சோம்பு:-
அஞ்சரைப் பெட்டிக்குள்ளேயே ஆயிரம் மருந்துகள் உண்டு. அந்தளவிற்கு நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
வீட்டுச் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் சோம்பு, தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இது பூண்டு வகையைச் சார்ந்தது. இலை, வேர் மற்றும் விதைகள் மருத்துவ பயன் கொண்டவை. விதைகளில் இரண்டு வகை உண்டு.
பண்டைய வல்லுநர்கள் இத்தாவரத்தினை பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படுத்தியுள்ளனர். மத்திய காலங்களில் இதனை சூனிய செயல்களுக்கு எதிரான தாவரமாக பயன்படுத்தியுள்ளனர்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
இனிப்பு வகை சோம்பில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருட்களான அனிதோள்,பென்கோன்,மெதைல் சவிகோல் உள்ளன. மேலும் ஃபிளவனாய்டுகள், கௌமெரின்கள், ஸ்டீரால்கள் காணப்படுகின்றன. கசப்பு வகைகளில் கூடுதலான ஃபென்கோன் உள்ளது.
ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தும்
கனிகள் வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. மணமுள்ளவை. காய்ச்சல் போக்குவி. மார்பு மற்றும் சிறுநீரக நோய்களில் பயனுள்ளவை. சாறு கண்பார்வையை மேம்படுத்தும். இதன் சூடான கசாயம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப் போக்கினை கட்டுப்படுத்துகிறது.
விதைகள் முக்கியமாக வயிற்று வாயு கோளாறுகள், வயிற்று வலி போக்கவும், வலி நீக்கியாகவும், மன ஆறுதல் தரவும் பயன்படுகின்றன.
குழந்தைகளுக்கு மருந்து
இவற்றின் கசாயம் குழந்தைகளின் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம், ஆகியவற்றைப் போக்குகிறது. பல் முளைத்தல் வலியினையும் போக்கும். விதைகளின் எண்ணெய், குடல்களின் பிடிப்பு வலியை நீக்குகிறது. பேதி மருந்துகளின் கூடுதல் செயல்பாட்டினால் ஏற்படும் பிடிப்பு வலியினை போக்கும்.
இலைகள் சிறுநீர் போக்கு தூண்டுவியாகும். வியர்வையினை அதிகரிக்கும். வேர்கள் பேதி மருந்தாக பயன்படுகின்றன. விதைகளின் வடிநீர் தொண்டைகம்மல் மற்றும் இருமல் போக்குவியாகும். தாய்மார்களின் தாய்ப்பால் அதிகரிக்க உதவுகிறது. மனிதர்களின் வாழ்நாள் அதிகரிக்கவும், எடை குறைவாகவும் பயன்படும் புகழ் பெற்ற தாவரமாக கருதப்படுகிறது.
செரிமானத்தை தூண்டும்
செரிமான சக்தியைத் தூண்ட எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.
குடல்புண் ஆறசாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.
வயிற்றுவலி, வயிற்று பொருமல்அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.
கருப்பை பலம்பெற
கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.
ஈரல் பாதிப்பு நீங்கஉடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.
சுரக் காய்ச்சல்அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.இருமல் இரைப்பு மாறநாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
பசியைத் தூண்டபசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.
சோம்பு என அழைக்கப்படும் பெருஞ்சீரகம் சமையலில் நறுமணப் பொருளாக சேர்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பல் வேறு சத்துப்பொருட்களும் இதில் அடங்கி இருக்கின்றன. உலக அளவில் சிறந்த மூலிகைப் பொருளாக வர்ணிக்கப்படும் அதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்…
தெற்கு ஐரோப்பாவை தாயகமாக கொண்டவை சோம்பு விதைகள். அம்பெல்லிபெரி தாவர குடும்பத்தை சேர்ந்த இதன் அறிவியல் பெயர் போநிகியூலம் வல்காரேவர். மத்திய கிழக்கு பகுதிகள், சீனா, இந்தியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. சோம்பு செடிகள் 2 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
சோம்பு விதைகளில் உடலை வலுப்படுத்தும் சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள், தாதுப் பொருட்கள், வைட்டமின்கள் போன்றவை மிகுந்து காணப்படுகின்றன. பல்வேறு நோய் எதிர்ப்பு பொருட்கள் சோம்பு விதைகளில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவை காயம்பெரோல் மற்றும் குவார்சிட்டின்.
புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கவல்லவை இவை. சோம்பு விதைகளில் எளிதில் கரையக்கூடிய நார்ப் பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. 100 கிராம் விதையில் 39.8 கிராம் அளவிற்கு நார்ச்சத்து காணப்படுகிறது.
இவை உட்கொள்ளும் உணவை எளிதில் செரிக்க வைக்கின்றன. மேலும் மலச்சிக்கலை சீராக்குகிறது. உடலுக்கு வலிவூட்டும் தாதுப் பொருட்களான தாமிரம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவை சிறந்த அளவில் காணப்படுகின்றன.
தாமிரம் தாது, ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்ய உதவுகின்றன. சோம்பு விதைகளில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகிறது. உயிர் அணுக்கள் உற்பத்திக்கும், செரிமானத்திற்கும் இது அவசியம். இதிலுள்ள பொட்டாசியம் தாது, உடற் செல்களை வளவளப்பாக வைத்திருப்பதுடன், இதயத் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகின்றன.
வைட்டமின்- ஏ, இ, சி போன்றவையும், பீ-குழும வைட்டமின்களான தயாமின், பைரோடாக்ஸின், ரிபோபிளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துப்பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன.
சோம்பு விதைகள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு செரிமான சக்தியை அதிகரிக்கவும், வயிற்று வலியை நீக்கவும் சோம்பு கலந்த தண்ணீரை கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.
சோம்பு விதைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய் கை, கால் மூட்டு வலிகளை போக்குவதுடன் மட்டுமில்லாமல் இருமலையும் போக்க வல்லது. மீன், காய்கறி உணவுகள் போன்றவற்றில் செரிமானம் மற்றும் நறுமணத்திற்காக அதிக அளவில் சோம்பு விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. கேக், பிஸ்கட், வெண்ணை, ரொட்டி தயாரிப்பிலும் சோம்பு சேர்க்கப்படுகிறது.
மருத்துவ குணங்கள்:
சோம்பு ஜீரண பாதைக்கு சுறுசுறுப்பு தருகிறது.
அஜீரண வாயுவை நீக்குகிறது.
இரப்பையின் குறைபாடுகளை சரி செய்கிறது.
சோம்புவின் இலையும், விதையும் இரப்பை சம்பந்தமான நோய், சுரம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.
பச்சை இலைகளை வலியுள்ள இடங்களில் ஒற்றடம்தர பயன்படுத்தலாம்.
மூளைக்கு சுறுசுறுப்பு தந்து, ஞாபக சக்தியை அதிகரித்து, கண்ணுக்கு பலன் தரும்.
சோம்பு இலையின் பிழிந்த சாற்றை வெந்நீரில் கலக்கி கண்ணை கழுவும் லோஷனாக பயன்படுத்தலாம்.
அதிக அளவில் உபயோகித்தால் மாதவிடாயை தூண்டிவிடும்.
சோம்பிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் வயிற்றுக் கிருமிகளை ஒழிக்கும்.
பருமனைக் குறைக்கும். குழந்தைகளின் அஜீரணம் போக்கும்.
நீரழிவு நோய்க்கு துணை மருந்தாக சோம்பு பயன்படுகிறது.
சோம்பை இளவறுப்பா வறுத்து பொடித்து 2 கிராம் எடையளவு சர்க்கரை கலந்து, தினம் இருவேளை சாப்பிட வயிற்றுவலி, வயிற்று உப்புசம், செரியாமை, இருமல், இரைப்பு நோய் ஆகியவை குறையும்.
சோம்புக் கஷாயம் 15 முதல் 20 மி.லி அளவு குழந்தைகளுக்குக் கொடுக்க கழிச்சல், வயிற்றுப் பொருமல் நீங்கும்.
சோம்பு, சீரகம், மிளகு சம அளவு சேர்த்து பொடி செய்து பொடியை தேனுடன் சாப்பிட குரல் கம்மல், இரைப்பு, மூக்கில் நீர் பாய்தல் போன்றவை நீங்கும்.
சோம்பு பசியைத் தூண்டும்.
சோம்பு, மல்லி இரண்டையும் இள வறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக பொடித்து நாலு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சி, வடிகட்டி, இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் கலந்து குடிக்க கர்ப்பிணிப் பெண்களின் சூட்டு வலி தீரும்.