சோதிடத்தில் கிரகங்கள் ஏழு(நிழல் கிரகங்கள் தவிர)…
இதன் அடிப்படையில், வாரத்தின் நாட்கள் ஏழு…
திருமால் இருக்குமிடம் ஏழுமலை…
குமரிக்கண்டத்தில் இருந்த ஏழு வகை ஏழ் நாடுகள்(49 நாடுகள்)…
கடைச்சங்க தமிழகத்தில் இருந்தது 49(7*7) நாடுகள்…
முதற்சங்க வள்ளல்களின் எண்ணிக்கை ஏழு…
இடைச்சங்க வள்ளல்களின் எண்ணிக்கை ஏழு…
கடைச்சங்க வள்ளல்களின் எண்ணிக்கை ஏழு…
ஆணின் பருவங்கள் ஏழு…
பெண்ணின் பருவங்கள் ஏழு…
மலரின் பருவங்கள் ஏழு…
இசையின் சுரங்கள் ஏழு…
சென்மங்களின் எண்ணிக்கை ஏழு…
தமிழ் மொழியில் நெடில் உயிரெழுத்துக்கள் ஏழு…
திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளிலும் உள்ள சீர்கள் ஏழு…
அகப்பொருள் திணைகள் ஏழு…
புறப்பொருள் திணைகள் ஏழு…
தலைமுறைகளின் கணக்கு ஏழு…
அறிவுகள் ஏழு(ஆறு அறிவு+திருக்குறள் கூறும் கடவுளை அறியும் அறிவான வாலறிவு)…
வானவில்லின் நிறங்கள் ஏழு…
மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு…
உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு…
நாடிகள் ஏழு…
மேலுலகம் ஏழு…கீழுலகம் ஏழு…
ஏழு புண்ணிய நதிகள்…
ஏழு முனிவர்கள்…
ஏழு கன்னிகள்…
ஏழு கடல்…
ஏழு கண்டம்…
நம்மை திட்டும் பொழுதும் கூட ஏழு கழுதை வயசு என திட்டுவார்கள்…
இப்படி, நம் கலாசாரமெங்கும் ஏழின் மயமென்றால், மேற்குலக நாடுகளின் கலாசாரத்திலும் ஏழின் மயமே…
‘Bracelet of Christianity’ உள்ள நிறங்கள் ஏழு…
கிறிஸ்துவத்தில் ஏழாம் நாள் சிறப்பான நாள்…
கிறிஸ்துவத்தில் கொடிய பாவங்கள் ஏழு…
சிலுவையில் இயேசு கூறிய வார்த்தைகள் ஏழு…
எழு குன்றுகளின் நகரம் ரோம்…
ஏழு சொர்க்கம்(குரான்)…
ஏழு வானங்கள்(குரான்)…
இப்பண்பாட்டின் தொடர்ச்சியாக, உலகில் உள்ள அதிசயங்களின் கணக்கு ஏழு…
கிழக்கில்,
Karateவில் உள்ள படிநிலைகள்(Belt) ஏழு…
ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள்(ஜப்பான்)…
இப்படி உலகெங்கும் எங்கும் ஏழின் மயமாகவே உள்ளதன் காரணம் என்ன?…
திருக்குறளில் ஏழு என்பதை ஏழு இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார்…