Home » பொது » ஐ.எஸ்.ஓ!!!
ஐ.எஸ்.ஓ!!!

ஐ.எஸ்.ஓ!!!

ஐ.எஸ்.ஓ. ஆரம்பிக்கப்பட்ட நாள்:

உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (International Organisation for Standardization) ஆகும். ISO எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். எனினும் இது உருவாக்கும் தரங்கள் (நியமங்கள்), நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது நாட்டுத் தரங்கள் (தேசிய நியமங்கள்) மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், வேறு பல அரசுசார்பற்ற நிறுவனங்களைவிட இது சக்தி வாய்ந்ததாகும். உலகின் பல பெரிய வணிக நிறுவனங்களும், இதன் உறுப்பு நாடுகளிலிருந்து குறைந்தது ஒவ்வொரு தரங்கள் (நியமங்கள்) நிறுவனமும் இதன் நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறார்கள்.

இது மின் கருவிகள், துணைக்கருவிகளின் தரம் நிறுவும் அனைத்துலக மின்தொழில்நுட்ப ஆணையத்துடன் (IEC) நெருக்கமாக இணைந்து தொழிற்பட்டு வருகிறது.

ISO என்பது இந்த நிறுவனத்தின் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகப் பிழையாகக் கருதப்பட்டு வருகிறது. பல்வேறு மொழிகள் வழங்கும் பல நாடுகள் இந்த நிறுவனத்தில் இருப்பதால், ஒவ்வொரு நாடும் தங்கள் மொழிகளிலுள்ள இந்நிறுவனத்தின் பெயர்களை வெவ்வேறு விதமாகச் சுருக்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமுகமாக சமம் எனப் பொருள் தரும் isos என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ISO (ஐஎஸ்ஓ) என்ற பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஐஎஸ்ஓ நிறுவும் தரங்களில் (நியமங்களில்) மிகப் பெரும்பான்மையானவை ஒரு குறிப்பிட்ட உற்பத்திப்பொருள் அல்லது செயல்முறைகளுக்கெனச் (process) சிறப்பாக உருவாக்கப்பட்டவை. சில ஒரு துறை முழுவதற்குமே பொதுவாகப் பொருந்தக் கூடியவை. இப்போது பரவலாக அறியப்படுகின்ற ஐஎஸ்ஓ 9000 மற்றும் ஐஎஸ்ஓ 14000 தொடர் இலக்கங்கள் கொண்ட நியமங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தனவாகும்.

தொழிலின் தரத்தையும், வளத்தையும் உயர்த்த உதவும் ஐஎஸ்ஓ

தமிழகத்தில் மட்டும் அல்ல உலகத்தில் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் அங்கு தயராக்கப்படும் பொருளுக்கு தரம் மிக அவசியமாக உள்ளது.

தற்போது தமிழகத்தில் நடைபெறும் வணிகத்திற்கு தரம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. இதற்காக பல வணிக நிறுவனங்கள் நாடிச் செல்வது ஐ.எஸ்.ஓ. சர்டிபிகேட்.

இந்த சர்டிபிகேட் இருந்தால் தான் வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பதோடு, லாபத்தை பெற முடியும் என்ற நிலைக்கு வியாபார நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளது.

சரி, ஐ.எஸ்.ஓ. சர்டிபிகேட் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? இதனால் யாருக்கு லாபம்? என பார்ப்போம்.

ஐ.எஸ்.ஓ என்றால் என்ன?

ஐ.எஸ்.ஓ ( International Organization for Standardization) என்பது ஒரு சர்வதேச தரச் சான்றிதழ் ஆகும்.

ஐ.எஸ்.ஓ. 9001 2008 என்பதன் பொருள் என்ன?

ஐ.எஸ்.ஓ. 9001 என்பது தரத்திற்காக ஐ.எஸ்.ஓ. நிறுவனத்தால் தரப்படும் குறியீடாகும். 2008 என்பது அது மறுபரிசீலனை செய்த வருடமாகும்.

ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் யார் யார் எல்லாம் பெறலாம்?

ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழை எந்தவிதமான தொழில் முனைவோரும் பெறலாம். இதை இவர்கள் தான் பெற வேண்டும் என்ற எந்தவிதமான விதிகளும் இல்லை.

ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதன் நோக்கம் என்ன?

ஒரு தொழிற்சாலையிலோ அல்லது தொழிற் முனைவோர் இடத்திலோ மருத்துவமனையிலோ ஏற்னவே உள்ள தரத்தினை மேம்படுத்துவதற்காக மற்றும் தொழில் வளத்தை பெருக்கவும், வியாபாரத்தை விரிவு படுத்தவும் இந்த ஐ.எஸ்.ஓ. சான்றிதழ்கள் பயன்படுகின்றன.

இதற்கு அரசு என்ன உதவி செய்கின்றது?

ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதற்கு எஸ்.எஸ்.ஐ. யூனிட்களுக்கு அரசாங்கம் நிதியுதவி அளிக்கின்றது. ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற பின்பு அதன் விவரங்களை அனுப்பினால், நாம் எவ்வளவு செலவு செய்தோமோ அதில் 75 சதவீத்தை அரசு மானியமாக வழங்குகின்றது. ஆகவே, சிறு தொழில் முனைவோர் ஐ.எஸ்.ஓ. 9001 2008 தரச் சான்றிதழ் பெறுவதில் எந்தவித தடையும் இல்லை.

ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்?

ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறுவதற்கு குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் ஆகும்.

இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

1. உலகத்தர அங்கீகாரம் கிடைக்கின்றது.

2. தரத்தை உயர்த்தி வியாபாரத்தை பெருக்கலாம்.

3. பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகின்றது.

4. நமது உற்பத்தியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

5. வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முடியும்.

ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்றால் வங்கிகளில் கடன் பெற முடியுமா?

நிச்சயமாக முடியும். சிறு மற்றும் குறு தொழில் செய்வோர் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழை பெறுவதன் மூலம் அரசு வங்களிலும், அரசு அனுமதி பெற்ற வங்கிகளிலும் வியாபாரத்தை பெருக்க கடன் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top