சாபம் – 3

சாபம் – 3

அசைவற்ற நிலையிலிருந்த மனோகரனை கலக்கத்தோடு பலமாக எழுப்பினான் அருண்,,,

மெல்ல கண் விழித்தார் மனோகரன்,,,

“சார் என்ன சார் நீங்க இப்படி தூங்குனதே இல்லையே சார் கொஞ்ச நேரத்துல என் உயிரே நின்னுடுச்சு சார்”- தன் பயத்தை சொல்லி முடித்தான் அருண்.

“இல்ல அருண் என்னனு தெரில இன்னைக்கு நீ எழுப்புனதே எனக்கு தெரில்ல”

“அது மட்டும் இல்லை சார் புதுசா நீங்க குரட்ட வேற விட்டீங்க,,,, ரொம்ப வேலை, அலைச்சல் இருந்தப்ப கூட நீங்க இப்படி இருந்தது கிடையாது,,, ரொம்ப வித்தியாசமா சிங்கம் கர்ஜிக்கிற மாதிரி குறட்டை விட்டிங்க”

“குறட்டையா நானா??”

“ஆமாம் சார்,,,,,,,, எனக்கே வித்தியாசமா இருந்துச்சு”

“இன்னோர் விசித்திரமும் இருக்கு அருண்”‘

“என்ன சார் ”

“எனக்கு கனவு கூட வந்துச்சு”

“கனவா ??”

“ஆமா அருண் எனக்கு இதுவரைக்கும் கனவே வந்ததில்லை,,,, இப்போ புதுசா ஒரு கனவு வந்துச்சு”

“என்ன கனவு சார்??”

” ஒரு காட்டுக்கு நடுவுல பெரிய ராஜ்ஜியம் அதுல ஒரு சிம்மாசனம் அங்க நான் உக்காந்துருக்கேன்,,,
என்ன சுத்தி தங்கம், வெள்ளி, வைரம்னு பொக்கிஷம் கொட்டி கெடக்கு,,,,, ஆனா அங்க ஒரு,,,,,,”- முடிக்காமல் விட்டார் மனோகரன்

“என்ன சார் சொல்லுங்க???” – அவசர படுத்தினான் அருண்

ஆனால் மனோகரன் தன் பேச்சை நிறுத்திவிட்டு தன் அறையின் சுவரையே பார்த்தார்

அவர் பார்க்கும் திசையை அருணும் பார்த்தான்.,,,,

“அருண் இது என்ன புதுசா ஒரு போட்டோ”- தன் படுக்கைக்கு நேரே புதிதாய் மாட்ட பட்டிருந்த அந்த ஓவிய படத்தை காட்டி கேட்டார்

“அதுவா சார், உங்க ரசிகர் ஒருத்தர் உங்களுக்கு பரிசா அனுப்பிருந்தாரு,,,, நீங்க தான சொன்னீங்க,,, ரசிகர்கள் கொடுக்கும் பரிசு ஏதும் வீணாக்க கூடாது அவங்கள மரியாதை செய்யும் வகைல உபயோகம் பண்ணனும்னு அதன் உங்க அறைலையே மாட்டிவச்சேன்”

மனோகர் எழுந்து சென்று அந்த படத்தை பார்த்தார்,,,,

அதில் ஒரு அழகிய பசுமையான மரங்கள் அடர்ந்த காடு, அருவி, பூக்கள் ,மாலை நேர சூரியன், வீடு செல்லும் பறவை என மிக தத்துருபமாக வண்ண கலவை கொண்டு வரையபட்டிருந்தது,,,,, அதன் அடியில் அன்பு பரிசு “முடியரசன்” என்று இருந்தது

“என்ன சார் அந்த படத்தையே பாக்குறீங்க??”

“இல்ல அருண் இந்த படம் தான் என் கனவுல வந்தது,,,, இது எந்த மரம் இருக்கே இங்க தான் என் சிம்மாசனம் இருந்துச்சு,,,, இந்த பூக்கள் இருக்கே இதெல்லாம் தங்கமா, வைரமா இருந்துச்சு”- ஆச்சர்யத்தோடு சொன்னார் மனோகரன்

“சார் நாம பாக்குற விஷயம் தான் சார் கனவா வரும் நீங்க தூங்குரத்து முன்னாடி இந்த படத்த பாத்துருப்பீங்க இத பத்தி என்ட கேக்கணும்னு நெனச்சிட்டே படுத்துருப்பீங்க அதான் கனவா வந்துருக்கு”

“ஆனா அந்த தங்கம், வைரம் லாம்”

“நீங்க தான சார் சொன்னீங்க நெஜத்தில நடக்காததெல்லாம் கனவா வரும்னு அது மாதிரி ஏதாவது இருக்கும்”- பலவாறாக சமாதானம் சொன்னான் அருண்

ஆனால் மனோகர் மனம் எதோ பாரத்தை சுமந்து கொண்டிருந்தது

“சார் நீங்க freash ஆயிட்டு வாங்க,,,,, காபி தரேன்”- சொல்லி கொண்டு சமையல் அறை நோக்கி போனான் அருண்

மனோகரனும் மனம் அமைதி கொள்ளா விட்டாலும் யோசனைகளை விட்டு குளியல் அறை கதவுகளை திறந்தார்,,,,,,,,,,,,,

சரியாக காத்திருந்தது போல அவர் தலையில் விழுந்தது ஒரு பல்லி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top