மதுரை வைத்தியநாத ஐயர் (பிறப்பு: 1890, மே 16 – மறைவு: 1955, பிப். 23) தமிழகத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்தவர்களுள் தலையாயவர் மதுரை. ஏ. வைத்தியநாத ஐயர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று வழிபடச் செய்ததன் மூலமாக, இந்துமதத்தில் நிலவிய ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கான தடையைத் தகர்த்தவர் இவரே. தஞ்சாவூரில் 1890, மே 16 -இல் அருணாசலம் ஐயர்- லட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் ... Read More »
Yearly Archives: 2017
காசேதான் கடவுளடா!!!
April 4, 2017
ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,”நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் ... Read More »
இரு தவளைகள்!!!
April 4, 2017
இரு தவளைகள் சென்றுகொண்டிருந்த வழியில் இருந்த ஆழ்குழியில் விழுந்து விட்டது. வெளியே வர முடியவில்லை. மேலேயிருந்த தவளைகள் கேவலமாக இருவரையும் பார்த்து ‘இதிலிருந்து வெளியே வர முடியாது, முயற்சியை கைவிடுங்கள், செத்துவிடுங்கள்.’ எனக் கத்தின. முதல் தவளை இவர்கள் சொல்வதைக் கேட்டு கீழே விழுந்து நண்பர்களின் கொடூர குணத்ை எண்ணி முயற்சியை கைவிட்டுவிட்டது. குழிக்குள்ளேயே இருந்து விட்டது. இரண்டாம் தவளை மேலும் முயற்சி செய்து ஒருவழியாக மேலே வந்தது. அது மேலே வந்து எல்லாரையும் பார்த்து சொல்லிச்சாம். ... Read More »
நரி மாட்டிகிச்சு!
April 4, 2017
ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மடத்தில் ஒரு சந்நியாசி இருந்தான். அவன் பெயர் தேவசன்மா. அவன் பிச்சை எடுத்துச் சேர்த்த காசையெல்லாம் கந்தையில் முடித்துத் தன் அக்குளில் வைத்துக் கொண்டு திரிந்தான். இரவும் பகலும் அந்தக் கந்தை அவனை விட்டு நீங்காமல் இருந்தது. சந்நியாசி பணமுடிப்பை எப்போதும் அக்குளில் வைத்துக் கொண்டு திரிவதை திருடன் ஒருவன் கவனித்துப் பார்த்தான். அந்தப் பணப்பையை எப்படித் திருடலாம் என்று யோசித்தான். இதற்கு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான். ஒருநாள் சந்நியாசியிடம் ... Read More »
நேர்மையின் மறு உருவம்
April 4, 2017
மொரார்ஜி தேசாய் (பிறப்பு: 1896, பிப். 29 – மறைவு: 1995, ஏப்ரல் 10) இந்தியாவின் காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் மொரார்ஜி தேசாய். இவரும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்; நேரு, இந்திரா அமைச்சரவைகளில் அமைச்சராக பணியாற்றியவர். நேர்மையின் வடிவமாக நெறி தவறாத பொதுவாழ்வை ஒரு தவம் போல் நடத்தியவர் மொரார்ஜி தேசாய். நாட்டின் உயர அதிகாரபீடத்தை அலங்கரித்த போதும் எளிய வாழ்வு வாழ்ந்த பெருந்தகை. அவரது வாழ்வில் நடந்த தவிர்த்திருக்கக் கூடிய ... Read More »
மன்னரின் சந்தேகம்!!!
April 3, 2017
நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” “ஆம் மன்னா!” “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார். அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் ... Read More »
செத்தேன்!
April 3, 2017
ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான். கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை. மூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன், ஐயா என் செந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். எனக்குச் சேர வேண்டிய கூலியைத் தாருங்கள் என்று கேட்டான். கருமியான அந்தச் செல்வன் அவனை ஏமாற்ற நினைத்தான். தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து ... Read More »
எல்லாருமே கெட்டவர்கள்தான் !
April 3, 2017
முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம். அந்த மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களுடைய நற்பண்புகள் காரணமாக மற்ற மாணவர்களால் அவர்கள் மதிக்கப்பட்டனர். ஆனால், அறிவுக் கூர்மையற்ற சிலர் மட்டும், அந்த நல்ல மாணவர்களிடம் பொறாமை கொண்டிருந்தனர். ... Read More »
ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்
April 3, 2017
சத்ரபதி சிவாஜி (பிறப்பு: 1630, பிப் 19 – மறைவு: 1680, ஏப். 3) தேசபக்த நெஞ்சம் ஒவ்வொன்றிலும் தேசிய எண்ணத்தை உண்டாக்கும் வாழ்க்கை சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையாகும். பல நூற்றாண்டுகள் நாம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைபட்டியிருந்த போது அதை உடைத்தெறியும் உத்வேகம் ஏற்பட செய்தவர் சிவாஜி. இவர் பொது யுகத்திற்குப் பிந்தைய 1630, பிப் 19 -ஆம் தேதி பிறந்தார். சிவாஜியின் தந்தை சாஜி போன்ஸ்லே பெரும் வீரராக விளங்கினார். இஸ்லாமிய அரசர்களுகளிடம் பணிபுரிந்தார். சிவாஜியின் தாயார், தனக்குப் பிறக்கும் குழந்தை சிறந்த ... Read More »
நமது மூளைச் செயல்பாடுகளை… பாதிக்கக்கூடிய 10 பழக்கங்கள்!
April 2, 2017
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு, ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்கு தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல்: மூளை சுருங்கவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: நிறைய ... Read More »