளியாகிய உஷ்னக்காற்றும் அது தந்த -10 டிபி ஓங்காரச் சப்தமும் உணர்த்தியது.. மறு கணம்
இ….ல்லை !!! உரத்த சப்தத்தில் மங்களம்.
அவள் முகத்தை மறைத்திருந்த கேசங்கள் விலகிக்கொள்ள . ஆ என்ன இது பரிதாபம்.
நெற்றியில் ஒரு வெடிப்பு, சிந்திய இரத்தம் உறைந்திருக்கின்றது..மூக்குப்பகுதியின் கீழ் ஆரம்பித்திருக்கும் அந்த வீக்கம் தாடை வரை..இடது காதின் அருகே இரத்தம் உறைந்து கழுத்தை நோக்கி நதி போன்ற வளைவுகளுடன்.அப்பப்பா.. பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.
ஓ..இன்னும் முகத்தைக் கூட கழுவலியோ நீ – சண்முகம் கேட்கிறான்.
எழுந்திருடி.அவளை இழுக்கிறான்.
எழும் வேகத்தில் அவள் தலையை மூடியிருந்த அந்தக் கந்தல் புடவையும் நிலத்தை நோக்கிச் சரிகிறது.
தோள் பட்டையில் கிழிய ஆரம்பித்திருக்கும் பிளவுஸ்..அவள் இடது மார்பகம் வரை அனாதையாகக் கிழிந்து கிடக்க, வரிக்குதிரையின் உடம்பு போன்று நெஞ்சுப் பகுதியில் வரி வரியாய்த் தழும்புகள்..கொடூரம் .. இது பெருங் கொடூரம் பார்ப்பதற்கே பயங்கரமாயிருந்தது..
வேறிச்சோடிய கண்களுடன் அவனையை உற்றுப்பார்த்தாள் மங்களம்..
என்னடி பார்க்கிற.’அம்மா’ என்று மங்களம் கதற .. ஒரு உதை.
எகிறி வீசப்பட்டவள் பாவாடை அவன் கால்களில் சிக்கி ஒரு மாதிரி விடுபட்ட போதுதான் அவளுக்குக் கால்களை நிலத்தில் சரியாக ஊன்ற முடியாமல் தவிப்பது தெரிந்தது.
அடி……வரையறையே இல்லாத அடி வாங்கி வாங்கி அந்தப் பெண்மை ரணமாகிப் போயிருப்பது மாத்திரம் தெரிகிறது..
போ .. போடி.. இப்ப மணி எத்தனைன்னு தெரியுமா? சுண்முகத்தின் அதட்டல்
நேத்து ராத்திரி 8 மணிக்கு போன நான் இன்னைக்கு ராத்திரி 7 மணிக்கு வந்திருக்கன்.என்ன ஏதுன்னாவது கேட்குறியா.? ஊரே அதிரும் சப்பதத்தில் சண்முகம்.
மனுசன் வெளிய போய் வந்தா எப்புடிக் கவனிக்கனும்னுகூடத் தெரியாத நாயே…மங்களம் வயிற்றில் ஒரு உதை உதைக்க எத்தனிக்கும் சண்முகத்திற்கு அவள் து}ரே நின்றதனால் அது முடியாமல் போனது.
இவன் எதை வேண்டுமானாலும் கத்தட்டும்..காதில் போடாமல் அங்குல அங்குலமாக தன் காலடிகளை வைத்து நடந்து செல்கிறாள் மங்களம்..
எங்கடி போற..? போய் ஏதாவது சாப்பிடக் கொண்டுவாடி நாயே – மீண்டும் சண்முகத்தின் கதறல்..
எதுவுமே பேசாத மங்களம் தன் காலடிகளை மெதுவாக சமையலறைப் பக்கம் திருப்புகிறாள்..
சமையலறை ஒரு அழுக்கறையாகவே காட்சி தந்தது.தட்டித் தடுமாறி அடுப்பங்கரையை வந்தடைந்தவள் .. சோற்றுப் பானையை மெதுவாகத் து}க்கிப் பார்த்தாள்..கொஞ்சம் போல சாதம் இருந்தது.
கறிச்சட்டியை திறந்து பார்த்தாள்.நேற்றோ முன்தினமோ சமைத்தது, அடிபிடித்தது போன்று உறைந்து கி;டந்தது.
பானையில் வார்த்திருந்த தண்ணீரை ஒரு கோப்பையில் அள்ளியெடுத்தவள்..சாதத்திற்குள் அதையிட்டு அடுப்பில் வைத்தாள்.தீப்பெட்டி சுவாலையைக் கக்கி..சாதத்தை சு10டாக்கியது.
உறைந்து போயிருந்த கருவாட்டுக் கறி.. நேற்றுப் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பாலும் கொஞ்சம் இருக்கிறது..கையிலெடுத்தவள்..ஏதோ ஒரு யோசனை வரவே,
மிளகாய்ப் பொடியோ மசாலாப் பொடியோ தெரியவில்லை ஓரளவுக்குக் கலந்து ..ம் பழங்கறியைப் புதுக்கறியாக்கி விட்டாள்..
சு10டான சமையல்.. தயார்.
பாவிக்காமல் அப்படியே இருந்த ஒரு தட்டையெடுத்து .. இருந்த சாதத்தினையும் சமைத்த கறியினையும் தனக்குக் கூட மிச்சம் வைக்காமல் முழுமையாக அவனுக்காகவே எடுத்துக்கொண்டு.
மீண்டும்..அங்குல அங்குலமாக இழுத்து இழுத்து நடந்து அவனருகே சென்றாள்.
ம்.தா தா கோரப் பசி. என்று சொன்னவன் .. அந்த தட்டைக் கூட பலாத்காரமாகப் பெற்றெடுத்து..
கொட்டிலில் கட்டிக் கிடக்கும் மாட்டுக்குச் சொட்டுத் தீனி கிடைத்தால் எப்படி அசை போடுமோ.அதைவிடவும் கேவலமாக சப்தத்துடன் அசைபோட்டு ருசித்து சாப்பிட்டான்.
அடி மூதேவி உன்னைக் கட்டினதுக்கு நீ போடுற சாப்பாடு ஒன்டு தான்டி நல்லாருக்கு..ன்னு அப்போது கூட மறக்காமல் அவளைத் திட்டிக் கொண்டே சாப்பிட்டான்.
இவன் பேச்சைக் கொஞ்சம் கூட காதிலெடுக்காதவளாய்..தன் பாட்டில் அவனை விட்டுத் து}ர விலகி நடக்கிறாள்..மங்களம்
என்னடி..நண்டு நடக்குற மாதிரி நடக்குற..? – அதில் கேலி வேறு
ம்..அவள் பாட்டில் நடக்கிறாள். வீட்டு வாசலை அடைந்துவிட்டாள்.
ஏய் .. மூதேவி தண்ணி கொண்டுவாடி.. – சண்முகம் அழைக்கிறான்
வாசல் கதவு திறக்கப்பட்டது.வெளியில் காற்றுக் கூட இல்லை..பாழாய்ப்போன பூமியும் இவளை வெறுக்குதோ என்னவோ.
சீமெந்தத் தரையில் நடக்கவே இவ்வளவு கஷ்டப்பட்ட கால்களை வலிதாங்கும் வெறியுடன் மண் தரையில் வைத்த போது.ஒரு கணம்
அவள் தன்னை அறியாமல் ‘க..டவு..ளே..’ என்று அலறிவிட்டாள்.
சத்தம் கேட்ட சண்முகம் உள்ளேயிருந்து கேட்கிறான்..அடியேய் எங்கடி போற..?
இவன் பேச்சைக் காதிலெடுக்காதவளாய் அவள் நடந்து செல்லவே..
இன்னைக்கு உன்னை என்ன செய்யுறன் பார். ஆத்திரத்துடன் கட்டிலைவிட்டு எகிறிக் குதிக்க.. ஐயோ அவனால் முடியவில்லை..
தன் வாழ்க்கையில் முதற் தடவையாக தான் பலவீனமாயிருப்பதாக உணர்கிறான்.
அடியேய் மங்…க. அவனால் உரக்கக் கத்த முடியவில்லை..
கையிலிருந்த தட்டை தன் முழுப் பலத்தையும் பிரயோகித்து வீசியெறிந்தான்..ஆனால் அதுவோ அவன் அருகில் விழுந்தது.
அவன் தன் கட்டுப்பாட்டை இழக்கிறான்..
சாப்பிட்ட சாப்பாடு போதுமென்று நினைத்ததோ என்னவோ வயிறு ஏப்பம் விட எத்தனித்தது.ம்.அந்தோ பரிதாபம்..
வெளியில் நீண்ட நாக்கு அப்படியே நின்று விட்டது.
கண்கள் மெதுவாக மூடியது.
எத்தனையோ வகை வகையாய் இதுவரை எகிறிக் குதித்த அவன் உடம்பு, மெதுவாக இரண்டேயிரண்டு துடிப்புடன்….. உயிரைப் பிரிந்தது !
மரணம் அவனை வருடிக்கொண்டது.
இயற்கையின் அழகை ரசித்த படி மங்களத்தின் அழுகை கண்களை விட்டு அடிக்கடி எட்டிப்பார்த்த வண்ணம் . திசைதெறியா உலகொன்றுக்காய் தவிப்புடன் நடக்கிறது…!
நடக்கும் பாதையெல்லாம்.
அவள் இல்லற வாழ்க்கையின் நினைவுகள் அவளை ஆர்ப்பரி;த்துக்கொண்டது.
காதல்.பொல்லாத காதலினால் வந்த இவன் தொடர்பில் ..
மரணத்தின் விளிம்பு வரை ஒவ்வொரு நாளும் இழுத்துச்செல்லும் கொடூரமான வாழ்க்கையை அனுபவித்த வேதனைகள்..
நேற்றுக் கூட தாறு மாறாக நையப்புடைத்துவிட்டு..வைப்பாட்டியோடு சிரித்துக்கொண்டே அவன் வெளிச்சென்ற அந்தக் காட்சிகள்.
படுக்கைக்குள் அவன் புரியும் மிருக வதைகள்..
ஈவிரக்கமற்ற அவன் கொடூர வார்த்தைகள்..
உடம்பெல்லாம் புண்ணாகிப்போன தழும்புகள்…
ஐயகோ..
இஷ்டத்திற்கு அவள் அரவணைத்துக்கொண்ட வாழ்க்கை..இந்த இரவோடு முடிந்துபோனது.
போகும் பாதையில் ஊரறிய அவன் கட்டிய தாலிக்கொடி கூட அவளையறியாமல் கழன்று விழுந்தது.
எங்கே போகிறாள்.? தெரியவில்லையே..
ஓ அதோ அந்த சாக்கடைத் தண்ணீரில் விசம் கலந்த தன் கைகளைக் கழுவிக்கொள்கிறாள்..!
தொடரும்…