Home » படித்ததில் பிடித்தது » வாழ்க்கை தத்துவங்கள்!!!
வாழ்க்கை தத்துவங்கள்!!!

வாழ்க்கை தத்துவங்கள்!!!

உயிரும் உடலும் கொடுத்த‌ தாய் தந்தையரை நேசி. உன் வாழ்க்கை உன் வசப்படும்.

கணவனை கடவுளாகவும் மனைவியை மதிமந்திரியாகவும் நினைத்து வாழும்குடும்பங்களில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்து நிற்கும்.
இன்பமோ, துன்பமோ சகித்துக்கொண்டு ரசித்து வாழ்ந்தால், நாம் வாழும்வாழ்க்கையும் அழகுதான்.
மாதாவின் கண்ணீர்க்கு ஆளாகாதே. பிதாவின் கோபத்தை தூண்டாதே. இரண்டுமேஉன் வாழ்க்கை முன்னேற்றத்தின் தடைக்கற்கள்.
நாலுபேரிடம் கருத்துக்கேள். ஆனால் உன் மனது சரி என்று கருதுகிறதோ அதைமட்டும் செய். உன் வாழ்க்கை வளமாக‌ இருக்கும்.
வாழ்க்கை என்னும் பூட்டிற்கு அன்பே திறவுகோல். அதை தொலைக்காமல்பார்த்துக்கொள்.
வரவுக்குள் செலவு செய். அதுவே வறுமைக்கு நல்ல‌ மருந்து.
கண் இல்லாதவன், கை இல்லாதவன், கால் இல்லாதவன் இருக்கலாம். ஆனால்வயிறு இல்லாத மனிதன் கிடையாது. வயிறுதான் வாழ்க்கை கற்றுத்தரும் முதல்பாடம்.
பெண்ணும் ஆமையும் ஒன்று. ஒவ்வொரு பெண்ணும் தான் செல்லும்இடமெல்லாம் ஆமையைப்போல் தன் வீட்டையும் சுமந்து செல்வாள்.
வாழ்க்கையை சொர்க்கமாகவோ, நரகமாகவோ அமைப்பது அவரவர்களின் மனமேஆகும்.
உன்னிடம் உள்ள பலம்,பலவீனத்தை அறிந்துகொள். பலவீனத்தை பலமாக‌ மாற்று.உன் வாழ்க்கை உன் கையில் இருக்கும்.
தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளாதவன் ஊரார் பாராட்டுக்கு ஏங்குவதுமுட்டாள்தனம்.
விதையின் தன்மை விளைச்சலில் தெரியும். மனிதனின் மேன்மை அவன்செயல்பாட்டில் தெரியும்.
அலையால் ஆர்ப்பரிக்கும் கடலும் அழகே. ஆரவாரமாக‌ குதிக்கும் அருவியும்அழகே. அமைதியாய் ஓடும் ஆறும் அழகே. தேங்கி நிற்கும் குளமும் அழகே. அந்த நிலையில் அவைகளை ரசிக்க‌ கற்றுக்கொள்வோம்.
தாயார் பூமியினும் கனமானவள். தந்தையார் வானினும் உயர்ந்தவர்.
போராடி பெறுகின்ற‌ பொருளிலும், போராடி வாழ்கின்ற‌ வாழ்க்கையிலும்எப்போதும் ஓர் இன்ப‌ அதிர்ச்சி இருக்கும்.
வதந்திகள் பரப்புவோர், வம்பளக்கும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உரையாடும்போது உங்கள் பேச்சில் பொறாமையோ, இகழ்ச்சியோ தொனிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெட்டிப்பேச்சு வீண் விதண்டாவாதங்களில் இருந்து விலகியிருங்கள். மற்றவர்களுக்கு நேர்ந்த துரதிருஷ்டத்தை பேசி சிரிக்காதீர்கள், அதில் மகிழ்ச்சியடையாதீர்கள், எந்தச் சந்தர்ப்பத்திலும்மற்றவர்களை கேலி பேசாதீர்கள்.
விதியை மதியால் வெல்லலாம். மதியை விதியால் வெல்லலாம். நாம் எப்போதும்,எதற்கும் தயாராக‌ இருக்க‌ வேண்டும்.
வெற்றியின் ரகசியம்:
வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்பே இல்லை. தனக்கு அறிவுரை சொன்ன வெற்றியாளரிடம் வெறுப்புடன் கேட்டார்

நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனவே மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள்.  என்போல்தோல்வியைத் தழுவியிருந்தால் தெரியும்”.

வெற்றியாளர் சொன்னார், “இல்லை நண்பரே! நான் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாய் இல்லை. மகிழ்ச்சியாய் இருப்பதால் வெற்றி பெற்றேன்!

வெற்றியின் ரகசியம் வெளிப்பட்டது அன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top