அசோக்… ஒரு பிரபலமான ஹோட்டலில் முதன்மை சமையல் செஃப்! அது மட்டுமல்ல, பல டிவி நிகழ்ச்சிகளில் சமையற் சார்ந்த போட்டிகளில் ஜட்ஜ்.
இந்த நிலையில், ஒரு நாள் சென்னையை மறந்து, 500 கி.மீட்டர் தள்ளி இருந்த ஒரு சிறு நகரத்திற்குச் சென்று ரெஸ்ட் எடுத்தார். மனைவியும், மகனும் கூட வந்திருந்தனர்.
அவர்கள் போரடிக்கிறது எனக் கூற, அருகில் இருந்த ஒரு தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றனர்.
இவர்கள் உள்ளே நுழைந்து இருக்கைகளில் அமர்ந்த போது, அங்கிருந்த ஏழே ஏழு பேர்… அவர்களை பார்த்து கையை ஆட்டினர்.
இதனால் மகிழ்ந்துபோன அசோக் மனைவியிடம், “”பார்த்தியா… இங்கே கூட என்னை நன்றாக தெரிந்துவைத்துள்ளனர்” என பெருமையுடன் கூற,
அதற்குள் அவர்களில் (கையை ஆட்டிய ஏழு பேரில்) ஒருவர் அசோக் அருகில் வந்து கை குலுக்கினார்.
உடனே அசோக் பெருமிதத்துடன், “”என்னை எப்படி கண்டு பிடிச்சீங்க”ன்னு கேட்க அதற்கு வந்தவர்..
“சாரி சார்… உங்களை எனக்குத் தெரியாது. எப்பப்படம் போடுவீர்கள் என தியேட்டர்காரரிடம் கேட்டபோது, குறைந்தது 10 பேராவது சேர்ந்தால்தான் படம்போடுவேன்னு சொன்னார். நல்ல வேளையா, நீங்க மூணு பேரும் வந்தீங்க” எனச் சொல்ல, அசோக் முகம் அவமானத்தில் இறுக,
வந்தவர் எஸ்கேப்.