தொலைபேசியில் வந்த செய்தியினால் நிலைகுலைந்து போனான் அருண்,,,
அவன் விழும் நேரம் அவன் அருகில் வந்தனர் மனோகரனும், அசோக்கும்,,,,,,,,
“அருண்!!! அருண்!! என்னாச்சு,,,,”- பதறினார் மனோகரன்
அசோக் அருணின் கையிலிருந்து நழுவிய தொலை வாங்கியை எடுத்து தன் காதுகளை அதனிடம் கொடுத்தான் எதிர் முனையில் இணைப்பு துண்டிக்கபட்டதற்கான ஒலி கேட்டது
அந்த தொலைவாங்கியை அதன் இருக்கையில் அமர செய்தான்,,,
அருண் பித்து பிடித்தவன் போல அமைதியாக இருந்தான்,,, மனோகர் அவனை சுய நினைவிற்கு கொண்டுவர முயற்சித்தார்
இப்போது அவருக்கு துணையாய் அசோக்கும் அருணை உசுப்பினான்,,,,,,,
“அருண்!!! அருண்!!! இங்க பாருங்க என்ன பாருங்க என்னாச்சு”- என்றான் அசோக்
அருண் நன்றாக பயந்திருந்தான் என்பது அவன் உடலில் ஊற்றெடுத்த வியர்வையே சொன்னது
சிறிது நேரத்திற்கு பின், பேச ஆரம்பித்தான் அருண்
“சார் !! வேண்டாம் சார் அந்த “சொர்ணக்காட்டுக்கு ” போக வேண்டாம் சார்”- இதையே சொன்னான்
“என்ன அருண் உளறுற”- கோபமானார் மனோகர்
“அங்கிள் கொஞ்சம் இருங்க முதல போன் பண்ணது யாரு என்ன சொன்னாங்கன்னு தெரிஞ்சிப்போம் ” – ஆசுவாச படுத்தினான் அசோக்
“மிஸ்டர் அருண் நீங்க பயப்படாத்தீங்க என்ன நடந்தது போன் பண்ணது யாரு என்ன சொன்னாங்க ”
“சார் அந்த போன்ல,,,,,,,, ஒரு ஆள் என்ட உன் உயிர்க்கு ஆபத்துன்னு சொல்றான் சார்,,, அதுமட்டும் இல்ல,,,,,,,,,,,,,,,,,”- சொல்லிவிட்டு அமைதிகாத்தான் அவனின் பயம் அடுத்த வார்த்தை பேச விடாமல் அவனின் முச்சு குழாயில் தடை செய்ய திணறினான்,,,
“அருண் !!! ரிலாக்ஸ் ரிலாக்ஸ்,,,, பயப்படாத்தீங்க,, அங்கிள் கொஞ்சம் தண்ணி கொண்டுவாங்க ப்ளீஸ் “- என்றான் அசோக்
மனோகரனும் உள்ளே சென்று ஒரு தம்ளரில் தண்ணீர் கொண்டுவந்தார் அதை வாங்கி குடித்தான் அருண்
“சொல்லு அருண் வேற என்ன சொன்னங்க “- கேட்டார் மனோகர்
“சார் அவன் உங்களை உங்களை,,,,,,,,,,,,,,,,,,,,,” சொல்லி கொண்டிருக்கும்போதே அவன் கை கால்கள் வெட்ட ஆரம்பித்தனர்,,,,,,,
“அருண்!! அருண்!!!”
மனோகர். அசோகின் அலறல் அந்த காற்றோடு கரைந்து கொண்டிருந்தது.
தொடரும்…