பலாக்காய், கலாக்காய், காரட்…
என்னென்ன சத்துக்கள் உள்ளது?
–––––––––––––––––––––––
பலாக்காய்!
இதில் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ளது. வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு, இந்த காய் வேண்டாம்.
இதன் பலன்கள் என்று பார்த்தால், செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும்.
காரட்!
இதில், விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் ஆகியவை உள்ளது.
அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு, குழந்தைகளுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.
யாருக்கு வேண்டாம் : குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வைக்கு உகந்தது. உடல் பருமனாகாமல் காக்கும். காரட் சாறுடன், பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர, உடல் கழிவுகள் வெளியேறும்.
நெல்லிக்காய்:
இதில், விட்டமின் சி, செல்லுலோஸ், கார்போ ஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் நிகோடினிக் ஆசிட் ஆகியவை உள்ளது. இது இரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. எல்லோருக்கும் உகந்த அமிர்தக்கனி என்றே சொல்லலாம்.
பலன்கள் : இளமையை நீடிக்கச் செய்யும். தலைமுடி, தோல், கண் பார்வையை பாதுகாக்கும். இதயம், நுரையீரலை, வலுவூட்டும்.
களாக்காய்!
இதில், விட்டமின் ஏ, சி உள்ளது. இது, மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு நல்லது. தொண்டைவலி உள்ளவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன்கள் : கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து, பித்தத்தை கட்டுப்படுத்தும்.–––––––––––