இறுதியாக ESP பற்றி சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தேன், இப்போது மேலும் பல தகவல்களை அறிந்துகொண்டு தொடரும் நோக்கத்தில் இந்தப்பதிவு…
இறுதியாக சிவனின் ESP சக்தி பற்றி பேசும் போது, அந்த சக்தியை அதிகரிக்க தியானம், தவம் உதவுமா என்ற எனது சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தேன். இப்போது தேடியதில் அந்த சந்தேகத்திற்கு ஓரளவிற்கு விடை கிடைத்துள்ளது, அதை பார்க்கலாம்…
நமது புராணக்கதைகளில் தவம் செய்பவர்கள் “ஓம்” என்று தொடர்ச்சியாக உச்சரித்துக்கொண்டிருப்பவர்களாக காட்டப்படுகிறார்கள். ( புராணங்களை தொலைக்காட்சி தொடராக எடுக்கும் போது, அந்த உச்சரிப்பு போக போக அதிகமாவதாக காட்டுவார்கள், அதனால் வானம் அதிர்வது போலெல்லாம் காட்டுவார்கள்.)
இது தொடர்பாக பார்த்தோமானால்; அ,ஆ,A,B போன்ற அனைத்து எழுத்துக்களையும் உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் விட “ஓம்” என்ற சொல்லை உச்சரிக்க குறைவான நேரம் எடுத்துக்கொள்கிறது (அரை மாத்திரை அளவு என்பார்கள்.)
[ விஞ்ஞான உலகும் பிரபஞ்சத்திம் பெருவெடிப்பு (Bigbang) நிகழ முன்னர் வெறுமை சூழ்ந்த பிரதேசத்தில் வெறும் “ம்ம்ம்/ஓம்” என்ற சத்தம் மட்டுமே இருந்திருக்க கூடும் என கருதுகிறார்கள். (இந்து மதமும் அதைத்தான் சொல்கிறது.) ]
எந்தவித வெளி நினைவுகளும் இல்லாது இந்த “ஓம்” என்ற ஒலியை உச்சரிக்கும் போது ஆரம்பத்தில் மந்தமாக வினாடிக்கு ஒன்று என ஆரம்பித்து படிப்படியாக வினாடிக்கு பல எண்ணிக்கையில் மாறும். (இதை தியானத்தினூடாக அனுபவித்து பார்க்கமுடியும்.)
ஒவ்வொரு சத்தமும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் பாடசாலைகளில் கற்ற ஒன்று. அதே போல் “ஓம்” சத்தமும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். ஆனால், ஓம் ஒலியினூடாக உருவாக்கும் அதிர்வலைகளிற்கான சக்தி சற்று அதிகமானது. காரணம், அதன் ஒலிப்பு நேரம் மிகக்குறைவானது (அரை மாத்திரை).
இந்த அதிர்வலைகள் என்பது சாதாரணமானவை அல்ல! நமது காதுகள் 20-20000 Hz வரையான அதிர்வுகளையே கேட்கும். அதற்கு மேல் வரும் அதிர்வொலிகளை எம்மால் கேட்கமுடியாது. மேலும், இந்த அதிர்வுகள் ஒரு சந்தத்திற்கு (ஒழுங்கில்) ஏற்ப ஏற்படுத்தப்படும் போது பொருட்களுடன் பரிவு நிகழும். அதாவது, ஒவ்வொரு பொருட்களுக்கும் இயற்கையாகவே ஒரு அதிர்வெண் உண்டு, அந்த அதிர்வெண்ணுடன் உராயக்கூடியதாக அதிர்வலைகள் ஏற்படுத்தப்படும் போது பரிவு நிகழும். பரிவின் போது குறிப்பிட்ட பொருள் தனது நிலையை தகர்க்கும்.
உதாரணமாக,
பிர்த்தானியாவில் பாரிய வாகனங்கள் செல்லக்கூடிய ஒரு பாலத்தில், குறிப்பிட்ட நாளில் இராணுவ ஊர்வலம் ஒன்று March-past செய்து செல்லும் போது, அப்பாலம் திடீரெனெ உடைந்து நொருக்கியது.
கணரக வாகனங்கள் செல்லக்கூடிய அந்தப்பாலம், சிறிய இராணுவக்குழு செல்லும் போது உடைந்து நொருங்கியதன் காரணம், March-past இன் போது உருவான அதிர்வலைகளால் ஏற்பட்ட பரிவினாலேயே ஆகும்.
இதே போன்று, ரஷ்ய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அதி அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறிய பெட்டி ஒன்று, ஒரு கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டு அதிர்வெண்கள் கூட்டப்பட்ட போது, திடீரென சில வினாடிகளில் அக் கட்டிடம் தரைமட்டமானது!
இவ் இரு உதாரணங்களே அதிர்வெண்களின் சக்தியை எடுத்துக்காட்ட போதுமானவை.
அதே போல், ஓம் என்ற ஒலி ஏன் நமது universal mind – பொது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதை சிந்திக்கவேண்டும்! universal mind நமது கட்டுப்பாட்டிற்குள் வரும் போது நமது ESP சக்தி அதிகமாகும். (7 ஆம் 8ஆம் அறிவுகளில் உச்சக்கட்ட அறிவாக முழுமையான பிரபஞ்ச கட்டுப்பாடு கொள்ளப்படுகிறது. இது இறைத்துவம் எனப்படுகிறது!)
எனினும், என் எண்ணப்படி இந்த universal mind ஐ கட்டுப்படுத்தும் சக்திக்குரிய அதிர்வெண்களை தவம்/ தியானம் செய்யும் அனைவராலும் பெற்றுவிட முடியாது. ஆகவே, அவரவர் முயற்சிக்கும் வலிமைக்கும் ஏற்ப அதற்கு முன்னருள்ள சில சக்திப்படிகளை அடையமுடியும். அதுவே சிவன் மற்றும் அவருடன் இருந்தவர்களின் தவம், தியானம் போன்றவைக்கு காரணமாக அமைந்திருக்க கூடும்! சிவன் மட்டுமன்றி, ஜேசு, புத்தர் கூட இதே முறையில் புனிதர்களாகி இருக்க கூடும், இதில் ஜேசுவிற்கு இயற்கையிலேயே ESP சக்தி இருந்திருக்க கூடும்; புத்தர் தியானத்தினூடாக அடைந்திருக்க கூடும்.
இது பற்றி மேலும் பேசலாம், அதற்கு முன்னர் universal mind என்றால் என்ன என்பதை சொல்லியாகவேண்டும். பதிவின் நீளம் கருதி அதை எதிர் வரும் பதிவுகளில் பார்க்கலாம். ESP சக்தி என்பது ஒரு மர்மானதும் சுவாரஷ்யமானதுமான பகுதி, பல சம்பவங்கள் இருக்கின்றன, தொடர்ந்திருங்கள் அறியலாம்… முயற்சிக்கலாம்…
இவை ESP ஆக்கத்தின் போக்கிலான என் சிந்தனைகளே! எந்த மதத்தையும் இழிவுபடுத்துவது நோக்கமல்ல!