ஒரு காட்டில் கிழட்டு சிங்கம்
வசித்து வந்தது அதனால்
போராடும் குணம் குறைந்து கொண்டே வந்தது …!
இந்த நிலையில் நரி ஒன்றின் உதவியை நாடி ..உனது தந்திர மூளையை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு ஒருமிருகத்தை தனக்கு உணவாக கொண்டுவர கட்டளையிட்டது…!
நரியும் உடன்பட்டு தன் உயிரைக்காப்பாற்றியது …
தினம் தோரும் ஒரு மிருகத்தை தன் தந்திர புத்தியூடாக உணவளித்து வந்தது ..இறுதியில் நரியின் தந்திரம் மிருகங்களுக்கு விளங்க உணவு தேடுவதில் பிரச்சனை ஏற்பட ..எருமை மாட்டிடம் சென்று தன் தந்திரத்தை பயன்படுத்தியது
எருமை மாட்டை பார்த்து நரி கேட்டது …
காட்டுக்கு யார் ..? ராஜா …? என்று ..?
எருமை சொன்னது இது என்ன புதுக்கேள்வி ..?
சிங்கம் தானே என்றது …
நரி சொன்னது …
அது நேற்று வரை இன்றுமுதல் உன்னை தான் ராஜாவாக்க சிங்கம் நினைத்துள்ளது உன்னை அழைத்துவர சொல்லியே நான் வந்தேன் ..என்று தந்திரமாக எருமையை அழைத்து சென்றது
அங்கு சிங்கம் கடும் பசியுடனும் கோபத்துடனும்
காத்துக்கொண்டிருந்தது ..எருமை கிட்ட வரமுன்
அதன் மேல் பாய எருமை சற்று விலகி தப்பி ஓடியது …அவசரப்பட்டதால் சிங்கத்துக்கு உணவு கிடைக்கவில்லை ….
சிங்கத்தை பார்த்து நரி பேசியது -உனக்கு ஒரு கூடாத பழக்கம் அவசரப்படுவது ..நான் கஸ்ரப்பட்டு கூட்டிக்கொண்டு வர நீ குழப்பி விட்டியே என்று திட்டியது …!
சரி சரி போய் எருமையை கூட்டியா என்று கட்டளையிட நரி எருமையிடம் சென்று …
ஏப்பா…. ஓடி வந்த …? சிங்கம்… புதிய ராஜாவை கட்டிப்புடித்து முத்தமிட பாய்ந்ததை நீ கொல்லவருவதாக நினைத்து ஓடிவந்திட்டையே
பயப்பிடாமல் வா என்று மீண்டும் கூட்டிச்சென்றது
சிங்கம் இப்பொது கவனமாக எருமையைக் கொன்று சாப்பிட்டது ..சிங்கம் எருமையின் பெரிய காலை சாப்பிட்டு …நரியை பார்த்து சொன்னது
நீயும் கொஞ்சம் சாப்பிடு ..என்று சொல்லிவிட்டு தூங்கியது …..!
நரிக்கோ மூளையென்றால் தான் விருப்பம் அது எருமையின் மூளையை சாப்பிட்டது ..
சிறிது நேரத்தில் சிங்கம் எழுந்து எருமையை சாப்பிட தொடங்கியது ..அப்போது நரியிடம் கேட்டது ..எருமையின் மூளையை காணவில்லையே எங்கே என்று …?
நரி சொன்னது -எருமைமாட்டுக்கு மூளையிருந்தால் நான் கூப்பிட திருப்பி வந்திருக்குமா …?…
*
*
*
*
*
*
மிருகங்கள் குண இயல்புகள் …
சிங்கம் ; அவசரப்புத்தி
யானை ; பொறுமை
புலி ; குறி தப்பாது
நரி ;தந்திரம்
குரங்கு ;கொள்கை உடையது
……….இப்படி பல குணங்கள் கொண்ட மிருகத்தின்
கலவைதான் மனிதன் அதுதான் -கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவைதான் மனிதனோ …..?