சீரகத்தின் மருத்துவ குணங்கள்
கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
சீரகத்தின் மருத்துவப் பயன்கள்:-சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்றுகுணமாகும்.
கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்குநிற்கும்.
சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால்,தொடர் விக்கல் விலகும்.
பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.
வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.
“ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து”
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். இதுபோன்ற எண்ணற்ற தன்மைகள் கொண்ட சீரகத்தின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.
சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சீரகத்தை தூள் செய்து லேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். பித்த நோய்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், அதிக உடல் சூடு, பசியின்மை இப்படி பல நோய்களுக்கு சீரகம் சிறந்த மருந்தாகிறது
சீரகத்தை நன்கு வறுத்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்கவைத்து, வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து மாதவிடாய் காலங்களில் இளம் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு கொடுக்க, வலி சிறிது நேரத்திலேயே குறைந்து விடும்.
பசி மந்தம், மற்றும் உணவு ஜீரணமாகாமல் இருப்பவர்கள் சீரகம் கொதிக்க வைத்த நீரை அடிக்கடி இளம் சூட்டில் பருகி வர, பசி ஏற்பட்டு ஜீரணம் ஒழுங்காகும்.
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் சீரகத்தண்ணீரை இளம் சூட்டுடன் உணவிற்கு பத்து நிமிடத்திற்கு முன்பும், உணவு உண்டு பத்து நிமிடத்திற்கு பின்பும் அருந்த, உணவு நன்கு ஜீரணமாகி, கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்கும்.
வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், நீர்கட்டு, நீர்கருக்கு போன்றவற்றிற்கு சீரக தண்ணீரை அருந்த, விரைவில் நிவாரணம் உண்டாகும்.
சீரகம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் இயல்புடையது. ரத்த அழுத்த நோயாளிகள்தினம் ஒரு தேக்கரண்டி சீரகம் சாப்பிட, ரத்த அழுத்தம் சீராகும். திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். * மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்
பிரசவித்த பெண்களுக்கு இது மிக சிறந்த மருந்தாகிறது. சீரகத்தை வறுக்கும் பொழுது நறுமண எண்ணைய் வெளிவரும். அப்பொழுது நீர் ஊற்றி கொதிக்க வைத்து அந்த நீரை பருகும் பொழுது சீரகத்தின் பலன் அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்கள், இந்த சீரக நீரை பருக தாய்ப்பால் பெருகும். கருப்பை பலப்படும். குழந்தை பெற்றதால் கருப்பையில் உண்டான அழற்சி நீங்கும்.
சீரகத்தில் இரும்பு சத்தும், மங்கனீசிய சத்தும் நிறைந்து உள்ளன. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் பிரண வாயுவை நம் உடலில் உள்ள செல்களுக்கு அளித்து புத்துணர்ச்சியளிக்கின்றது.
ஈரலை நன்கு வேலை செய்ய தூண்டி, நம் உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது.
சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.
சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.
சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.
மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். மந்தத்தைப் போக்கும்; நன்றாக தூக்கம் வரும்
நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
சீரகத்திலுள்ள தைமோலின் வயிற்றுப்பூச்சிகளை கொல்லவல்லது. செப்டிக் மருந்தாகும். சீழையும், கிருமியையும் போக்கவல்லது. அதுவும் கொக்கிப்புழுக்களை ஒழிக்கும். வாய்வு உப்புசத்தை போக்கும். சிறுநீர் பிரிய உதவும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து. இத்துடன் கொத்தமல்லி சாறையும் (ஒரு தேக்கரண்டி) சிறிது உப்பு சேர்த்து குடிக்க வயிற்று கோளாறுகள் குறையும் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் கால் ஸ்பூன் சீரகத்தைத் தூள் செய்து கலந்த நீரை பருகினால் தொற்று நோய்கள் வராமல் தடுக்கலாம். இது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் போல் பாதுகாப்பானது
வயிற்று வலிக்கு 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் வெந்தயம் தூள் செய்து மோரில் கலந்து குடிப்பது வழக்கம்.
தேள்கடித்தால் வெங்காய சாறுடன் அரைத்த சீரகம் கலந்து உணவை, தேள் கடித்த இடத்தில் தடவ வலிக் குறையும்.
சீரகத்தின் ஒரு வகையான கருஞ்சீரகமும் மூலவியாதி, ஞாபக மறதி போன்றவற்றுக்கு நல்லது. சீரகத்தைப் போலவே பயன்படும்.
இதர பயன்கள் & தகவல்கள்
குளிர்காய்ச்சல், காமாலை, வாய்நாற்றம், வாயில் எச்சில் ஊறுவது, பெண்களின் சூதகத்தை கோளாறுகள், இவற்றுக்கு மருந்தாக சீரகம் உதவும்.
தவிர உணவுகளுக்கு சுவை கூட்டவும், மணமளிக்கவும் பயன்படுகிறது. வாசனை பொருட்கள் தயாரிப்பில் சீரக எண்ணெய் பயன்படுகிறது.
உள் மருந்தாக மட்டுமல்ல, சீரகம் வெளிமருந்தாகவும் பயன்படும். சீரகத்தை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்துக் கொண்டு வாரம் ஒருமுறை இரத்தக் கொதிப்பு நோயுள்ளோர், பித்த தலைவலி, கிறுகிறுப்பு உள்ளோர் தலைக்குத் தேய்த்துக் குளிக்க நோய் கட்டுக்குள் வரும்.
சீரகத்தில் பொன் சத்து இருப்பதாகச் சித்தர்கள்
கூறியுள்ளார்கள். “நீ இதனையுண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாயாக” என்று அவர்கள் கூறியுள்ளதை நினைவுபடுத்துகிறேன். அதனால் தான், சீரகத்தைத் தூள்செய்து சீரணி இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.
சீரக பொடி:
சீரகம் – 100 கிராம்
எலுமிச்சம்பழம் – 2
மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
சீரகத்தை எலுமிச்சம்பழ சாற்றில் கிளறி நிழலில் காய வைத்து உலர்த்தி நன்கு காய்ந்ததும், பொடி செய்து கொள்ளவும். மிளகை வறுத்து பொடி செய்து சீரகப்பொடியுடன் உப்பு கலந்து வைத்துக் கொள்ளவும். சூடான சாதத்துடன் சிறிது நெய் கலந்து சாப்பிட்டு வர உணவு, நன்கு ஜீரணமாகும். வறட்சி நீங்கும். நோய்வாய்ப்பட்டு பத்திய உணவு உண்பவர்கள், அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் இருப்பவர்கள், சீரகப் பொடி சாற்றுடன் பாசிப்பருப்பு கலந்த காய்கறி கூட்டு கலந்து சாப்பிட, உணவு நன்கு ஜீரணமாகி விரைவில் குணம் உண்டாகும்.
சீரக ரசம்:
சீரகம் – 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 2
– 10 நிமிடம் நீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
புளி – சிறிய எலுமிச்சை அளவு
கடுகு- 1 தேக்கரண்டி
நெய்- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- கைப்பிடி அளவு
பெருங்காய பொடி – 1/4 தேக்கரண்டி
தேவையான அளவு – உப்பு.
செய்முறை:
புளியை கரைத்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்க வேண்டும். சீரகம், துவரம்பருப்பு, மிளகாய் வற்றல் அரைத்து கொதிக்கும் புளி நீரில் கலந்து, மிதமான தீயில் கொதிக்க வைத்து, உப்பு, பெருங்காய பொடி கலந்து கொள்ளவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். மிக சுவையான சீரணத்தை தூண்டும் ரசம், பிரசவித்த பெண்கள் சாப்பிட உணவு எளிதில் ஜீரணமாகும். எண்ணெய் தேய்த்து குளித்த அன்று இந்த ரசம் சாப்பிடலாம். பத்திய சாப்பாட்டிற்கு உகந்த ரசம்
சீரக சூப்
தேவை
துவரம் பருப்பு-1/2கப்
எலுமிச்சம் சாறு-1/2மூடி
மிளகாய் வற்றல்-2
சீரகம்-1டீஸ்பூன்
மிளகு-1/4டீஸ்பூன்
நெய்-1டீஸ்பூன்
கொத்தமல்லி -சிறிது
செய்முறை
துவரம் பருப்பை நீர்விட்டு நன்கு வேகவைத்து மசிக்க வேண்டும். பிறகு மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும். பின்பு சீரகம், மிளகு இரண்டையும் பொன்னிறமாக நெய்யில் வறுத்து பொடி செய்து சூப்பில் போட வேண்டும். நுரை நன்கு பொங்கி வந்ததும் எலுமிச்சம் சாறு சேர்க்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
“எப்போது சாப்பிடாலும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திற்க்கெல்லாம் வயிறு ஆறு மாச கர்ப்பிணி வயிறு போல் வீங்கிக் கொள்கிறது; அப்படி ஒன்றும் அதிகமாக சாப்பிடவில்லை அளவாய்த்தான் சாப்பிட்டேன் ஆனாலும் வயிறு இப்படி ஆகிவிட்டது,” என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமையான மருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் ¼ ஸ்பூன் அளவு சாப்பிட தீரும்.
சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். சீரகத்தைக் கரும்புச்சாறிலும், எலுமிச்சைச்சாறிலும் இஞ்சிசாரிலும் ஒவ்வொன்றும் மூன்று நாளென, சுட்டெரிக்கும்படி வர இருக்கும் வெயில் காலத்தில் வைத்து எடுத்து அந்த சாறு ஊறிய பொடியை நன்கு மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சீரகச் சூரணம், பித்த தலைவலி எனும் மைக்ரேனுக்கு அருமையான மருந்து.
சீரகத்தில் இரும்பு சத்தும், மங்கனீசிய சத்தும் நிறைந்து உள்ளன. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் பிரண வாயுவை நம் உடலில் உள்ள செல்களுக்கு அளித்து புத்துணர்ச்சியளிக்கின்றது.
சீரகத்திலுள்ள தைமோலின் வயிற்றுப்பூச்சிகளை கொல்லவல்லது. செப்டிக் மருந்தாகும். சீழையும், கிருமியையும் போக்கவல்லது.
தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் கால் ஸ்பூன் சீரகத்தைத் தூள் செய்து கலந்த நீரை பருகினால் தொற்று நோய்கள் வராமல் தடுக்கலாம். இது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் போல் பாதுகாப்பானது.