பலாக்காய், கலாக்காய், காரட்… என்னென்ன சத்துக்கள் உள்ளது? ––––––––––––––––––––––– பலாக்காய்! இதில் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளது. வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு, இந்த காய் வேண்டாம். இதன் பலன்கள் என்று பார்த்தால், செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும். காரட்! இதில், விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் ஆகியவை உள்ளது. அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு, குழந்தைகளுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. யாருக்கு ... Read More »
Yearly Archives: 2017
இலக்கிய ஆய்வின் வழிகாட்டி
May 12, 2017
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (பிறப்பு: 1901, ஜன. 8- மறைவு: 1980, ஆக. 27) 1901, ஜனவரி 8-ம் நாள் தமிழுலகம் ஒரு தவப்புதல்வனைக் கண்டெடுத்தது. ஆம்! அந்த நாள்தான் தெ.பொ.மீ. உலகைக் கண்திறந்து பார்த்த நாள். சென்னை- சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் ஒருங்கே பெற்ற பொன்னுசாமி கிராமணியார் இவரை மகவாகப் பெற்ற நாள். தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர் தெ.பொ.மீ.யின் இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பது முற்றிலும் உண்மை. பொன்னுசாமி கிராமணியாருக்கு தமிழின் மீதும் தமிழறிஞர்களின் ... Read More »
சிறுநீர் கோளாறை சீர்செய்யும் துளசி!
May 11, 2017
சிறுநீர் கோளாறை சீர்செய்யும்… நீரிழிவை கட்டுப்படுத்தும் துளசி! ––––––– துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது, துளசிச்செடி தான். அவரவர் வசதிக்கேற்ப, சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால், அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாக கிடைக்கும் அந்த துளசியில் தான், எத்தனை எத்தனை மகத்துவங்கள். துளசி இலையை, ... Read More »
இசையால் ராமனுடன் கலந்தவர்
May 11, 2017
தியாகராஜ சுவாமிகள் (பிறப்பு: 1767 – முக்தி: 1848, பகுள பஞ்சமி) (ஆராதனை நாள்: ஜன. 10) இசைக்கலையில் உச்சநிலையாக கர்நாடக சங்கீதம் விளங்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் மூலம் இறைவழிபாட்டில் சிறப்புத் தன்மையை ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர், புரந்தரதாசர், மீராபாய், கபீர்தாஸ், குருநானக் போன்ற மகான்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களை நாதயோகிகள் என்பார்கள். இவர்களுள் முதன்மையானவர் என போற்றப்படுபவர் சங்கீத ஜோதி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். 1767 முதல் 1848 வரை உள்ள 80 ஆண்டுகளை ‘தியாகராஜ ... Read More »
வாயு, கபம், பித்தம் மூன்றையும் சமப்படுத்தும் கொத்தமல்லி விதை!
May 10, 2017
வாயு, கபம், பித்தம் மூன்றையும்… சமப்படுத்தும் கொத்தமல்லி விதை! ––––––––––––––––––––––––––––– சித்த மருத்துவம், ஒரு மனிதனின் உடலில் வாயு, பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருந்தால் எந்த வியாதியும் அண்டாது என்று கூறுகிறது. அதற்கு உதவும் பல வாசனைப்பொருள்கள் பற்றி நேற்று பார்த்தோம்… அதன் தொடர்ச்சியை இன்று பார்க்கலாம்… கொத்தமல்லி விதை: வாயு, கபம், பித்தம் மூன்றையும் சமப்படுத்தும் ஒரு அரிய மருந்து. வாயு சம்பந்தமான வயிறு உப்பசம், உணவு செரிமாணமில்லாமை, பசியின்மை, ஏப்பம் போன்றவற்றிக்கும், கபம் ... Read More »
சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்
May 10, 2017
சுவாமி விவேகானந்தர் (பிறப்பு: 1863 ஜன. 12- மறைவு: 1902, ஜூலை 4) நமது தேசத்தின் மகத்தான ஒரு துறவியின் 150 ஆவது பிறந்த வருடத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நம்மில் சிலருக்கு ஒரு கேள்வி எழலாம். “மாறி வரும் தற்போதைய நவீன சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களுக்கான அவசியம் என்ன?” ஏனெனில் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலைகள் முற்றிலும் வேறானவை. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் நமது நாடு பெருமளவு மாறியுள்ளது. ... Read More »
பூசணிக்காய், சுண்டைக்காய்… என்னென்ன சத்துகள் உள்ளது?
May 9, 2017
பூசணிக்காய், சுண்டைக்காய்… என்னென்ன சத்துகள் உள்ளது? ––––––––––––––––––––––– கொத்தவரைக்காய்: இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும் படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும். பூசணிக்காய்: இதில் புரதம், கொழுப்பு சத்துக்கள் உள்ளது. இதனை, ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது. யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கும், மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கும் மிகமிக நல்லது. ... Read More »
மாற்றம் விரும்பிய சனாதனி
May 9, 2017
மகாதேவ கோவிந்த ரானடே (பிறப்பு: 1842, ஜன. 18- மறைவு: 1901 ஜன. 16) நமது நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட பெருமக்களில் ஒருவர் மகாராஷ்டிராவில் பிறந்த மகாதேவ கோவிந்த ரானடே. சிறந்த அறிவுஜீவி, சீர்திருத்தவாதி, எழுத்தாளர், நீதிபதி, அரசியல் தலைவர் என்ற பல பரிமாணங்களை உடையவர் ரானடே. மராட்டியத்தின் நாசிக் மாவட்டத்தில், நிமாத் என்ற ஊரில் மிகவும் பாரம்பரியமான சித்பவன் பிராமணர் குடும்பத்தில் 1842, ஜனவரி 18-ல் பிறந்தார் ரானடே. தனது பட்டப்படிப்பு, சட்டக்கல்வி முடித்தவுடன் (1871) மும்பை சிறுநீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாகச் சேர்ந்தார். பிற்காலத்தில் ... Read More »
தக்காளி, மாதுளை, நெல்லி… கோடை காலத்தின் அமிர்தம்!
May 8, 2017
தக்காளி, மாதுளை, நெல்லி… கோடை காலத்தின் அமிர்தம்! –––––––––––––––––––––––––– கோடை வெயிலில் உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி எளிய சில வழிகளை நேற்று பார்த்தோம்… இன்று மேலும் சில வழிமுறைகளை பார்ப்போம்… தினமும், வெள்ளரி, கோஸ், பூசணி, வாழைத்தண்டு, கேரட், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை இவைகளை ஜூஸ் செய்து சாப்பிடுங்கள். இவை உங்களை கோடைக்காலத்தில் நலமாக வைத்திருக்க உதவும். இலகுவான புரதத்தினை சேர்த்துக் கொள்ளுங்கள். சோயா, பருப்பு வகைகள் போன்றவை எளிதான சத்தான புரதங்கள். பாதாம், பிஸ்தா ... Read More »
தேசத்தின் சொத்து
May 8, 2017
ப.ஜீவானந்தம் (பிறப்பு: 1907, ஆக. 21 -மறைவு: 1963, ஜன. 18) வீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை தமிழகத்தில் வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம். நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி, பட்டப்பிள்ளை – உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து. அவர்கள் குல தெய்வம் அது. வெள்ளையரை எதிர்த்துப் போராடிய காலம். திராவிடர்களுக்கு இழைக்கப்படும் ... Read More »