ஒரு மீனவர்… தன் படகு அருகில் அமர்ந்து கடற்கரையில் அங்கும்இங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்…
அப்போது அவரிடம் ஒரு மேனேஜ்மென்ட் கன்சல்டென்ட் வந்தார்,
இப்படி வேஸ்ட்டா உட்கார்ந்திருக்கீங்களே இதுக்கு பதிலா… நீங்க இன்னமும் சிறப்பா ஏதாவது செய்யலாமே?
சரி… நான் என்ன செய்யணும்?
கடலுக்கு போய்… மேலும் அதிக மீன்களை பிடிக்கலாம்..
எதுக்கு?
மேலும் ஒரு படகு வாங்கி. மேலும் அதிக மீன்களை
பிடிக்கலாம்.
பிறகு?
இப்படி கடுமையா வேலை செஞ்ச பிறகு ஹாய்யா.. நிம்மதியா உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்கலாம்.
ஓஹோ… நான் இப்ப செஞ்சுக்கிட்டிருக்கிறதும் அது தான்!
என மீனவர் புன்னகையுடன் கூற, மேனேஜ்மென்ட் கன்சல்டென்ட். எஸ்கேப்…!