மனிதன் எது வரை முன்னேறலாம் என்ற கேள்வி எழுந்தால் அதற்கு எல்லை எதையும் இயற்கை வகுக்கவில்லை. முயற்சிக்க முயற்சிக்க நன்மை தான். ஒரு விறகுவெட்டி காட்டுக்குப் போனான். எதிரே ஒரு துறவி வந்தார். “”மகனே! முன்னேறிச் செல்,” என்று சொல்லிவிட்டு, வேகமாகச் சென்று விட்டார்.
துறவியின் வார்த்தை விறகுவெட்டியின் மனதில் பதிந்தது. அவன் வழக்கமாக செல்லும் தூரத்தை விட மேலும் சில மைல்களைக் கடந்தான். அங்கே சந்தனமரங்கள் இருந்தன. அவற்றை வெட்டி விற்று பணக்காரன் ஆனான். துறவியின் வாõர்த்தை மட்டும் மறக்கவில்லை.
துறவி “இது போதும்’ என்று சொல்லவில்லையே! “முன்னேறு’ என்று தானே சொன்னார் என சிந்தித்தவனாய் மேலும் சில மைல்களைக் கடந்தான். அங்கே வெள்ளிச்சுரங்கம் இருந்தது. அடேயப்பா! வெட்டியெடுத்து விற்று மேலும் பணம் சேர்த்தான். இப்படியே தங்கச்சுரங்கம், வைரச்சுரங்கம் என அவனது பயணம் இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது. இப்போது, அவன் உலகப் பணக்காரர் வரிசையில் இருக்கிறான்.
எந்தச்சூழலிலும் முயற்சியை மட்டும் கைவிடாதீர்கள். மேலும் மேலும் முன்னேறுவீர்கள்.