திருக்குறள் கதைகள்: சன்னாசிக்கிழவன் களைப்போடு வீட்டுக்குள் நுழைந்தான். நடுவீட்டின் உச்சியை அண்ணாந்து பார்த்தான். ஆகாயத்திலிருந்து நிலாவெளிச்சம் பளீரென்று வீட்டுக்குள் அடித்தது. பெருமூச்சு விட்டவாறே தன் முண்டாசை உதறித் தரைமீது போட்டுக் கீழே அமர்ந்தான். “என்னாப்பா, மோட்டுவளையைப் பாக்குறே? எதாச்சும் பணம் கொட்டுமான்னு பாக்குறியா?” என்றவாறே அவன் மகன் சின்னச்சாமி உள்ளே நுழைந்தான். “பணம் கொட்டுதோ இல்லையோ மழை வந்தா தண்ணி கொட்டும்.” ” ஆமாம்பா, இந்த மழைக் காலம் வாரதுக்குள்ளே நம்ம வீட்டை இடிச்சுக் கட்டிடணும் அப்பா.” ... Read More »