முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
பீன்ஸ் வகை ஆகட்டும் அல்லது பயறு வகையாகட்டும், முளைக்கட்டிய வடிவில் இந்த உணவுகளை உண்ணும் போது உங்கள் நாள் சிறப்பாக இருக்கும்.
தானியங்களையும், பயறுகளையும் தண்ணீரில் ஊற வைத்து உண்ணுவதே முளைக்கட்டிய உணவாகும். எண்ணெயில்லாமல் சமைப்பது, ஏன் அவித்து உண்ணுவதை காட்டிலும் இது நமக்கு நல்ல பயனை அளிக்கிறது.
முளைக்கட்டிய பயிர்கள் தயாரிக்க அதிக செலவு ஆவதில்லை. அதேப்போல் அவைகளில் புரதம், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் டையட்டரி நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவாகவும் விளங்குகிறது.
முளைக்கட்டிய பயிர்கள் நம் உடலுக்கு நன்மையை அளிக்க சில காரணங்கள் உள்ளது. அவைகளைப் பற்றி படித்து அதன் நன்மைகளை அடைந்திடுங்கள்.
அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
முளைக்க வைக்கும் போது பயறுகளும் பீன்ஸ்களும் உயிர் பெற்ற தாவரமாக மாறுகிறது. இதனால் வைட்டமின் பி, சி மற்றும் கரோட்டின் போன்றவைகள் அதில் வளமையாக காணப்படும்.
மேலும் நம் உடல் கனிமங்களை நன்றாக உறிஞ்சிட உதவிடும். மேலும் இந்த செயல்முறை ஃபைடிக் அமிலத்தின் தாக்கத்தை நடுநிலையாக்கும்.
இந்த அமிலம் கனிமங்களுடன் சேர்ந்து, உடல் அவைகளை முழுமையாக உறிஞ்சுவதை முட்டுக்கட்டையாக இருக்கும்.
முளைக்காத பீன்ஸை காட்டிலும், முளைக்கட்டிய பீன்ஸில் அதிக புரதமும் குறைந்த ஸ்டார்ச்சும் உள்ளது.
குறைவான க்ளைசெமிக் இன்டெக்ஸ்
உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவின் மீது ஒவ்வொரு உணவும் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவீடு தான் க்ளைசெமிக் இன்டெக்ஸ்.
குறைவான க்ளைசெமிக் இன்டெக்ஸ் அடங்கியுள்ள உணவுகளை உட்கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் இதய குழலிய நோய்கள் உருவாகும் இடர்பாட்டை இது குறைக்கும்.
முளைக்கட்டிய பீன்ஸ் மற்றும் பயறுகளில் க்ளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும். இதனால் அவைகளை உண்ணுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவாக விளங்கும்.
சுலபமான செரிமானம்
பயறுகளும் தானியங்களும் உண்ணும் போது, செரிமானமாவதற்கு கஷ்டமாக உள்ளது என பலரும் குறை கூறுவார்கள். இருப்பினும் தானியங்கள் முளைத்து விட்டால், செரிமான செயல்முறை சுலபமாகிவிடும்.
முளைக்கட்டிய பயிர்களால், உணவு என்சைம்கள் செயல்படுத்தப்படும். இது செரிமானத்திற்கு உதவிடும். என்சைம்கள் வளமையாக உள்ளதால், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் முளைக்கட்டிய தானியங்கள் உதவும்.
இதுப்போக ஃபைடேட் போன்ற பயறுகளில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்பிகளை இது குறைக்கும். இந்த ஊட்டச்சத்து எதிர்ப்பிகள் தான் செரிமானத்தை சிரமமாக்குவது. உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் செரிமானமாவதற்கு சிரமப்படும் உணவுகளைத் தவிர்க்கவும்.
உடலுக்கு அல்கலைன்னின் தேவை
நல்ல ஆரோக்கியத்தை பராமரித்திட, அசிடிக் மற்றும் அல்கலைன் உணவுகளை சமநிலையுடன் உண்ண வேண்டும். பொதுவாக தானியங்களிலும் பயறுகளிலும் இயற்கையாகவே அமிலத்தன்மை அதிகமாக இருக்கும்.
அதனால் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அல்கலைன் உணவுகளுடன் அதனை சமநிலைப்படுத்த வேண்டும். தானியங்களையும் பயறுகளையும் முளைக்கவிட்டால், இயற்கையாகவே அவைகளில் அல்கலைன் தன்மை வந்து விடும்.
தானியங்களை முளைக்க வைப்பது எப்படி?
தானியங்களை முளைக்க வைக்கும் செயல்முறை மிக எளிது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், முந்தைய நாள் இரவு தானியங்களை தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும்.
மறுநாள் காலையில் அதனை நன்றாக பல முறை அலசி விட்டு, ஒரு ஈரமான துணியில் கட்டி வைக்க வேண்டும். உங்கள் விருப்பத்திற்கேற்ப அது முளைக்கட்டும் வரை நாள் முழுவதும் அதனை நன்றாக நீரை தெளித்து ஊற வையுங்கள்.
முளைக்கட்டிய தானியங்களை அவித்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். ஆரோக்கியமான இந்த முளைக்கட்டிய தானியங்களை உங்கள் காலை உணவாக உட்கொண்டு பாருங்க