Home » 2017 (page 18)

Yearly Archives: 2017

அன்றாடம் பின்பற்ற வேண்டிய… சில உடல் நலக் குறிப்புகள்!

அன்றாடம் பின்பற்ற வேண்டிய… சில உடல் நலக் குறிப்புகள்!

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி (15 மில்லி) எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை தினமும் சில மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், உடல் எடை குறையும். 4. ... Read More »

தைரியசாலி

தைரியசாலி

ஒரு பெரிய பாறையின் மீது செம்மறி ஆடு அமர்ந்து அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..!அந்த சமயம் ஒரு சிங்கம் அதன் முன் தோன்றியது செம்மறி ஆடு கொஞ்சமும் பயப்பிட வில்லை அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..! ஆய் நான் ராஜா வந்திருக்கிறேன் பயம் இல்லாமல் அசைபோட்டுக்கொண்டு இருக்கிறாயே ..? என்ன அசை போடுகிறாய் …? நான் இந்த மலையை கொஞ்சம் கொஞ்சாமாக அசைபோட்டுக்கொண்டு இருக்கிறேன் ..என்றது பாறையை மென்று விழுங்கியதும் உன்னையும் விழுங்குவேன்  என்று  உரத்த  தொனியில்  கூற சிங்கம் ... Read More »

மாய குதிரை

மாய குதிரை

நொடிக்கும் குறைவான நேரத்தில், ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மணல் மேட்டில் குடை பிடித்து நடக்க இந்த மனத்தால் முடிகிறது.  அடுத்த கணம், என் வீட்டு மொட்டைமாடியில் என்றோ விட்டு சென்ற தோழியுடன் அமர்ந்து கதை பேச முடிகிறது…. மனம் எங்கு வேண்டுமானாலும் செல்லும் மாய தந்திரம் படைத்தது.. ஆனால் எங்கோ சென்று விட்ட தோழியை அழைத்து வந்து வீட்டு மொட்டை மாடியில் அமர வைத்து கதை பேசுவது மனதின் பயணமில்லை….. அது கற்பனை… சரி, ... Read More »

அடியார்க்கு ஆடை தந்து சிவம் உணர்ந்தவர்

அடியார்க்கு ஆடை தந்து சிவம் உணர்ந்தவர்

நேச நாயனார் (திருநட்சத்திரம்: பங்குனி-ரோகிணி) (மார்ச் 25) “மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்”-திருத்தொண்டத்தொகை. நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலான நெசவை அவர் சிவனடியர்களைக்காகவே செய்துவந்தார். ... Read More »

உப்பு!!!

உப்பு!!!

உப்பு மிக சாதாரணமாக நாம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒன்று. கடலே இதன் இருப்பிடம். ஒரு லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு கிடைக்கும். 6 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உப்புக்கு எத்தனை முக்கியத்துவம் அளித்து உபயோகித்துள்ளனர் என்பதை ஆய்வுகளும் குறிப்புகளும் கூறுகின்றன. உப்புக்காக யுத்தங்களே நடந்துள்ளன என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் இது உண்மை. பண்ட மாற்று வியாபாரத்தில் உப்புக்காக தங்கத்தை கூட கொடுத்துள்ளனர் என்றால் உப்பின் முக்கியத்துவத்தை அறியலாம். கடல் நீரை பாத்தி ... Read More »

பொறுமையும் பொறுப்பும்

பொறுமையும் பொறுப்பும்

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பை கண்டுபிடித்தார். ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது. அப்போது எடிசன் எப்படி நொந்து போயிருப்பார்…? அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம்… தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக எடிசன், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார், அவரது ஆய்வகத்தின் ... Read More »

தங்க நாணய கதை

தங்க நாணய கதை

ஒரு ஊரில் ராமசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஊருக்கு சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். இதனால் வருத்தமடைந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி புலம்பினார். சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியுடையது என தெரிந்துகொண்ட குரு அதை அவரிடம் கொடுத்தார். குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ... Read More »

உப்புக்கு வந்த சோதனை

உப்புக்கு வந்த சோதனை

ஒரு கிராமம் ஒன்றில் சிறு ஆசிரமத்தில் பரமார்த்தர் என்னும் குரு இருந்தார். அவருக்கு 5 சீடர்கள் உள்ளனர்.அவர்கள் யாவருமே அடி முட்டாள்கள். எந்த ஒரு காரியத்தையும் முட்டாள் தனமாகவே செய்வார்கள். முட்டாள்தனமான காரியங்களால் சில சமயம் ஏமாந்தும் போவார்கள். இப்படிதான் ஒருநாள் அனைவரும் தலயாத்திரை செல்லவதற்காக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். உணவை சமைத்து எடுத்து செல்ல எண்ணி பரமார்த்த குரு ஒரு சீடனை அழைத்தார். அவனிடம் சிறிது பணமும் துணி பையையும் கொடுத்து நீ சந்தைக்கு ... Read More »

உடலினைப் போற்றுவோம்

உடலினைப் போற்றுவோம்

உடல் என்பது ஒரு இயந்திரம் அல்ல நாம் சொன்னதைக் கேட்க… அது சொல்வதைக் கேளுங்கள் அதை உணர்ந்து வாழ்ந்து பாருங்கள் நீங்கள் நிம்மதியை அடையலாம் ! இன்றைய அவசரமான உலகத்தில் பொறுமையை கடைபிடிப்பது என்பது எல்லோராலும் சாத்தியமில்லை. ஒவ்வொரு வேலையினையும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செய்வது என்பதும் இயலாத காரியமாய் போய்விட்டது. எவ்வளவு சுலபமாக ஒரு வேலையை முடிக்கலாம் அல்லது எவ்வளவு நேரத்தில் அந்த வேலையை முடிக்கலாம் என்பதில்தான் நாம் குறியாய் இருக்கிறோம். வேகமும் தேவை என்றாலும் விவேகமும் ... Read More »

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

துப்பு கொடுத்தது தப்பு சென்னைக்கு பக்கத்தில், திருவாலங்காடு. அங்கு ‘தமிழ்நாடு கமர்சியல் பேங்க்’ கிளை. காலை வேளை. வங்கி கொஞ்சம் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது. வங்கி வாசலை ஒட்டிய அறை. அதில் ரங்கமணி அமர்ந்திருந்தார். அவர்தான் அந்த வங்கி கிளையின் மேனேஜர். அவருக்கு கிட்டதட்ட ஒரு நாப்பது வயது. “கிரி, யாருப்பா அது? நானும் நாலு நாளா பாத்துக்கிட்டேயிருக்கேன். பாங்குக்கு வரான், போறான். என்ன பண்றான்? ” ரங்கமணி தனது அக்கௌண்டன்டை வினவினார். “யார்ன்னு தெரியலே சார், ... Read More »

Scroll To Top