Home » படித்ததில் பிடித்தது » இதை நான் எதிர்பார்க்கல!!!
இதை நான் எதிர்பார்க்கல!!!

இதை நான் எதிர்பார்க்கல!!!

1.அறிவு உழைப்பு, உடல் உழைப்பு – இரண்டில் எது பிடிக்கும்??

உடலை இயந்திரமாக்காத அறிவின் உழைப்பு பிடிக்கும்!!

2.அனுபவம், ஆற்றல்?? – இரண்டில் எது சிறந்தது?

அனுபவத்துக்குப் பின் கிடைக்கும் ஆற்றல் சிறந்தது!!

3.கோபம், சிரிப்பு – இரண்டில் எது விரும்பத்தக்கது??
குழந்தையின் கோபம்! ஏழையின் சிரிப்பு!!

4.இன்பம், துன்பம் – எது வரவேற்கத்தக்கது??

துன்பத்துக்குப் பின் கிடைக்கும் இன்பம்!! இன்பத்திற்குப் பின் கிடைக்கும் துன்பம்!!

5.வெற்றி, தோல்வி – எது நல்லது??
தோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றி!
வெற்றிக்குப் பின் கிடைக்கும் தோல்வி!

6.நட்பு, பகை – இவ்விரண்டில் எது போற்றத்தக்கது??
நாம் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டாத நட்பைவிட
நம் தவறுகளுக்காகச் சண்டையிடும் பகையே போற்றத்தக்கது!!

7.செல்வம், வறுமை – இவற்றுல் எது நிலையானது??
செல்வமும், வறுமையும் மாறிமாறிவரும் என்ற மாற்றம் மட்டுமே நிலையானது!!

8.எதிர்பார்ப்பு, ஏமாற்றம் – இதில் ஏமாற்றம் குறைய என்ன செய்யலாம்??
எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ள ஏமாற்றம் தானே குறையும்!!

9.பற்று, துறவு – ஒரு சான்று தருக?
தாமரை இலையின் நீர்த்துளி போல நீருக்குள்ளே இருந்தாலும் ஒட்டி ஒட்டாமல் இருக்கவேண்டும்!!

10.பரிசு, பாராட்டு – எது விலைமதிப்பு மிக்கது??
உணர்ச்சியற்ற பரிசை விட, மனம் நிறைந்த பாராட்டு விலைமதிப்பு மிக்கது!!

11.உண்மை, பொய் – இவற்றில் எதை நாம் நீக்கவேண்டும்??
உண்மைபோல பொய் பேசுவதையும்,
பொய் போல உண்மை பேசுவதையும் நீக்கவேண்டும்!!

12.கவிதை, உளறல் – எது போற்றத்தக்கது??
உளறும் கவிதையை விட, கவிதை போன்ற உளறல் போற்றத்தக்கது!!

13.சொற்பொழிவு, மொனம் – எது சிறந்தது?
பொருளற்ற சொற்பொழிவைவிட, பொருள் பொதிந்த மௌனம் சிறந்தது!!

14.கேள்வி, பதில் – எது அறிவை வளர்ப்பது??
மனப்பாடம் செய்து சொல்லும் பதிலைவிட, அறியாமல் வினவும் கேள்வியே அறிவை வளர்க்கும்!!

15.இயற்கை, அறிவியல் – இவற்றுள் எது தேவையானது??
இயற்கையைச் சிதைக்காத அறிவியலே தேவையானது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top