முடியரசனை காண வேண்டும் என்ற முடிவோடு அவர் வரைந்த படத்தையும் எடுத்து கொண்டு அவர் அனுப்பிய உரையிலிருந்த விலாசத்தை தேடி சென்றனர் மனோகரனும், அருணும்
இதில் அருணுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை,,, இருந்தும் வேறு வழியின்றி வந்து கொண்டிருந்தான்
அந்த விலாசம் சென்னையின் ஒரு பகுதி பல அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கிடையில் அதிசியமாக ஒரு ஒற்றை வீடு,,,, தேடுவது சிரமாக இல்லை இருவருக்கும்,,,,
இப்போது மனோகரின் மனதில் ஆயிரம் கேள்விகள் அதற்கெல்லாம் பதில் இந்த முடியரசனிடம் தான் கிடைக்கும் என உறுதியாக நம்பினார் மனோகரன்
ஒரு வழியாக முடியரசனின் வீடு வந்து சேர்ந்தனர்,,,,, அழைப்பு பொத்தானை அழுத்தினான்
அருண்
உள்ளே சத்தம் வீரிட்டு அடங்கியது,,,,,,,,,,,,,,,
நிமிடங்கள் கரைந்தது
ஒன்று ,,,,,,,,,,,,,,,,,
இரண்டு,,,,,,,,,,,,,,
மூன்று ,,,,,,,,,,,,,,,,,,,
*
*
*
*
*
*
முழுதாக 15 நிமிடங்கள் ஆகியும் எந்த அசைவும் இல்லை கதவிடம் ,,,,, அது தன் மர உதடுகளை விரிக்க மறுத்தது
“சார் உள்ள யாரும் இல்ல போல இருக்கு” – என்றான் அருண்
மனதில் அதே யோசனையோடு தான் இருந்தார் மனோகர்,,,,,,,
“சார் இங்க நிக்கிறது வேஸ்ட் அவர் எங்கோ போயிருக்காரு போல நாம கிளம்பலாம்” -என்றான் அருண்
மனோகரனுக்கும் அது சரி என படவே கிளம்ப ஆயத்தமானார்
அந்த சமயம் அந்த மரக்கதவுகள் “கிரீச்” என்ற சத்தத்தோடு திறந்தது.
தொடரும்…