தணிகாசலம் இறந்துவிட்டார்,,,,,,,,,,, அவரின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்து வீட்டு வந்துவிட்டனர் மனோகரனும் அருணும்,,,,,,,,,,
மனோகரனின் மனம் கரையானை போல அரித்து கொண்டிருந்தது காரணம் தணிகாசலத்தை மருத்துவமனையில் சேர்த்த பொழுது மருத்துவர் கேட்ட கேள்வியும் சொன்ன பதிலும்,,,,,,,,,,,
“டாக்டர் !!! டாக்டர்!!! ”
“சொல்லுங்க என்ன விஷயம்”
“டாக்டர் என் பிரெண்ட தேள் கொட்டிட்டு டாக்டர் ” – படபடப்போடு சொன்னார் மனோகர்
ஸ்ட்ரேக்ச்செரில் படுக்க வைக்க பட்டிருந்தார் தணிகாசலம்,,,,,,, அவர் உடல் நீலம் பூத்திருந்தது ,,, வாயில் நுரை தள்ள ஆரம்பித்திருந்தது
அவரை பரிசோதித்த மருத்துவர் மனோகரனிடம்,
“உண்மைய சொல்லுங்க,,,,,,, இவர தேளா கொட்டுச்சு”
“ஆமான் டாக்டர் ”
“இல்லை இவர் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணாரா?? சைனெட் மாதிரி விஷம் ஏதும் சாப்பிடுருகாறு”
“இல்ல டாக்டர் தேள் தான் கொட்டுச்சு,,, நாங்களே பாத்தோம்”
“அப்படியா!!!!!!! தேள் கொட்டினதுக்கு உயிர் போறது ரொம்ப விசித்திரமா இருக்கே”,,,,,,,,,,,,,,,
நினைவலைகளிலிருந்து வெளியே வந்தார் மனோகர் ,,,,,,,,,,,
ஆனால் மனம் தெளியவே இல்லை,,,,,,,, மேலும் மேலும் குழம்பிய வண்ணமே இருந்தது
அருண் அந்த சாபத்தை முழுமையாக நம்பினான்,,,, இன் அதை பற்றி பேசவோ சிந்திக்கவோ அவனுக்கு துணிவில்லை
ஆனால் மனோகர் விடுவதாய் இல்லை,,,,,,,,,,,
அருண் மனோகரிடம் இந்த விஷயத்தை விட்டு விடும்படி வேண்டினான் ஆனால் மனோகர்,,,
“என்ன அருண் சொல்ற ரெண்டு உயிர் போயிருக்கு அத அப்டியே விட சொல்றியா?”- என்றார்
“சார் ரெண்டு உயிரோட போச்சேன்னு நான் சந்தொசபட்டுடு இருக்கேன் சார் இந்த விஷயம் நொடிக்கு நொடி பூதாகரமா மாறிட்டு இருக்கு வேண்டாம் சார்”- அருண் எவ்வளவோ சமாதானம் சொன்னாலும் மனோகர் மாறுவதாக இல்லை
அவருக்கு ஒரு முடிவு தேவை பட்டது,,,,,,,, அது அவர் அறிவு ஏற்று கொள்வதாக இருக்க வேண்டும்
அந்த சமயம் மனோகர் வீட்டினும் நுழைந்தான் அந்த இளைஞன்,,,,,,,,,
யாரவன் ?????????????
தொடரும்…