சோம்பு:- அஞ்சரைப் பெட்டிக்குள்ளேயே ஆயிரம் மருந்துகள் உண்டு. அந்தளவிற்கு நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். வீட்டுச் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் சோம்பு, தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இது பூண்டு வகையைச் சார்ந்தது. இலை, வேர் மற்றும் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. விதைகளில் இரண்டு வகை உண்டு. பண்டைய வல்லுநர்கள் இத்தாவரத்தினை ... Read More »
Yearly Archives: 2017
கண்ணாடிச் செங்கல்!!!
February 18, 2017
சைனாவின் சூஷுவானில் பிறந்த சா’ன் ஆசிரியர் மாசூ தன்னுடைய சிறு வயதில் அனுபவமற்ற இளவயது துறவிகளுடன் புத்த விகாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பன்னிரண்டாம் வயதில் தன்னையும் துறவறத்தில் ஈடுபடுத்திக் கொண்டான். நான்யூவேஷான் மலையிலிருந்த பான் ஜோ சூ கோயிலின் மாண்புமிக்க தலைமைக் குருவாக இருந்தவர் ஹுவாய் ஜாங், அங்கு சா’னினை கற்பதற்காக வந்திருந்த மாசூவினைப் பார்த்தவுடன் தன்னொளி பெறுவதற்கு தகுதியானவனாக இருந்ததைக் கண்டார். ஹுவாய் ஜாங் மாசூவினைப் பார்த்து, “எதற்காக உட்கார்ந்த நிலையில் செய்யும் சா’ன் தியானத்தினைப் ... Read More »
மா. சிங்காரவேலர்!!!
February 18, 2017
உலக அளவில் புகழ்பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் மகாத்மா காந்தி, ஈ.வே.ரா மற்றும் மா. சிங்காரவேலர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தையாக கருதப்படும் சிங்காரவேலர் தொழிற்சங்க இயக்கத்தின் தந்தையாகவும், விஞ்ஞானப் பகுத்தறிவு பயிலும் சமத்துவத்தின் தந்தையாகவும் விளங்கினார். 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் வெங்கடாசலம் செட்டி, வள்ளியம்மை ஆகியோருக்கு 3வது மகனாக பிறந்தார். கந்தப்ப செட்டி வம்சத்தில் உயர்கல்வி பெற்றவர்களில் இவர் ஒருவரே. 1881 ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் ... Read More »
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்!!!
February 18, 2017
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்’ என்பதை தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆன்மீகப் பேரொளியை, அமெரிக்கா, ஐரோப்பா எனப் பிறநாடுகளுக்கும் கொண்டுசென்று, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதைத் தன் அனுபவத்தின் ... Read More »
கீரை சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்!!!
February 17, 2017
நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்…?? தினமும் உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் எந்த நோய்களும் வராது. கொத்தமல்லி கீரை – மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும். அரைக்கீரை – நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும். வள்ளாரை – நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும். அகத்திக்கீரை – மலச்சிக்கலைப் போக்கும். முளைக்கீரை – பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும். பொன்னாங்கன்னி – இரத்தம் விருத்தியாகும். ... Read More »
ஜே.கிருஷ்ணமூர்த்தி!!!
February 17, 2017
கொள்கைகள் முட்டாள்தனமானவை – ஜே.கி ஆன்மிக குருமார்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் பஞ்சமில்லாத நாடு இந்தியா. இந்த மண்ணில் பிறந்த மரபார்ந்த தத்துவ ஞானிகளில் ஒருவரல்ல, ஜே.கே. என்று அறியப்படும் ஜித்து கிருஷ்ணமூர்த்தி. இந்திய தத்துவ மரபின் எந்தப் பிரிவுக்குள்ளும் வகைப்படுத்தப்பட முடியாதவர். அவர் யோகியோ முனிவரோ அல்ல. குருவோ மடாதிபதியோ அல்ல. எந்தத் தத்துவத்தையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால், 20-ம் நூற்றாண்டின் முக்கியமான தத்துவ ஞானிகளில் ஒருவராக உலகம் முழுவதும் அவர் மதிக்கப்படுகிறார். எந்த நூலையும் யாருடைய ... Read More »
உருவ வழிபாடு!!!
February 17, 2017
ஹுவாங்னியா என்ற ஸென் ஆசிரியர் யேன்குவாங்கினை சந்திப்பதற்காக சென்றார். யேன்குவாங்கி ஆசிரியராக இருந்த புத்த கோயிலிற்குள் நுழைந்தவர் அமைதியாக புத்தச் சிலையின் முன் தலை வணங்கி நின்றார். அந்த சமயத்தில் டா’ங் ராஜ வம்ச பரம்பரையைச் சார்ந்த ஷூவான்சூங் என்ற வாலிபன் புதிதாக சமய சேவையைப் பற்றி அறிவதற்காக அங்கு வந்திருந்தான். ஹுவாங்னியா செய்த செயல் அனைத்தையும் கவனித்த ஷூவான்சூங், “உண்மை வழியினை அடைய முயல்பவர்களுக்கு, புத்தாவினை தலை வணங்கத் தேவையில்லை, துறவறம் ஏற்க வேண்டியதில்லை (அ) ... Read More »
எஸ். வையாபுரிப்பிள்ளை!!!
February 17, 2017
பேரறிஞர் தமிழறிஞர் : பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கால மொழி ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படும் வையாபுரிப்பிள்ளை இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு வரன்முறையான ஆராய்ச்சி நிலைப்பட்ட வரலாறாகப் பரிணமிப்பதற்கு பேரா.ச.வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் ... Read More »
பதிலா உயிரா!!!
February 16, 2017
ஒரு நாள் எல்லாராலும் உயர்வாக கொண்டாடப் பட்ட சா’ன் ஆசிரியர் ஷிஷைன் தன்னுடைய சீடர்களை சோதித்து பார்ப்பது என முடிவெடுத்தார். “உண்மை வழியினை அடையத் தேடும் போது, ஒரு உயரமான மரத்தின் கிளையினைப் பல்லால் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு சமமாவோம்” என்றவர். “கீழே சவகாசமாக அமர்ந்திருக்கும் மற்றொரு மனிதன், மேலேத் தொங்கிக் கொண்டிருக்கிறவனைப் பார்த்து, ‘மேற்கிலிருந்து போதிதர்மா சைனாவிற்கு வந்ததன் காரணம் என்ன?’ என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அப்பொழுது மேலேயிருப்பவன் பதில் ... Read More »
நாலு வார்த்தைக்கு நன்றி!!!
February 16, 2017
அந்த நாலு வார்த்தைக்கு நன்றி! சர்.வின்ஸ்டன் சர்ச்சில், இங்கிலாந்தில் பிரதமராக இருந்தவர். சர் பட்டம் வாங்கிய இவர், பள்ளிப்படிப்பில் எப்படி தெரியுமா? இவருக்கு ஆங்கிலமே வராது. ஆங்கிலத்தில் பெயிலானதற்காக, ஒரே வகுப்பில் மூன்று வருஷம் இருந்தார். இப்படிப்பட்டவர்,விடாமுயற்சியுடன் படித்து “சர்‘ பட்டம் வாங்குமளவு தகுதி பெற்றார். வின்ஸ்டன் சர்ச்சிலின் தலையில் தொப்பி, கையில் ஊன்றுகோல், வாயில் சுருட்டு எப்போதும் புகைந்து கொண்டிருக்கும். ஒருமுறை, அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார். ஆங்கிலத்தில் “வீக்‘ ஆக இருந்த அவர், ... Read More »