Home » உடல் நலக் குறிப்புகள் » விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை!
விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை!

விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை!

விஷக்கடிகளுக்கு மருந்தாகும்…

சிறியாநங்கை, பெரியாநங்கை!

–––––––––––––––––––––––

சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதனை நிலவேம்பு என்றும் அழைப்பார்கள். இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத் தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும். அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு பாம்பைக் கடித்துக் கொன்றபின், கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து, தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி.

பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு, இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். அதனால் ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை நீங்கும். கசப்பு மருந்து என்னும் சிரியா நங்கை, பெரியா நங்கை தாவரங்கள், மருத்துவ குணம் நிறைந்தவை. இவை செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். குறுஞ்செடியான இது, வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது.

இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும், நாற்று எடுத்து நடலாம். 6 மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு, பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். 6 மாதத்திற்கு மேல் வளர விட்டால், எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 –2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிடும். இதன் இலையை மென்று தின்றால், கசப்பாக இருக்கும். செயல்திறன் மிக்க வேதிப்பொருட்களான ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் இதன் வேர்களில் உள்ளது. மேலும், இலைகளில் பீட்டா சட்டோ ஸ்டீரால், ‘கால்மேகின்’ என்ற கசப்புப் பொருளும் உண்டு. நாளை இதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top