Home » 2017 (page 13)

Yearly Archives: 2017

மணி என்ன?

மணி என்ன?

பொன்னுத்தாய்க்கு ரத்தம் கொதித்தது. கொழுந்தன்காரனை எரித்துவிடுவது போல் பார்த்தாள். “பாவிப்பய…. என்னமா நம்புற மாதிரி பேசுறான்…?” இப்பவும் நமட்டுச் சிரிப்போடு அவளையே பார்க்கிறான். கண்களில் அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு குள்ளநரித்தனம்! அவள் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல் அவன் தொடர்கிறான்…. “ஆமாப்பா…. அந்த மூர்த்தி ஒரு பொம்பள பொறுக்கி…. அங்க என்ன பாடமா நடத்துறான்…? ஒரே பாட்டும் கூத்தும்தான். அவனுக்கிட்டே இதுகளுக்கு என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு…” பொன்னுத்தாய்க்குக் கண்களில் மளுக்கென்று நீர் எட்டிப் பார்த்தது. “”நேத்து ... Read More »

இன்றைய நகைச்சுவை!!!

இன்றைய நகைச்சுவை!!!

ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள். ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..? ஃபாதர் சொன்னார்.. என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டடுவிடும்.” அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து ... Read More »

தமிழ்ப் புதினத்தின் தாய்

தமிழ்ப் புதினத்தின் தாய்

வை.மு.கோதைநாயகி (பிறப்பு: 1901 , டிச. 1- மறைவு: 1960 , பிப். 20) ‘ஆணாதிக்கம்’ என்ற குற்றச்சாட்டு இன்று பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நூறாண்டுகளுக்கு முன்பும் ஆணாதிக்கம் இல்லாமலில்லை. பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுவது அதிகம் என்றாலும் ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் ஒருத்தி இருப்பாள் என்று பெருமையாகக் கூறுவது ஆண்களிடம்தான் அதிகம். பெண்ணின மேம்பாட்டுக்குப் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட வீர மகளிரைப் பற்றி இன்றைய சமூகம் அறிந்துகொள்வது அவசியம். புதுமைப் பெண்ணாய் உருவெடுத்த ... Read More »

தத்துவ நிபுணரின் தவிப்பு!!!

தத்துவ நிபுணரின் தவிப்பு!!!

அரச சபைக்கு தத்துவ ஞானி ஒருவர் வந்தார். தத்துவம் என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு இறுதியில்,” நாம் கண்ணால் காண்பது, நாவினால் சுவைப்பது, மூக்கினால் நுகர்வது எல்லாமே நாம் அனுபவிப்பதாகத் தோன்றுமே தவிர, செய்யும் ஒவ்வொரு செயலும் பிரம்மையே தவிர உண்மையில் நாம் அப்படிச் செய்வதில்லை” என்று கூறி தத்துவ ஞானி என்பதற்கு ஏற்ப குழப்பமாகக் கூறி முடித்தார். அதனை சபையோர் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பொறுமையோடு இதைக் கவனித்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் ... Read More »

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? –––––––––––––––––––––––––––– 1.வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்களை, வாழை இலை மீதுதான் படுக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால், சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி, வாழை இலையில் கிடத்தி, காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால், சூரிய ... Read More »

தத்தளித்த எறும்பை காப்பாற்றிய புறா!

தத்தளித்த எறும்பை காப்பாற்றிய புறா!

ஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது. எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு. புறாவுக்கும் நன்றி கூறியது மற்றொரு நாள். ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு. ஆனால் புறாவோ இதை ... Read More »

மறக்கக்கூடாத மாமனிதர்

மறக்கக்கூடாத மாமனிதர்

வீர சாவர்க்கர் (பிறப்பு: 1883, மே 28-  மறைவு:1966, பிப். 26) இந்திய விடுதலைப்போரில் மகத்தான தியாகம் செய்தவர்களுள் தலையாயவர் ‘வீர சாவர்க்கர்’ எனப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர். புரட்சியாளர், சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், பேச்சாளர், கவிஞர், அரசியல் தலைவர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்,… எனப்  பன்முக ஆளுமை உடையவர் சாவர்க்கர். அபிநவ பாரத சங்கம் முதல் ஹிந்து மகா சபா வரை, அவரது அரசியல் பயணம் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்தது. ஆங்கிலேயரின் சொந்த நாட்டிலேயே அவர்களுக்கு எதிராக ... Read More »

இன்றைய நகைச்சுவை!!

இன்றைய நகைச்சுவை!!

இப்படிக்கு உன் அன்புக் கணவன்: —————————————————- மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார். மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் ... Read More »

வேர்க்கடலை அடிக்கடி சாப்பிட்டால்… இளமையை நீண்ட நாள் காக்கலாம்!

வேர்க்கடலை அடிக்கடி சாப்பிட்டால்… இளமையை நீண்ட நாள் காக்கலாம்!

1.  ஒவ்வொரு வேளை உணவுடனும், ஒரு பச்சை நிறக் காய்  அல்லது கனியைக் கண்டிப்பாகச்  சேர்க்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு  நிறக் காய் அல்லது பழத்தைச்  சாப்பிடுவது கூடுதல் நலம். 2.  நடுத்தர  வயதில், தோல் பராமரிப்புக்கு, கண்டிப்பாக வைட்டமின் இ தேவை.  முளை கட்டிய  தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.  வாய்ப்பு  கிடைக்கும்போதெல்லாம், வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள்  கைவசம். 3.  அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில்   கிடைத்துவிடும். ... Read More »

கனவுகள் பலிக்கும்!

கனவுகள் பலிக்கும்!

சாளுவ நாட்டை சங்கசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவர் காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலித்து விடும் என்ற மூடநம்பிக்கை கொண்டிருந்தான். அவனது மந்திரியும், “அப்படி நினைப்பது சரியல்ல என எவ்வளவு கூறியும்’ அவர் அதனை ஏற்கவில்லை. மன்னன்தான் காணும் கனவுகளின் படியே பின்னர் நடக்கும் என நம்பியதற்கு ஏற்ப ஓரிரண்டு கனவுகள் பலித்தும் விட்டன. “பார்த்தீர்களா, நான் பார்த்த கனவுகள் பலித்து விட்டன,” என்பார். அப்போதைக்கு அவர்கள் எதுவும் கூறவில்லை. ஓரிரவில் மன்னன் தான் ... Read More »

Scroll To Top