வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தான் முடியரசன்,,,,,,
என்ன நடந்தது ஐந்து வினாடி வரை உயிரொடிருந்தவன் இப்போது இல்லை என்ன நிலையற்ற மனித வாழ்க்கை,,,,
அவன் உடலெல்லாம் நீலம் பூத்து போனது,,,, இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை
மனோகர் தன் அலைபேசி மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டார்,,,,,,
காவல் துறையும் தன் வழக்கமான காரியங்களை செய்ய தொடங்கியது
மனோகர், அருண் இருவரும் விசாரிக்க பட்டனர்,,, வேறு ஏதும் தடயம் இல்லாததால் இருவரின் மீதும் பழி விழாமல் தப்பித்தனர்
மனோகரின் வீட்டு விலாசம் மற்றும் தொலைபேசி எண் காவல் துறையிடம் கொடுக்க வேண்டி வந்தது
அதை கொடுத்து விட்டு,,,,,, நடப்பதை வேடிக்கை பார்த்து நின்றனர் இருவரும்
முடியரசனின் உடல் பிரத பரிசோதனைக்காக கொண்டு செல்ல பட்டு கொண்டிருந்தது
எல்லாம் முடிந்ததும் அவன் வீட்டை விட்டு வெளியறினர் இருவரும்,,,,,,,,
இருவரும் காரில் பேசி கொண்டே பயணப்பட்டனர்
“என்ன சார் இப்டி ஆயிடுச்சு??”- கலக்கத்தோடு கேட்டான் அருண்
“எனக்கும் புரில அருண்,,,,, எப்படி இறந்தான் அவன்,,,,,,? எனக்கு எல்லாமே கனவு மாதிரி இருக்கு”- அந்த பிரமிப்பிலிருந்து வெளிவராதவராய் பேசினார் மனோகர்
“இப்ப என்ன பண்ணலாம் சார்,,, அந்த கேஸ்ல நம்மள இன்வோல்வ் பண்ணுவாங்க போல இருக்கே ”
“நாம அவனை கொல்லலையே அப்புறம் ஏன் நீ பயபடுற,,,, அத விடு,,, பக்கதுதுல தான் எண் பிரெண்ட் தணிகாசலம் வீடு இருக்கு வா பாத்துட்டு வருவோம்”
“என்ன சார் பொணத்த பாத்துட்டு ஒருத்தர் வீட்டுக்கு போக கூடாது,,,,, அது நல்ல தில்லை”- என்றான் அருண்
“என்ன நான்சென்ஸ் இது,,,,,,, அப்போ மர்சுவெரி ல வொர்க் பண்றவங்களாம் வொர்க் முடிஞ்சி வீட்டுக்கு போக மாட்டாங்களா ?? அவங்களுக்கெல்லாம் கெட்டதா நடக்குது,,,,,,,,, முதல இந்த மூட பழக்கத்த விடு அருண்,,,, நான் தணிகாசலத்த உடனே பாக்கணும் இந்த காடு பத்தி கேக்கணும்” – விடா படியாய் பேசினார் மனோகர்
அருண் வயிற்றில் புளியை கரைத்தது
“இன்னும் எதோ விபரீதம் நடக்க போகிறது” என்று அவன் உள்மனம் சொன்னது அதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டான்
“சார் என் மனசுக்கு எதோ தப்பு நடக்கும்னு தோணுது இப்போ வேணாம் இன்னோர் நாள் போலாம் சார் ப்ளீஸ் ” – கெஞ்சினான் அருண்
“இல்ல அருண் எனக்கு சில உண்மைகள் தெரிஞ்சாகனும் இல்லேன்னா என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு “- அவர் விடுவதாக இல்லை என்பதை புரிந்து கொண்டான் அருண்
காரை ஒட்டி கொண்டிருந்த அருண் இப்போது அதன் வேகத்தை துரித படுத்தினான்
பின்னிருக்கையில் அமர்ந்திருந்த மனோகர் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்தார் ,,, அவர் அருகில் ஒரு உயிரை பலிவாங்கிய ஓவியம்
சாது பூனையாக,,,,, பல மர்மங்களை உட்கொண்ட படி கிடந்தது
தொடரும்…