பொதுவாக வெயிலின் நோய் தாக்கம் ஏற்படாமல் இருக்க, வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர் போன்றவர்கள், நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெளியில் வராமல் இருப்பது நல்லது. மேலும் தங்கள் பணி காரணமாக வெளியே செல்வோர், அவசியம் குடிநீர் பாட்டில் கொண்டு செல்வதும், தினசரி 3 முதல் 5 லிட்டர் வரை காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் பருகுதலும் அவசியம். கோடைக்கேற்ற காற்றோட்டமுள்ள இடங்களில் வசித்தல், தளர்வான பருத்தி ... Read More »
Monthly Archives: April 2017
பாரதத்தின் அணுவியல் துறை மேதை
April 30, 2017
டாக்டர் ஹோமி ஜகாங்கீர் பாபா (பிறப்பு: 1909, அக். 30- மறைவு: 1966, ஜன. 24 ) இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பிகள் இந்தியா சுதந்திரம் அடைந்த பின், மேலை நாடுகள் போல் முன்னேறத் தொழிற் சாலைகள், மின்சக்தி நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேர்வு போன்ற துறைகள் தோன்ற அடிகோலியவர் நேரு. 1945 ஆம் ஆண்டில் ஜப்பானில் அணுகுண்டுகள் விழுந்த பிறகு அமெரிக்கா, கனடா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் சில ஈரோப்பிய நாடுகளிலும் அணுவியல் ... Read More »
குளிர்கால உடல் பராமரிப்புக்கு… செய்ய வேண்டியது என்ன?
April 29, 2017
1) குளிர் காலத்தில் சருமத்தின் மென்மை, நெகிழ்வுத் தன்மையைப் பராமரிக்க, சோப்புக்குப் பதிலாக, கடலை மாவைப் பயன்படுத்தலாம். 2) குளிர் காலத்தில் கூந்தல் அதிகமாக வறண்டு விடுவதுடன், ஓரங்களில் வெடித்துப் போய் அதிக முடி இழப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, இளஞ்சூடான ஆலிவ் எண்ணெயை தலையில் தடவி, மசாஜ் செய்து ஊறிய பிறகு குளிக்கலாம். 3) சிலருக்குக் குளிர் தாங்காமல், தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாக வாய்ப்புகள் உண்டு. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து, அதைத் ... Read More »
‘தமிழ்நாட்டிற்காக’ உயிர் துறந்தவர்
April 29, 2017
தியாகி சங்கரலிங்கனார் (பிறப்பு: ஜன. 26- பலிதானம்: 1956, அக். 10) விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார். ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு ... Read More »
இருமல், மூச்சுத்திணறல் போக்கும்… வெற்றிலை!
April 28, 2017
வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. வெற்றிலையைப் பயன்படு த்தும்போது, அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44. தற்போதைய ஆராய்ச்சியில், ... Read More »
தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்
April 28, 2017
சுவாமி சகஜானந்தர் (பிறப்பு: 1890, ஜன. 27- மறைவு: 1959, மே 1) தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவசீலர் சுவாமி சகஜானந்தர். பலர் எழுதிக் கொண்டும், போராடிக்கொண்டும் இருந்த போது, தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மகான் சுவாமி சகஜானந்தர். இளம் வயதில்… 1890, ஜனவரி 27-ல் ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில் அண்ணாமலை – அலமேலு தம்பதிக்கு முதல் மகனாய்ப் பிறந்தவர் நமது முனுசாமி. இவரே பின்பு ... Read More »
தோல்நோயையும் குணப்படுத்தும் மருதாணி
April 27, 2017
மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக் கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 -முதல் 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும், ... Read More »
பஞ்சநதத்தின் சிங்கம்
April 27, 2017
லாலா லஜபதி ராய் (பிறப்பு: 1865, ஜன. 28 – நினைவு: 1928, நவ. 17) இந்திய விடுதலைப் போரில் காந்திஜி வருகைக்கு முன் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய லால்- பால்- பால் என்ற திரிசூலத் தலைவர்களில் முதன்மையானவர் லாலா லஜபதி ராய். ‘பஞ்சாப் சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட இவர், தமிழகத்தின் மகாகவி பாரதிக்கு ஆதர்ஷ புருஷர். 1865 , ஜன. 28-ல் பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் துடிகே என்ற கிராமத்தில் பிறந்தவர் லாலா லஜபதி ராய். சட்டம் பயின்ற லாலா நாட்டு விடுதலைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தார். லாஹூரில் (தற்போதைய ... Read More »
தமிழைக் காக்க மடம் நிறுவியவர்
April 26, 2017
நமச்சிவாய தேசிகர் தமிழும் சைவமும் இணைபிரியாதவை. சைவமும் சைவ சித்தாந்தமும் வளர்க்க, 600 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாவடுதுறையில் சைவ மடம் நிறுவிய பெருந்தகை தவத்திரு நமச்சிவாய தேசிகர். அன்னாரது அடியொற்றி, இன்றும் தமிழும் சைவமும் வளர்க்கும் அரும்பணியில் ஈடுபடுகிறது திருமடம். சிலரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் கிடைப்பது அரிது; ஆனால், அவர்களது அரும்பணியின் தொடர்ச்சி அவர்களது பெயரை என்றென்றும் வாழவைக்கும். நமச்சிவாய தேசிகரின் புகழை திருவாவடுதுறை ஆதீனம் நிலைநாட்டி இருக்கிறது. நமச்சிவாய தேசிகர் பதம் பணிந்து தமிழ் ... Read More »
வெந்தயம், லவங்கம் – பயன்கள்
April 26, 2017
உடல் சூடு தரும் லவங்கம்… கண் பார்வைக்கு வெந்தயம்! லவங்கம்: பல் வலிக்கு, முதலில் லவங்க எண்ணெய் வைத்து விட்டு, பிறகு பல் மருத்துவர்களிடம் செல்பவர்கள் அநேகர். பல பாடகர்கள், கச்சேரிக்கு முன்பு 1 கிராம்பை வாயில் போட்டு மென்று கொண்டேயிருப்பார்கள். தொண்டையில் இருக்கும் சளியைத் தடுக்கும் ஆற்றல், கிராம்பிற்கு உண்டு. தீராத இருமல், தொண்டை கட்டு, தொண்டை கரகரப்பை லவங்கம், மஞ்சள் பொடி, துளசி சேர்த்துக் கொதிக்க வைத்த நீரைச் சூடாக குடித்தால், உடனே குணம் ... Read More »