ஆரோக்கிய வாழ்வுக்கு வாழைப்பூவை சமையலில் சேர்த்துக் கொள்ளுங்க..!
வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணமுள்ளவை. மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது.
வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது உஷ்ணத்தால் ஏற்படும் பலவித நோய்களை, அதாவது, சிறுநீர் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த உதவுகிறது.
வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது.
கெட்டித் தயிருடன் சேர்த்து எடுக்கப்பட்ட வாழைப்பூ ஜூஸ் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பிடிப்புகளுக்கு நிவாரணமாகும்.
அத்துடன் அப்போது ஏற்படும் அதிகபட்ச உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.
மகளிர் சார்ந்த பல்வேறு உடல் உபாதைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக வாழைப்பூ இருப்பதால், பெண்கள் இதை தங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் மற்றும் அதனால் ஏற்படும் குடல் புண், சிறுநீர் பிரச்னைகளுக்கு இது மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கக்கூடியது.
வேகவைத்த வாழைப்பூ பொரியல் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகும். இதில் உள்ள ஹைபோகிளைசிமிக் எனும் ரசாயனம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்தது.
வாழைப்பூ சூப் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கும் ஏற்றது.