Home » உடல் நலக் குறிப்புகள் » அருகம்புல் ஜூஸ்!!!
அருகம்புல் ஜூஸ்!!!

அருகம்புல் ஜூஸ்!!!

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினமும் அருகம்புல் ஜூஸ் குடிங்க!

அருகம்புல் பற்றியும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், நமது உடலின் ஆரோக்கியம் மற்றும் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபட சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த உணவாக அருகம்புல் விளங்குகிறது. தினமும் அதிகாலை வேளையில் அருகம்புல் ஜூஸ் குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. “யாரடி நீ மோகினி” திரைப்படத்தில் காண்பித்தது போல காலைக்கடன் பிரச்சனைக்கு மட்டுமின்றி பல உடல்நல கோளாறுகளுக்கு நன்மை விளைவிக்கிறது அருகம்புல் ஜூஸ்.

s-img-2015-02-23-1424683953-4healthbenefitsofwheatgrass

அருகம்புல்லில் குளோரோபில், அமினோ அமிலம், கனிமம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. இவை, இரத்த சோகை, இரத்த அழுத்தம், வயிற்று புண், மலச்சிக்கல், நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி, கர்பப்பை கோளாறு போன்ற பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் இயற்கை மருந்தாக திகழ்கிறது அருகம்புல் ஜூஸ். பிரச்சனைகள் இருந்தால் தான் தினசரி அருகம்புல் ஜூஸ் குடிக்க வேண்டும் என்றில்லை. உங்களது உடலுக்கு எந்த கோளாறுகளும் அண்டாமல் இருக்க கூட நீங்கள் தொடர்ந்து தினசரி அருகம்புல் ஜூஸை குடிக்கலாம். இனி அருகம்புல் மூலம் நாம் அடையும் ஆரோக்கிய நலன்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…

1. நச்சுக் கிருமிகள்

அருகம்புல்லில் இருக்கின்ற குளோரோபில் உடலில் இருக்கும் தீய நச்சுக் கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கவும், அழிக்கவும் உதவுகிறது. இதனாலேயே நமது உடலில் ஏற்படும் பல்வேறு உடல்நல கோளாறுகளை தடுத்திட இயலும்.

2. நுரையீரல்

அருகம்புல்லிற்கு நமது நுரையீரலை சுத்திகரிக்கும் தன்மை இருக்கிறது. இதனால், நமது உடலில் நுரையீரல் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அருகம்புல் ஜூஸ் பருகுவது நல்லது.

s-img-2015-02-23-1424683940-2healthbenefitsofwheatgrass

3. இரத்த சர்க்கரை அளவு

அருகம்புல் ஜூஸ் பருகுவதனால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். இதனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் அருகம்புல் ஜூஸ் பருகுவது மிகவும் நல்லது.

s-img-2015-02-23-1424683946-3healthbenefitsofwheatgrass

4.செயல்திறன் அதிகரிக்க

அருகம்புல் நமது உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்த உதவுகிறது, இதனால் நமது மூளை மற்றும் அனைத்து தசைகளும் நன்கு செயல்படுகிறது. ஆகையால் நமது ஒட்டுமொத்த உடலின் செயல்திறனும் அதிகரிக்க அருகம்புல் ஜூஸ் பருகுவது நல்லது.

5. வயிற்று புண்

அருகம்புல் ஜூஸ் தினமும் பருகவதனால் வயிற்றில் இருக்கம் கிருமிகளும் அழியும் மற்றும் வயிற்று புண்ணும் குணமாகும்.

6. கர்பப்பை கோளாறுகள்

அருகம்புல்லில் இருக்கும் குளோரோஃபில்லின் நற்குணம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் குறைந்து, விரைவில் குணமடைய உதவுகிறது.

 

7. மலச்சிக்கல்

தினந்தோறும் அதிகாலை அருகம்புல் ஜூஸ் பருகி வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

8. சளி குணமாகும்

நுரையீரல் சார்ந்த சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்க கூடியது அருகம்புல் ஜூஸ்.

s-img-2015-02-23-1424683999-8healthbenefitsofwheatgrass

9. இரத்த அழுத்தம்

அருகம்புல் ஜூஸ் தினசரி பருகுவதனால் இரத்த சர்க்கரை அளவு மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க முடியும்.

s-img-2015-02-23-1424684006-9healthbenefitsofwheatgrass

10. உடல் எடை குறைக்க

உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், உங்களது உடல் எடையைக் குறைக்க தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அருகம்புல் ஜூஸ் பருகிவந்தால் உடல் எடை குறையும்

11. இரத்தம் அதிகரிக்க

அருகம்புல் ஜூஸ் பருகுவதனால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இரத்தம் அதிகரிக்கும். மற்றும் அருகம்புல் ஜூஸ் பருகுவதனால் இரத்தம் சுத்தீகரிக்கப்படும்.

12. உடல் துர்நாற்றம்

நம் உடலில் இருக்கும் நச்சுக்கிருமிகளால் தான் உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. அருகம்புல் ஜூஸ் பருகுவதால் நமது உடலில் உள்ள தீமை விளைவிக்கும் நச்சுக் கிருமிகள் அழிக்கப் படுகின்றன. இதனால் நமது உடலில் இருந்து வரும் துர்நாற்றம் குறையும்.

13. தொண்டை கரகரப்பு

அருகம்புல் ஜூஸை கொண்டு வாய் கொப்பளித்தால், தொண்டை கரகரப்பு சரியாகும்.

14. அஜீரணம்

உங்களுக்கு அஜீரண கோளாறு இருந்தால் தினமும் அருகம்புல் ஜூஸை குடியுங்கள். அருகம்புல் ஜூஸ் அஜீர்ண கோளாறுகளை குணமடைய செயும்.

s-img-2015-02-23-1424684046-14healthbenefitsofwheatgrass

15. நரம்பு தளர்ச்சி மற்றும் தோல் வியாதி

அருகம்புல்லில் இருக்கும் அமினோ அமிலம் மற்றும் வைட்டமின் சத்துகள், நரம்பு தளர்ச்சி மற்றும் தோல் சார்ந்த வியாதிகளில் இருந்து குணமடைய பயன்தருகிறது. எனவே, தினசரி அருகம்புல் ஜூஸை பருகுவதை கடைப்பிடியுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top