ஒரு குளத்தடியில் ஒநாய் ஒன்று கடும் பசியோடு மீன் ஏதும் வந்தால் பிடிப்போம் என்று காத்துக்கொண்டு இருந்தது .!
ஒரு மீனும் வரவில்லை …சிறுது நேரத்தில் ஒரு ஆமை வந்தது ..அதை ஒநாய் பிடித்து விட்டது
அதை விழியே எடுத்து நிலத்தில் உருட்டி உருட்டி கடித்தது கடைசியில் ஓநாயின் வாயில் இரத்தம் தான் வந்தது …ஆமை ஓடை கடிக்க முடியுமா ?
ஆமை சொன்னது நீ என்னை தண்ணீரில் ஊற வைத்தால் இலகுவாக கடிக்கலாம் என்றது ..!
ஒநாய் சொன்னது நீ தப்புவதற்கு யோசிக்கிறாய் உன்னை விட மாட்டேன் ..என்றது.
ஆமை சொன்னது “நீ காலால் மிதித்துக்கொண்டு என்னை “ஊற” வை என்றது ஓநாயும் சம்மதித்து நீட்ட நேரம் தண்ணீரில் நின்றது ஒநாய் கேட்டது ஊறி விட்டாயா ? எல்லா இடமும் ஊறிவிட்டேன் நீ கால் வைத்துள்ள இடம் தான் ஊறவில்லை என்றது.
எப்படியா என்று காலை தூக்கியது ஆமை நீருனுள் ஓடி விட்டது ஏமார்ந்து போனது ஒநாய் பசி வந்தால் புத்தி போய் விடும் என்று என் பாட்டி சொல்லுவா ………..!