இவர திருத்தவே முடியாதுங்க…. ஒரு வாஸ்து சாஸ்திர நிபுணர் என்று தன்னையே தொலைக்காட்சி விளம்பரம் செய்யும் ஒருவர் இருந்தார் … கணவன் மனைவி அவரிடம் சென்றால் ..உங்கள் வீட்டில் அக்கினி மூலை சரியில்லை அதானால் தான் உங்களுக்குள் சண்டை என்பார் …! யாரும் நோய் என்று சென்றால் …! வீட்டில் வாயு மூலை சரியில்லை அதானால் தான் உங்களுக்கு வாயு தொல்லைகள் என்பார் …! ஒருநாள் திடீர் என ஒரு அறிக்கை விட்டார் …! மனிதனுக்கு இருதயம் ... Read More »
Yearly Archives: 2017
கடவுள் காத்து இருப்பார்!!!
March 15, 2017
மிகவும் பழமையான வீடு, 60 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது, அந்த காலி இடம் வாங்கும்போது அந்த இடத்தில ஒரு சிறிய மாமரம் இருந்தது, அந்த வீட்டை கட்டிய தொழிலாளர்கள் அந்த மரத்தின் கீழ் அமர்ந்துதான் மதிய உணவு உண்பார்கள். அந்த வீட்டு முதலாளிக்கு அந்த மாமரத்தின் மீது தனி பாசம், அந்த மரத்தை போலவே அவரது வாழ்வும் குழந்தை குட்டியென சந்தோஷமாக வளர்ந்தது அவருக்கு இப்போது 90 வயது, மகன்களுக்கு திருமணம் ஆகி பின் பேரப்பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி ... Read More »
தண்ணீர் அதிகம் குடிக்க!!!
March 15, 2017
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!!! சரியான அளவில் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இதனால் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு, நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு, மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உறுப்புகள் பாதுகாப்பட்டு, நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலின் வெப்பமும் சீராக இருக்கும். மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 ... Read More »
அன்பே சிவம்!!!
March 15, 2017
“ரித்தீஷ்… இன்னிக்கு பிரதோஷ நாள். இந்த பாலைக் கொண்டு போய் ஈஸ்வரன் கோயிலில் சுப்ரமணிய அய்யரிடம் கொடு. அவரு நந்திக்கு பாலாபிஷேகம் செய்வார்”, என்று அம்மா என்னிடம் பால் தூக்குப் பாத்திரத்தைக் கொடுத்தாள். நான் அதை வாங்கிக் கொண்டு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு பஸ் நிலையம். அங்கே பயணிகள் அமர்வதற்கான சிமெண்ட் இருக்கையின் கீழே நான்கு நாய்க் குட்டிகள். அதன் தாய் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. குட்டிகள் “க்யோம்..க்யோம்’ என்று கத்தியவாறே ... Read More »
இன்றைய நகைச்சுவை!!!
March 14, 2017
நாராயணசாமிக்கு தற்போது பார்த்துவரும் பணியை தொடர முடியாத சிக்கல் எழுந்துள்ளதால், ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஒரு நாள் நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டார். அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார், “புயல் வருமானால் என்ன செய்வீர் ?” என்று. நாராயணசாமி சொன்னார், “நங்கூரத்தை நாட்டுவேன்”என்று. “முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?” “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்” இப்படியே கேள்வி பதில் சென்று கொண்டிருக்கையில், “…பத்தாவது புயல் ... Read More »
நம்புங்கள்..! நீங்கள்தான் சிறந்தவர்..!!!
March 14, 2017
“நீங்கள்தான் உலகிலேயே அழகானவர். அறிவுள்ளவர். அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். உங்கள் திறமையில் எந்தச் சந்தேகமுமில்லை. நீங்கள் படிக்கின்ற பாடக் கல்வியில் தலை சிறந்தவர்.” என்று உறுதியாக நம்புங்கள். ஆனால், நீங்கள் படிக்கின்ற கல்வியின் கூடவே கொள்ள வேண்டிய மென் திறன்தான் உங்களைத் தனித்திறனுள்ளவர்களாகக் காட்டி மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி, உங்களை உயர்நிலையை அடையச் செய்யும். நாம் நம் முன்னேற்றத்தில் கவனம் கொள்ளாமல் அடுத்தவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோம். நமக்குப் பிடித்த நபர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்ற ... Read More »
மூளையைப் பாதிக்கும் விஷயங்கள்!!!
March 14, 2017
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும். அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். புகை பிடிப்பதனால் மூளை சுருங்கவும், அல்ரஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதனால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் ... Read More »
தந்தைக்கு பாடம்!!!
March 14, 2017
விடுமுறை நாள் என்றாலே வீட்டில் அவ்வப்போது செல்ல சண்டைகள் நடக்கும். குடும்பம் என்றால் சண்டைகள் நடப்பது சகஜம் தானே. இன்று அந்த செல்ல சண்டை நடந்தது மகளுக்கும் தாய்க்கும் நடுவே. யாரின் தந்தை அதிக பாசக்காரர் என்ற சண்டை தான் தாய்க்கும், மகளுக்கும் நடுவே.. நான் எதைக்கேட்டாலும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் தாய். நான் கேட்காமலேயே அனைத்தையும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் மகள். என்னை தங்கத் தட்டில் தாங்கியவர் என் தந்தை என்றாள் தாய். ... Read More »
இன்றைய நகைச்சுவை!!!
March 13, 2017
அசோக்… ஒரு பிரபலமான ஹோட்டலில் முதன்மை சமையல் செஃப்! அது மட்டுமல்ல, பல டிவி நிகழ்ச்சிகளில் சமையற் சார்ந்த போட்டிகளில் ஜட்ஜ். இந்த நிலையில், ஒரு நாள் சென்னையை மறந்து, 500 கி.மீட்டர் தள்ளி இருந்த ஒரு சிறு நகரத்திற்குச் சென்று ரெஸ்ட் எடுத்தார். மனைவியும், மகனும் கூட வந்திருந்தனர். அவர்கள் போரடிக்கிறது எனக் கூற, அருகில் இருந்த ஒரு தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றனர். இவர்கள் உள்ளே நுழைந்து இருக்கைகளில் அமர்ந்த போது, அங்கிருந்த ஏழே ... Read More »
வெற்றிமொழி!!!
March 13, 2017
வெற்றிமொழி – நெப்போலியன் 1883-ஆம் ஆண்டு பிறந்த நெப்போலியன் ஹில், அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். 1908-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற தொழிலதிபர் ஆண்ட்ரூ கார்னெகியை சந்தித்ததே நெப்போலியன் ஹில்லின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. வெற்றிக்கான கார்னெகியின் எளிய செயல்முறை, ஹில்லின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நெப்போலியன் ஹில்லின் “திங்க் அண்ட் க்ரோ ரிச்” என்னும் புத்தகம், மிகவும் பிரபலமாக விற்பனையான சிறந்த புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கான இவரது கருத்துகள் உலகளவில் மிகவும் ... Read More »