நேச நாயனார்
(திருநட்சத்திரம்: பங்குனி-ரோகிணி)
(மார்ச் 25)
“மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்”-திருத்தொண்டத்தொகை.
நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர்.
அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார்.
தமது மரபின் கைத்தொழிலான நெசவை அவர் சிவனடியர்களைக்காகவே செய்துவந்தார். உடையும், கீழ்கோவணமும் நெய்து அடியார்களுக்கு இடைவிடாது நாளும் அவர் வேண்டியமுறையால் ஈந்து வந்து சிவனடி நிழல் சேர்ந்தார்.
சிவனடியார்க்கு ஆடைகள் தருவதையே ஒரு தவமாக இயற்றியதால் சிவனடி அடையும் பேறு பெற்ற அவரது வாழ்வு பக்தியின் உயர்வுக்கு சான்று.