இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் ஃபிட்னெஸ் என்பது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் முக்கியமான பங்கைப் பெற்றுவிட்டது. அதைச் சரிவரச் செய்வதற்கு உதவியாக இருப்பதுதான் ஃபிட்னெஸ் கேட்ஜெட்டுகள். இந்த ஃபிட்னெஸ் கேட்ஜெட்டுகளை வைத்துக்கொண்டு, நமது ஃபிட்னெஸ் பயிற்சிகளை யார் உதவியும் இல்லாமல், எந்தத் தவறும் இல்லாமல் செய்யலாம்.
1. Nike+Fuelband:
கவர்ச்சியாகக் காட்சியளிக்கும் இந்த கேட்ஜெட்டைக் கையில் ஒரு ப்ரேஸ்லெட்டைப்போலஅணிந்துகொள்ளலாம். இந்தக் கைப்பட்டையில் (Band) உள்ள சென்சார்கள் மனிதனின் தினசரி அசைவுகளைக் கண்காணித்துக் கொள்கிறது. கண்காணித்த தகவல்களை ‘Nike Fuel’-களாக மாற்றிவிடும். ‘Nike Fuel’ என்பது ஒவ்வொரு வேலைக்கும் நாம் செலவிடும் சக்தியின் ஒரு புதுமையான அளவுகோல். இதைவைத்து ஒருவர் தங்களது தினசரி உழைப்பைக் கண்காணித்துக் கொள்ளலாம். இந்தக் கைப்பட்டையை ப்ளூ-டூத் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் இணையத்தில் ஒரு நைக் அக்கவுன்ட்டும் தேவை. இந்தக் கைப்பட்டை இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 14,590 என்ற விலையில் விற்கப்படுகிறது.
2. Polar RC*3 GPS:
இந்த கேட்ஜெட் சைக்கிளிங் செய்பவர்களுக்கும் ஓடுபவர்களுக்கும் மிகப் பயனுள்ள கேட்ஜெட்டாக அமையும். பார்ப்பதற்கு ஒரு வாட்ச் போலக் காட்சியளிக்கும் இந்த கேட்ஜெட் GPS வசதியைக் கொண்டது. இதன்மூலம் ஒருவர் பயணத்தைக் கடக்கும் தூரம், நேரம் மற்றும் வேகம் ஆகியவற்றைக் கண்காணித்துக் கொள்ளலாம். இந்த விவரங்கள் அனைத்தும் ‘Polar’ இணையதளத்தின் அக்கவுன்ட்டில் சேமிக்கப்படும்.
இந்த கேட்ஜெட்டின் விலை ரூ.20,000.
3. Griffin Adidas MiCoach Armband:
இந்தக் கைப்பட்டையை கையின் மேற்பகுதியில் மாட்டிக்கொள்ளலாம். இந்த கைப்பட்டை முழுவதும் ‘நைலானால்’ ஆனது. மேலும், இதன் எடை மிகக் குறைவு. எனவே, இந்தக் கைப்பட்டையை கையில் அணிவதற்கு எந்த இடையூறும் இருக்காது. இந்தக் கைப்பட்டையில் உங்களது ஸ்மார்ட்போன் அல்லது ஐ-பேடு ஆகியவற்றைப் பொருத்திவிடலாம். ஓடும்போதும் வொர்க்-அவுட் செய்யும்போதும் இந்த பட்டை கையில் அணிவதற்கு வசதியாக இருக்கும். ஸ்மார்ட் போன்/ஐ-பேடில் உள்ள அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த இந்தக் கைப்பட்டை மிக உதவியாக இருக்கும். ஹெட்-போன்ஸ் இணைப்பதும் இந்தப் பட்டையில் சுலபம்தான். இதன் விலை இந்தியாவில் ரூ.2,500/
4.Beddit – Sleep Monitor:
நல்ல தூக்கமே நல்ல ஆரோக்கியத்துக்கு வழி. அந்த வகையில் நம் தூக்கத்தைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டதே இந்த ‘Beddit’ கேட்ஜெட். இந்த கேட்ஜெட் பார்ப்பதற்கு ஒரு பெரிய கைப்பட்டை (Band) போல இருக்கும். இதை நாம் தூங்கும் படுக்கையில் நன்கு விரித்து, அதன் மீது படுத்துத் தூங்கினால் போதும். இந்த கேட்ஜெட் தூங்குபவர்களின் இதயத் துடிப்பு, சுவாச அளவு, தூக்க சுழற்சி மற்றும் தூங்கும் நேரம் ஆகியவற்றைக் கண்காணித்துக் கொள்ளும். கண்காணித்த தகவல்களை வைத்துக் கொண்டு 110 மதிப்பெண்ணுக்கு மார்க்கும் தரும். இந்த மார்க்கை ப்ளூடூத் மூலம் நமது போனுக்கு அனுப்பி விடும். இதன்மூலம் நம் தினசரி தூக்கத்தின் தரத்தைத் தெரிந்துக்கொள்ளலாம். இதன் விலை ரூ.9,200.
குறிப்பு: இந்த கேட்ஜெட்டுகளை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்த வேண்டும்!