உலகின் சிறந்த துடுப்பாட்டக்காரரான டான் பிராட்மேன் அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், தெற்கு அவுஸ்திரேலியா ஆகிய அணிகளில் விளையாடி உச்சம் தொட்டார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக இருக்கும் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன், ஆகஸ்ட் 27ம் திகதி 1908ம் ஆண்டு, நியூ சவுத் வேல்ஸ்லில் பிறந்தார்.
20 வருடம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஈடுபட்டு பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தினார். டெஸ்ட்டில் 52 போட்டிகளில் விளையாடி 6996 ஓட்டங்கள் எடுத்தார். 334 என அதிகபட்ச ஓட்டம் எடுத்து, யாரும் எட்டிராத 99.94 என்ற சராசரி ஒட்டவிகிதமும் பெற்றார்.
முதல் தரத்தில் 234 போட்டிகளில் விளையாடி 28,067 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் இவர் எடுத்த அதிக பட்ச ஓட்டம் 452* மற்றும் சராசரி 95.14 ஆகும். மொத்தமாக 146 முறை 100 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 99.94 என அதிகமான சராசரி பெற்றுள்ள இவரின் ஓட்டங்களில் மீதமுள்ள 4 ஓட்டங்களை அவர் எப்படி தொலைத்தார் என கேள்வி எழும்ப அதையும் கண்டுபிடிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.
சராசரியை தொலைத்த டான் பிராட்மேன்
டான் பிராட்மேன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கணக்கில் விடுப்பட்ட அந்த 4 ஓட்டங்களை கண்டுபிடித்து விடலாம் என்று புள்ளியியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சார்லஸ் டேவிஸ் என்ற புள்ளியியல் நிபுணர், 20 ஆண்டுகால அவரது கிரிக்கெட் மற்றும் 197 மணி நேரங்களுக்கு மேலாக அவர் களத்தில் நின்றது என அவரது திறமை என்பதை வைத்து பார்க்கும்போது, அவர் காலத்தில் ஓட்டங்கள் குறிக்கப்பட்ட முறையை நாம் ஏன் உத்தரவாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் கணனி வழி பயன்பாடு இல்லா காலகட்டத்தில் இவரது ஓட்டங்கள் மற்ற வீரர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் கூறினார். எனவே அவரது சராசரி 100 ஆகவே இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வரலாறு நிகழ்த்திய டான் பிராட்மேன்
யூலை மாதம் 11ஆம் திகதி 1930ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக கருதப்படும் டான் பிராட்மேன் இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஒரே நாளில் 309 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது ஒரே நாளில் முச்சதம் எடுத்த ஒரே வீரர் டான் பிராட்மேன் தான் என்ற வரலாறு படைத்தார்.
மேலும் ஒரு உள்ளூர் போட்டியில் டான் பிராட்மேன் ஆட களம் புகுந்தார். அந்த போட்டியில் முதல் ஓவரின் எட்டு பந்துகளில் 6, 6, 4, 2, 4, 4, 6, 1 என்றும் அடுத்த ஓவரில் 6, 4, 4, 6, 6, 4, 6, 4 என்றும் அடித்து நொறுக்கிய பிராட்மேன் இருபத்தி இரண்டு பந்துகளில் 100 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்தார்.
அவரது சிறந்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வாட்சன் ஆகியோரை சந்தித்த அவர் 2000ம் ஆண்டு புத்தாண்டுக்கு தனது வீட்டுக்கு திரும்பினார்.
அங்கு 2001ம் ஆண்டு பிப்ரவரி 25ம் திகதி தனது 92 ஆவது வயதில் டான் பிராட்மேன் இயற்கையை எய்தினார். டான் பிராட்மேன் இந்த உலகை விட்டு நீங்கினாலும் யாராலும் அழிக்க முடியாத சாதனைகளை நிலை நிறுத்திச் சென்றுள்ளார்.
பிராட்மேன் விளையாடியது..52 டெஸ்ட்
ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் விளையாடிய காலம் மிக மிகக் குறுகியது. மொத்தமே 52 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடியுள்ளார்.
முதல் தரப் போட்டிகள் 234
அதேபோல முதல் தரப் போட்டிகள் என்று பார்த்தால் 234 போட்டிகள்தான் ஆடியுள்ளார்.
எடுத்த ரன்கள் எத்தனை…?
டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள் 6996 ஆகும். முதல் தரப் போட்டிகளில் 28,067 ரன்களை எடுத்திருந்தார்.
சதங்களின் நாயகன்
அதேபோல சதம் போடுவதிலும் அசத்தியவர் பிராட்மேன்தான். டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களைப் போட்டுள்ள இவர், முதல் தரப் போட்டிகளில் 117 சதங்களைப் போட்டு அந்தக் காலத்து பந்து வீச்சாளர்களை சத்தாய்த்தவர். அரை சதங்களைப் பொறுத்தவரை, டெஸ்ட்டில் 13ம், முதல் தரப் போட்டிகளில் 69ம் எடுத்துள்ளார்.
பிராட்மேன் சராசரி…
பிராட்மேனின் பேட்டிங் சராசரியைப் பார்த்தால் பயந்து வருகிறது.. டெஸ்ட்டில் 99.94 என்ற சராசரியை வைத்திருந்தார். அதேபோல முதல் தரப் போட்டிகளில் அவரது சராசரி 95.14 ஆகும். உலகின் எந்த ஒரு வீரரிடமும் இப்படி மலைக்க வைக்கும் அலேக் சராசரி இருந்ததாக நினைவில்லை.
பிராட்மேன் விளையாடியது…20 வருஷம்
பிராட்மேன் 20 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் விளையாடிய போட்டிகள் 52 மட்டுமே. ஆனாலும் கிட்டத்தட்ட 100 சதவீத சராசரியை அவர் வைத்துள்ளார்.
ஒருவேளை பிராட்மேன் மும்பையில் பிறந்திருந்தால்??
ஒரு வேளை பிராட்மேன் இந்தியாவில், அதிலும் மும்பையில் பிறந்திருந்தால், சச்சின் போலவே அவருக்கும் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்திருந்தால்… அவர் அடித்த ரன் அடிக்கு, இன்னும் பல மில்லனியத்திற்கு யாரும் பக்கத்தில் கூட நெருங்க முடியாத அளவுக்கு லட்சக்கணக்கில் அவர் ரன்கள் குவித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றே தோன்றுகிறது. ரொம்ப காலத்திற்கு விளையாடிய வகையில் சச்சினை ‘பிராட்’ மேன் என்று சொல்லலாம்.. ஆனால் விளையாடிய விதத்தைப் பார்ததால்.. பிராட்மேன்தான் உண்மையான ‘சச்சின்’…..!