Home » பொது » சிவபெருமானிடம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!!!
சிவபெருமானிடம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!!!

சிவபெருமானிடம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!!!

சிவபெருமான் பற்றி எவ்வளவோ விஷயங்கள் நாம் தெரிந்திருப்போம். ஆனால், சிவபெருமானிடம் இருக்கும் சூப்பர்மேன் விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்! சிவனிடம் வருமானம், வரம் வேண்டுவது மற்றுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.

இது நீங்கள் உங்களது அன்றாட வாழ்விலும், தொழில் முறைகளிலும் நல்ல முன்னேற்றம் காண உதவும். சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து, ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது வாழ்வியில் குறித்தும், பண்பு நலன்கள் குறித்தும் பல விஷயங்கள் சூசகமாகக் கூறப்பட்டுள்ளது.

இயல்பாகவே மற்ற கடவுள்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சிவபெருமான் மிகவும் எளிமையான தோற்றம் கொன்றவர். ஆனால், மிகவும் உடல்திறன் அதிகமாகவும், திடகாத்திரமாகவும் காட்சியளிக்கும் கடவுளாக திகழ்வார் சிவபெருமான்.

இதிலிருந்து, எளிமையாக இருப்பவர்களின் வாழ்க்கை தான் நல்ல உயர்வான, திடமான நிலைக்கு செல்லும் என நாம் தெரிந்துக்கொள்ளலாம். மக்கள் வீண் பகட்டை தவிர்ப்பது அவர்களுக்கு தான் நல்லது. சரி இனி, சிவபெருமானிடம் இருந்து பொதுமக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பண்பு நலன்கள் மற்றும் வாழிவியல் கருத்துகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்….

ஜடாமுடி

சிவபெருமானின் நேர்க்கொண்டு உயர்ந்து காணும் ஜடாமுடியின் மூலம், ஒருமுகமாக இருக்கும் உடல், மனம் மற்றும் ஆத்மா உங்களது உடல்நிலையையும், மனநிலையும் அதிகரிக்க செய்யும் மற்றும் உங்களை அமைதியான நிலையில் ஆட்கொள்ள உதவும். உங்கள் செயல்களில் ஒருமுகத்தோடு செயல்பட பயன்தரும்.

s-img-2015-02-23-1424676227-supermanfactorsoflordshiva1

நெற்றிக்கண்

சிவபெருமானின் நெற்றிக்கண் நமக்கு கூறுவது என்னவெனில், நமக்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு அதை தகர்த்தெறிந்து, முடியாது என்பனவற்றையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே ஆகும்.

s-img-2015-02-23-1424676234-supermanfactorsoflordshiva2

திரிசூலம்

திரிசூலம் மூலமாக நாம் அறிய வேண்டியது, நமது மனது, அறிவாற்றல், தன்முனைப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தினோம் எனில் நமது வேளைகளில் சிறந்து செயல்பட இயலும் மற்றும் தோல்விகளை தகர்த்தெறியலாம் என்பனவாகும்.

s-img-2015-02-23-1424676243-supermanfactorsoflordshiva3

ஆழ்ந்தநிலை

சிவபெருமானின் ஆழ்நிலை உருவின் மூலமாக, நாம் அமைதி மற்றும் பொறுமையைக் கையாளும் போது, நமது தினசரி பிரச்சனைகளையும், கவலைகளையும் எளிதாக கடந்து தெளிவான மனநிலை பெறலாம் என்பதே ஆகும்.

s-img-2015-02-23-1424676252-supermanfactorsoflordshiva4

சாம்பல்

சிவபெருமானின் தேகத்தில் இருக்கும் சம்பல் நமக்கு உணர்த்துவது, நம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் அல்ல, அனைத்தும் கடந்து போகும். அதனால் எதற்காகவும் மனக்கவலைப்படாமல், துயரம் கொள்ளாமல் உங்கள் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து வாருங்கள் என்பதே ஆகும்.

s-img-2015-02-23-1424676259-supermanfactorsoflordshiva5

நீலகண்டன்

சிவபெருமானின் நீல நிற தொண்டையின் மூலம் நாம் அறியவேண்டியது, நமக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், அதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதை மற்றவர் மீது திணித்து, உங்கள் நிலையை நீங்களே குறைத்துக் கொள்ள கூடாது, என்பதே ஆகும்.

உடுக்கை

சிவபெருமானின் உடுக்கையின் மூலமாக, உங்கள் உடலின் அனைத்து எண்ணங்களையும் ஒருமுகமாக செயல்படுத்தும் போது, உங்கள் உடல் சுத்தமாகி, நோயின்றி வாழ உதவுகிறது என்பதே ஆகும்.

s-img-2015-02-23-1424676274-supermanfactorsoflordshiva7

கங்கை

சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை நமக்கு உணர்த்துவது, உங்களது அறியாமையின் முடிவில் ஒரு தேடல் பிறக்கிறது. அந்த தேடலில் இருந்து தான் உங்களுக்கான புதிய வழி தென்படுகிறது என்பதே ஆகும்.

s-img-2015-02-23-1424676281-supermanfactorsoflordshiva8

கமண்டலம்

சிவபெருமானின் கமண்டலம் மூலம் நம் அறிய வேண்டியது, நமது உடலில் இருந்து தீய எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்தோம் என்றால் நாம் நல்ல நிலையை எட்ட முடியும் என்பதே ஆகும்.

s-img-2015-02-23-1424676290-supermanfactorsoflordshiva9

நாகம்

சிவபெருமானின் கழுத்தை சுற்றி இருக்கும் நாகம் மூலமாக நாம் உணர வேண்டியது, நம்முள் இருக்கும் ‘நான்’ எனும் அகங்காரத்தை விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும் மற்றும் உடல்நிலையும் மேலோங்கும் என்பதே ஆகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top