நம்ம நாராயணசாமி புகை வண்டியிலிருந்து இறங்கி வெளியே வந்தார். அவரை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவரைப் பார்த்ததும் மனைவி , “என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்?” என்று கவலையோடு கேட்டாள். அதற்கு நாராயணசாமி, “ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன்.காற்று பலமாக முகத்தில் மோதியது எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது” என்றார். ... Read More »
Yearly Archives: 2017
வாழ்க்கைப் படிகள் பதினாறு (16)!!!
March 20, 2017
1) மிகமிக நல்ல தொரு நாள் எது ? பதில் – இன்று 2) மிகப் பெரிய வெகுமதி எது? பதில் – மன்னிப்பு 3) நம்மிடம் இருக்க வேண்டி யது எது? பதில் – பணிவு 4) நம்மிடம் இருக்கக் கூடாதது எது ? அதுக்கு இதுதான் பதில் – வெறுப்பு 5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது எது? பதில் – சமயோஜித புத்தி 6) நமக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் எது? பதில் ... Read More »
ஆரோக்கிய வாழ்வுக்கு!!!
March 20, 2017
ஆரோக்கிய வாழ்வு தரும் புளி உணவுப் பொருட்களுக்கு புளிப்பு சுவையும், நறுமணமும் தருவது தான் புளி. * புளிப்பு சுவையுடைய புளியம்பழத்தில் என். எஸ்.பி. எனப்படும் நார்ச்சத்துப் பொருள் மிகுதியாக உள்ளது. 100 கிராம் புளி சதைப்பற்றில் 13 சதவீதம் என்.எஸ்.பி. நார்ப்பொருள் உள்ளது. உணவுப் பொருட்களை உப்பி பருக்கச் செய்வதில் என். எஸ்.பி. பங்கெடுக்கும். * மலச்சிக்கலை தடுக்கும் ஆற்றலும் என்.எஸ்.பி. நார்ப் பொருளுக்கு உண்டு. புற்றுநோய் மற்றும் பெருங்குடல் சதைகளை பாதிக்கும் நச்சுப் பொருட்களில் ... Read More »
தாய் மனம்!!!
March 20, 2017
அம்மா அழைத்தாள் என்பதற்காக, திருவிழாவிற்கு ஏன்தான் வந்தோமோ என்றாகி விட்டது வசந்திக்கு. `சென்னையிலிருந்து வந்திருந்த தங்கை புவனா விடம் தான் அம்மா அதிக பாசத்தை பொழிந்து கொண்டிருக்கிறாள். எங்கே தன்னை கவனிக்காமல் விட்டால் மனம் வேதனைப்படுவாளே என்று அவ்வப்போது பாசமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறாள்’ உள்ளுக்குள் புழுங்கினாள் வசந்தி. கணவர் இறந்த பின், சமையல் வேலைகள் செய்து வசந்தி, புவனா இருவரையும் நன்றாக படிக்க வைத்து, வசந்தியை அருகிலிருக்கும் ஈரோட்டிற்கும், புவனாவை சென்னைக்கும் மாப்பிள்ளைகளை பார்த்து ... Read More »
இன்றைய நகைச்சுவை!!!
March 19, 2017
இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார். ”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார். யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார். ”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார். அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். ... Read More »
மூன்று முடிச்சு தத்துவம்……
March 19, 2017
தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது. முதல் முடிச்சு – பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும். 2-ஆம் முடிச்சு – கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும். 3-ஆம் முடிச்சு – நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும். ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள். பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த ... Read More »
பெண்களுக்கான உடற் பயிற்சிகள்!!!
March 19, 2017
பெண்கள் செய்யக்கூடிய உடற் பயிற்சிகள்: பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம். அவை.. 1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி. 2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி. 3) யோகாசன பயிற்சிகள். 4) ஸ்கிப்பிங் பயிற்சி இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க இவற்றை செய்யலாம். • சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக ... Read More »
உடல் உறுப்புகளின் வேலைகள்!!!
March 19, 2017
* இருதயம் ஒவ்வொரு முறைதுடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக்கோடி முறைகள் சுருங்கி விரியும். * இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்கபாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை.எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும். * ... Read More »
இன்றைய நகைச்சுவை!!!
March 18, 2017
நாற்பது வருடம் வாழ்ந்து முடித்த கணவனும் மனைவியும் அதை கொண்டாடும் விதமாக நன்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர். விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் கேட்ட கேள்வி. நீங்கள் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருந்தீர்கள் இவ்வளவு நாளும் ? என்று. அதற்கு அந்த தம்பதிகள் கொடுத்த பதில் ” நான் எனது கணவரின் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.அது தான் காரணம்!” என்று. அன்று இரவு படுக்கையில் மனைவி கணவனிடம்” இதுவரை உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டதே இல்லை.. இன்று நீங்கள் ... Read More »
ஆண்டவா, என்னை ஆச்சாரியனாக்கு!!!
March 18, 2017
கல்வி புத்தாண்டைத் தொடங்கும் புத்திளம் புஷ்பங்களே! உங்கள் பள்ளி வாழ்வை வளமாக்க, மங்களப் பொருள்களுடன் உங்களை வரவேற்கிறேன், வாருங்கள்! படிப்பும், மார்க்கும் வரவில்லை என்று சென்ற ஆண்டில் வாழ்வை முடித்துக் கொண்ட மாணவர்களுக்காக இன்று நாம் அனைவரும் பிராத்திப்போம். இந்த மோசமான நிலை எங்கும், என்றும் தொடராதிருக்க, சிலவற்றைச் சிந்தித்து வைத்திருகிறேன். என்னோடு சேர்ந்து சிந்திக்க வாருங்கள். என் தோளுக்கு மேல் வளர்ந்துள்ள மாணவர்களே! மேற்கூறிய பிரச்னைகளைத் தீர்த்திட, பொறுப்பை உங்கள் தோள் மீது ஏற்றிக் கொள்ள ... Read More »