ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான். கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை. மூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன், ஐயா என் செந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். எனக்குச் சேர வேண்டிய கூலியைத் தாருங்கள் என்று கேட்டான். கருமியான அந்தச் செல்வன் அவனை ஏமாற்ற நினைத்தான். தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து ... Read More »
Monthly Archives: April 2017
எல்லாருமே கெட்டவர்கள்தான் !
April 3, 2017
முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம். அந்த மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களுடைய நற்பண்புகள் காரணமாக மற்ற மாணவர்களால் அவர்கள் மதிக்கப்பட்டனர். ஆனால், அறிவுக் கூர்மையற்ற சிலர் மட்டும், அந்த நல்ல மாணவர்களிடம் பொறாமை கொண்டிருந்தனர். ... Read More »
ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்
April 3, 2017
சத்ரபதி சிவாஜி (பிறப்பு: 1630, பிப் 19 – மறைவு: 1680, ஏப். 3) தேசபக்த நெஞ்சம் ஒவ்வொன்றிலும் தேசிய எண்ணத்தை உண்டாக்கும் வாழ்க்கை சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையாகும். பல நூற்றாண்டுகள் நாம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைபட்டியிருந்த போது அதை உடைத்தெறியும் உத்வேகம் ஏற்பட செய்தவர் சிவாஜி. இவர் பொது யுகத்திற்குப் பிந்தைய 1630, பிப் 19 -ஆம் தேதி பிறந்தார். சிவாஜியின் தந்தை சாஜி போன்ஸ்லே பெரும் வீரராக விளங்கினார். இஸ்லாமிய அரசர்களுகளிடம் பணிபுரிந்தார். சிவாஜியின் தாயார், தனக்குப் பிறக்கும் குழந்தை சிறந்த ... Read More »
நமது மூளைச் செயல்பாடுகளை… பாதிக்கக்கூடிய 10 பழக்கங்கள்!
April 2, 2017
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு, ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்கு தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல்: மூளை சுருங்கவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: நிறைய ... Read More »
செய்வன திருந்தச்செய் !!!
April 2, 2017
ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் இருந்தன.வெயில் காலம் வந்தபோது அந்த குளத்தில் நீர் வற்றத் தொடங்கியது. ஆகவே அத்தவளைகள் குளத்திலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிச்சென்றன. வழியில் தண்ணீர் நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தன.உடன் ஒரு தவளை ” நாம் இக்கிணற்றில் இறங்கி…இதிலேயே இருப்போம்.தண்ணீர் நிறைய இருக்கிறது” என்றது. உடன் இரண்டாவது தவளை …’வெயில் அதிகமாக அதிகமாக …இக்கிணற்று நீரும் வற்றிவிட்டால் இந்த ஆழமான கிணற்றிலிருந்து நாம் எப்ப்டி வெளியே வருவது’ என்று கேட்டது. இரண்டாவது தவளை….புத்திசாலித்தனமாக யோசித்து ... Read More »
அதிர்ஷ்டம்!
April 2, 2017
இங்கிலாந்து நாட்டை அப்போது மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மூன்றாம் ஜார்ஜ். ஒருமுறை தன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா, சோம்பேறிகளாக வாழ்கிறார்களா? என்று அறிய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. எனவே, அதை அறிந்து கொள்ளும் பொருட்டு, திடீரென்று விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். எல்லா மக்களும் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவிப்புச் செய்திருந்தார். விருந்துக்குக் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்ற ... Read More »
நம்முடன் வாழும் காந்தி
April 2, 2017
அண்ணா ஹசாரே (பிறப்பு: ஜன. 15 ) ஊழலை ஒழிப்பதற்காக லோக்பால் மசோதா கொண்டுவரப் பாடுபட்டவர்; தகவல் அறியும் உரிமைச் சட்டம் வர காரணமாய் இருந்தவர்; ராலேகான் சிந்தி என்ற வறண்ட கிராமத்தைச் செழிக்கச் செய்தவர், விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராகப் போராடி வருபவர்… இப்படி பல சாதனைகளை செய்தும், செய்துகொண்டும் இருப்பவர், 76 வயதான அண்ணா ஹசாரே. இவர் பிறந்தது ஒரு சிறு கிராமம், ராலேகான் சிந்தி; இது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ளது. ஒரு சாதாரண விவசாய ... Read More »
நெஞ்சுவலியை விரட்டும் தேன்… வாய்ப்புண்ணை ஆற்றும் கடுக்காய்!
April 1, 2017
1. நெஞ்சுவலி வந்தவுடன் ஒரு கரண்டி சுத்தமான தேன் உட்கொள்ள, வலி வந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். 2. மிளகுக் கஷாயத்துடன் தேனைக் கலந்து உட்கொள்ள, அஜீரணம் குணமாகும். 3. குழந்தைகள் சளி, ஜலதோஷத்தால் அவதிப்பட்டால் மாதுளம் பழச்சாறுடன், சிறிது தேனைக் கலந்து கொடுக்கவும். 4. குப்பைமேனி இலையின் சாறுடன், தேனைக் கலந்து கட்டிகளின் மீது தடவினால், கட்டிகள் உடைந்து குணமாகும். 5. நெருப்பு காயத்திற்கு தேன் உகந்தது. 6. உணவு உண்டவுடன் ஒரு கரண்டித் ... Read More »
குறை !
April 1, 2017
தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான். முதல்நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினான். “இங்கே யாருமே சரி இல்லை. எல்லாரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை!” என்று குறை சொன்னாள். “நீ இப்போதுதான் இங்கே ... Read More »
சந்தனமா? சவுக்கா?
April 1, 2017
ஒரு அரசன் வேட்டைக்கு வந்தபோது கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்டான். அவனுக்குத் தாகமும் பசியும் வாட்டியது. அதுவோ அடர்ந்த காடு. மனிதர்கள் கிடைப்பார்களா என் அலைந்தான். தூரத்தில் ஒருவன் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனருகில் சென்றான். “தாகத்துக்கு நீர் கிடைக்குமா?” என்று வினவினான். அந்த ஆள் தன்னுடைய குடுவையிலிருந்த நீரைக் கொடுத்ததோடு தான் கொணர்ந்திருந்த கம்பங்கூழையும் தந்தான். வறுமையிலும் இரக்கக்குணத்தோடு இருந்த அவனுக்கு ஏதாவது உபயோகமான பரிசை அளிக்க விரும்பினான் அரசன். தனக்குச் சொந்தமான சந்தனவனத்தைக் காண்பித்து, “வேண்டிய ... Read More »