ஒரு கிராமம் ஒன்றில் சிறு ஆசிரமத்தில் பரமார்த்தர் என்னும் குரு இருந்தார். அவருக்கு 5 சீடர்கள் உள்ளனர்.அவர்கள் யாவருமே அடி முட்டாள்கள். எந்த ஒரு காரியத்தையும் முட்டாள் தனமாகவே செய்வார்கள். முட்டாள்தனமான காரியங்களால் சில சமயம் ஏமாந்தும் போவார்கள். இப்படிதான் ஒருநாள் அனைவரும் தலயாத்திரை செல்லவதற்காக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். உணவை சமைத்து எடுத்து செல்ல எண்ணி பரமார்த்த குரு ஒரு சீடனை அழைத்தார். அவனிடம் சிறிது பணமும் துணி பையையும் கொடுத்து நீ சந்தைக்கு ... Read More »
Monthly Archives: March 2017
உடலினைப் போற்றுவோம்
March 23, 2017
உடல் என்பது ஒரு இயந்திரம் அல்ல நாம் சொன்னதைக் கேட்க… அது சொல்வதைக் கேளுங்கள் அதை உணர்ந்து வாழ்ந்து பாருங்கள் நீங்கள் நிம்மதியை அடையலாம் ! இன்றைய அவசரமான உலகத்தில் பொறுமையை கடைபிடிப்பது என்பது எல்லோராலும் சாத்தியமில்லை. ஒவ்வொரு வேலையினையும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செய்வது என்பதும் இயலாத காரியமாய் போய்விட்டது. எவ்வளவு சுலபமாக ஒரு வேலையை முடிக்கலாம் அல்லது எவ்வளவு நேரத்தில் அந்த வேலையை முடிக்கலாம் என்பதில்தான் நாம் குறியாய் இருக்கிறோம். வேகமும் தேவை என்றாலும் விவேகமும் ... Read More »
இன்றைய நகைச்சுவை!!!
March 23, 2017
துப்பு கொடுத்தது தப்பு சென்னைக்கு பக்கத்தில், திருவாலங்காடு. அங்கு ‘தமிழ்நாடு கமர்சியல் பேங்க்’ கிளை. காலை வேளை. வங்கி கொஞ்சம் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது. வங்கி வாசலை ஒட்டிய அறை. அதில் ரங்கமணி அமர்ந்திருந்தார். அவர்தான் அந்த வங்கி கிளையின் மேனேஜர். அவருக்கு கிட்டதட்ட ஒரு நாப்பது வயது. “கிரி, யாருப்பா அது? நானும் நாலு நாளா பாத்துக்கிட்டேயிருக்கேன். பாங்குக்கு வரான், போறான். என்ன பண்றான்? ” ரங்கமணி தனது அக்கௌண்டன்டை வினவினார். “யார்ன்னு தெரியலே சார், ... Read More »
ஆலமரமும் வீரனும்
March 23, 2017
ஒரு பெரிய ஆலமரம் பல பல கிளைகளை பரப்பிக்கொண்டு பலருக்கும் நிழல் தந்துவந்தது. பல ஊருக்கும் செல்லும் வழியில் அது இருந்ததால், பல உயிரினங்களும் அது தரும் நிழலுக்கும் குளிர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் பலரையும் சந்தித்து, நட்புறவுடன் பழக இருந்த அமைதியான சூழலுக்கும் அம்மரத்தை நாடி வந்தனர். அவர்களுள் ஒரு வீரனும் சில வருடங்களாக அவனுக்கு இருந்த பல பொறுப்புக்களிடையே அம்மரம் தரும் மன நிம்மதிக்காக முடிந்தபோதெல்லாம் அங்கு வந்து கொண்டிருந்தான். தன்னை போல் மரத்தினை நாடி வந்த ... Read More »
ரொட்டி என்றால் என்ன?
March 23, 2017
முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார். அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் “மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு ... Read More »
சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்
March 22, 2017
நாய், சிறுத்தை, குரங்கு ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை. ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது. எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக ... Read More »
கோடை வெயிலை சமாளிக்க டிப்ஸ்
March 22, 2017
பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மககள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி. வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி ... Read More »
பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???
March 22, 2017
ஒரு ஊரில் கருமி ஒருவன் வாழ்ந்து வந்தான். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அவன் பொருள் சேர்த்தான். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. அவனிடம் ஐந்தாயிரம் பொற்காசுகள் வரை சேர்ந்தன. அவற்றை எண்ணிப் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தான். வாழ்க்கை முழுவதும் பொருள் சேர்ப்பதிலேயே கழித்து விட்ட அவன் பொற்காசுகளில் சிலவற்றைச் செலவு செய்து இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். அப்பொழுது அவன் முன்பு சாவுக்கான எமன் தோன்றினான். அவனிடம் “உன் உயிரை எடுத்துச் ... Read More »
இன்றைய நகைச்சுவை!!!
March 22, 2017
என் பெண்டாட்டிய கடத்திட்டுப் போயிட்டான் ஒருவர் வங்கியில் கடன் வாங்கி கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தவில்லை. ஓரளவு கால அவகாசம் கொடுத்த வங்கி அதன் பிறகும் கடன் தொகை வரவில்லையெனில் ஒரு குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு ஜப்தி செய்வதாக நோட்டீஸ் கொடுத்து விட்டது. குறிப்பிட்ட அந்த தேதியில் தன் பரிவாரங்கள் புடை சூழ அதிகாரியும் சென்று விட்டார். வீட்டில் கடன் வாங்கியவரின் மனைவி மட்டும் இருந்தார். ஜப்தி செய்யும் போது வீட்டு மனிதர் யாரேனும் இருக்க வேண்டும். ... Read More »
இன்றைய நகைச்சுவை!!!
March 21, 2017
பெட்டி போனால் என்ன? சாவி இருக்கிறது! தந்தையும், பதினைந்து வயது மகனும் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் பயணிக்க வேண்டிய ரயில் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் அவகாசம் இருந்தது. பையன் பொறுப்பில்லாதவன். விளயாட்டுப்பிள்ளை. அம்மா செல்லம். சொல்வதைக் கேட்கமாட்டான். ஆகவே, தந்தை தன்னுடைய டிராவல் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு, “டேய், முதல் பிளாட்பாரத்தில் ரயில்வே கேன்டீன் இருக்கிறது. போய்க் காப்பி சாப்பிட்டுவிட்டு, ரயிலில் சாப்பிடுவதற்கு ஏதாவது பார்த்து வாங்கிக்கொண்டு வருகிறேன். நீ ... Read More »